Home Tamil போராட்டத்தை காண்பித்தும் தோல்வியடைந்த இலங்கை அணி

போராட்டத்தை காண்பித்தும் தோல்வியடைந்த இலங்கை அணி

Asia Cup 2023

400

ஆசியக் கிண்ண சுபர் 4 சுற்றில் இலங்கை மற்றும் இந்திய அணிகள் மோதியிருந்த போட்டியில் இந்தியா 41 ஓட்டங்களால் வெற்றியினைப் பதிவு செய்திருக்கின்றது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்றிருக்கும் இந்திய கிரிக்கெட் அணி முதலில் துடுப்பாட்டத்தினை தெரிவு செய்திருக்கின்றது. இப்போட்டிக்கான இந்திய அணி ஷர்துல் தாக்கூருக்குப் பதிலாக அக்ஷார் பட்டேலுக்கு வாய்ப்பு வழங்க, இலங்கை மாற்றங்களின்றி களமிறங்கியிருக்கின்றது 

பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய அணி வரலாற்று வெற்றி

இலங்கை XI

பெதும்நிஸ்ஸங்க, திமுத்கருணாரட்ன, குசல்மெண்டிஸ், சதீரசமரவிக்ரம, சரித்அசலன்க, தனன்ஞயடிசில்வா, தசுன்ஷானக்க (தலைவர்), துனித்வெல்லாலகே, மகீஷ்தீக்ஷன, மதீஷபதிரன, கசுன்ராஜித

இந்தியா XI

விராட்கோலி, ரோஹிட்சர்மா (அணித்தலைவர்), சுப்மான்கில், KL ராகுல், இஷான்கிஷான், ஹார்திக்பாண்டியா, அக்ஷார்பட்டேல், ரவீந்திரஜடேஜா, குல்தீப்யாதவ், ஜஸ்பிரிட்பும்ரா, மொஹமட்சிராஜ்

பின்னர் நாணய சுழற்சிக்கு அமைய துடுப்பாட்டத்தை தொடங்கிய இந்திய அணி ரோஹிட் சர்மா, சுப்மான் கில் மூலம் சிறந்த ஆரம்பத்தை பெற்றுக் கொண்டது. அணியின் இரு வீரர்களும் முதல் விக்கெட் இணைப்பாட்டமாக 80 ஓட்டங்களைப் பகிர்ந்த நிலையில் அணியின் முதல் விக்கெட்டாக சுப்மான் கில் துனித் வெல்லாலகேவின் பந்துவீச்சில் போல்ட் செய்யப்பட்டு 19 ஓட்டங்களுடன் ஓய்வறை நடந்தார்.

ஆகஸ்ட் மாதத்திற்கான ஐசிசியின் சிறந்த வீரராக பாபர் அசாம்

இதன் பின்னர் புதிய வீரராக களமிறங்கிய விராட் கோலியின் விக்கெட்டும் அவர் 03 ஓட்டங்கள் மாத்திரம் பெற்ற நிலையில் துனித் வெல்லாலகேவினால் வீழ்த்தப்பட்டது. துனித் தொடர்ந்து இந்திய அணித் தலைவர் ரோஹிட் சர்மாவின் விக்கெட்டினையும் வீழ்த்தினார். அரைச்சதம் கடந்திருந்த ரோஹிட் சர்மா 48 பந்துகளில் 2 சிக்ஸர்கள் மற்றும் 7 பெளண்டரிகள் அடங்கலாக 53 ஓட்டங்களுடன் ஓய்வறை நடந்தார். .

பின்னர் மீண்டும் சுழல்பந்துவீச்சு மூலம் இந்திய வீரர்களுக்கு நெருக்கடி உருவாக்கப்பட்டது. இதனால் அவ்வணி குறுகிய ஓட்ட இடைவெளிகளில் விக்கெட்டுக்களை பறிகொடுத்ததோடு, தொடர்ந்து பகுதிநேர பந்துவீச்சாளராக களம் நுழைந்த சரித் அசலன்கவினை எதிர்கொள்வதிலும் தடுமாற்றம் கண்டது.

போட்டியில் இந்திய அணியின் தடுமாற்றம் தொடர்ந்து காணப்பட்டிருக்க சிறப்பான இணைப்பாட்டம் ஒன்றும் அமையாத நிலையில் இந்திய அணி வீரர்கள் இறுதியில் 49.1 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து 213 ஓட்டங்களை எடுத்தனர்.

இந்திய அணியின் மத்திய வரிசை துடுப்பாட்டம் சார்பில் KL ராகுல் 39 ஓட்டங்களையும், இஷான் கிஷான் 33 ஓட்டங்களையும் பெற்றிருந்தனர்.

இலங்கை அணியின் பந்துவீச்சு சார்பில் துனித் வெல்லாலகே 40 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களை சாய்க்க, சரித் அசலன்க வெறும் 18 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களைச் சுருட்டினார்.

பின்னர் போட்டியின் வெற்றி இலக்கான 214 ஓட்டங்களை அடைய பதிலுக்கு துடுப்பாடிய இலங்கை அணி தொடர்ச்சியாக விக்கெட்டுக்களை பறிகொடுத்ததோடு 41.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 171 ஓட்டங்களை மாத்திரமே எடுத்து போட்டியில் தோல்வி அடைந்தது.

இலங்கை அணியின் துடுப்பாட்டம் சார்பில் அதிகபட்சமாக இறுதிவரை ஆட்டமிழக்காது இருந்து துனித் வெல்லாலகே 42 ஓட்டங்கள் எடுத்திருக்க, தனன்ஞய டி சில்வா 41 ஓட்டங்களைப் பெற்றிருந்தார். இதேநேரம் இந்த இரண்டு வீரர்களும் இலங்கை அணியின் 7ஆம் விக்கெட் இணைப்பாட்டமாக 63 ஓட்டங்களையும் பகிர்ந்திருந்தனர்.

இந்திய அணியின் பந்துவீச்சில் குல்தீப் யாதவ் 43 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களையும், ஜஸ்பிரிட் பும்ரா 02 விக்கெட்டுக்களையும் சாய்த்திருந்தனர். போட்டியின் ஆட்டநாயகனாக இலங்கை அணிக்காக சகலதுறைகளிலும் பிரகாசித்த துனித் வெல்லாலகே தெரிவாகினார்.

போட்டியின் சுருக்கம்

Result


Sri Lanka
172/10 (41.3)

India
213/10 (49.1)

Batsmen R B 4s 6s SR
Rohit Sharma b Dunith Wellalage 53 48 7 2 110.42
Shubman Gill b Dunith Wellalage 19 25 2 0 76.00
Virat Kohli c Dasun Shanaka b Dunith Wellalage 3 12 0 0 25.00
Ishan Kishan c Dunith Wellalage b Charith Asalanka 33 61 1 1 54.10
KL Rahul c & b Dunith Wellalage 39 44 2 0 88.64
Hardik Pandya c Kusal Mendis b Dunith Wellalage 5 18 0 0 27.78
Ravindra Jadedja c Kusal Mendis b Charith Asalanka 4 19 0 0 21.05
Axar Patel c Sadeera Samarawickrama b Mahesh Theekshana 26 36 0 1 72.22
Jasprit Bumrah b Charith Asalanka 5 12 0 0 41.67
Kuldeep Yadav c Dhananjaya de Silva b Charith Asalanka 0 1 0 0 0.00
Mohammed Siraj not out 5 19 0 0 26.32


Extras 21 (b 0 , lb 1 , nb 0, w 20, pen 0)
Total 213/10 (49.1 Overs, RR: 4.33)
Bowling O M R W Econ
Kasun Rajitha 4 0 30 0 7.50
Mahesh Theekshana 9.1 0 41 1 4.51
Dasun Shanaka 3 0 24 0 8.00
Matheesha Pathirana 4 0 31 0 7.75
Dunith Wellalage 10 1 40 5 4.00
Dhananjaya de Silva 10 0 28 0 2.80
Charith Asalanka 9 1 18 4 2.00


Batsmen R B 4s 6s SR
Pathum Nissanka c KL Rahul b Jasprit Bumrah 6 7 1 0 85.71
Dimuth Karunaratne c Shubman Gill b Mohammed Siraj 2 18 0 0 11.11
Kusal Mendis c Suryakumar Yadav b Jasprit Bumrah 15 16 3 0 93.75
Sadeera Samarawickrama st KL Rahul b Kuldeep Yadav 17 31 1 0 54.84
Charith Asalanka c KL Rahul b Kuldeep Yadav 22 35 2 0 62.86
Dhananjaya de Silva c Shubman Gill b Ravindra Jadeja 41 66 5 0 62.12
Dasun Shanaka c Rohit Sharma b Ravindra Jadeja 9 13 1 0 69.23
Dunith Wellalage not out 42 46 3 1 91.30
Mahesh Theekshana c Hardik Pandya b Suryakumar Yadav 2 14 0 0 14.29
Kasun Rajitha b Kuldeep Yadav 1 2 0 0 50.00
Matheesha Pathirana b Kuldeep Yadav 0 2 0 0 0.00


Extras 15 (b 2 , lb 4 , nb 1, w 8, pen 0)
Total 172/10 (41.3 Overs, RR: 4.14)
Bowling O M R W Econ
Jasprit Bumrah 7 1 30 2 4.29
Mohammed Siraj 5 2 17 1 3.40
Hardik Pandya 5 0 14 1 2.80
Kuldeep Yadav 9.3 0 43 4 4.62
Ravindra Jadedja 10 0 33 2 3.30
Axar Patel 5 0 29 0 5.80



>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<