மேஜர் லீக்கில் நுவனிது 5ஆவது சதமடிக்க; அஷான் விக்கெட் மழை

SLC Major League Tournament 2022

108
SLC Major League Tournament 2022

இலங்கை கிரிக்கெட் சபையின் ஏற்பாட்டில் முதல்தர கழகங்களுக்கு இடையில் நடைபெற்று வரும் மூன்று நாட்கள் கொண்ட மேஜர் பிரீமியர் லீக் முதல்தர கிரிக்கெட் தொடரின் ஏழாவது வாரத்துக்கான 12 போட்டிகள் இன்று (30) ஆரம்பமாகின.

இதில் ராகம கிரிக்கெட் கழகத்துக்கு எதிரான போட்டியில் SSC கழகத்தின் இளம் வீரர் நுவனிது பெர்னாண்டோ (126) சதமடித்தார். இம்முறை மேஜர் பிரீமியர் லீக்கில் அவரது 5ஆவது சதம் இதுவாகும்.

அதேபோன்று, சரசென்ஸ் விளையாட்டுக் கழகத்துக்கு எதிரான போட்டியில் NCC கழகத்தின் அஹான் விக்ரமசிங்க (103), நுகேகொட விளையாட்டுக் கழகத்துக்கு எதிரான போட்டியில் பாணந்துறை விளையாட்டுக் கழகத்தின் ரமிந்த விஜேசூரிய (119) ஆகிய இருவரும் சதங்களைக் குவித்தனர்.

இது தவிர துடுப்பாட்டத்தை பொறுத்தமட்டில் 13 அரைச் சதங்கள் முதல் நாளான இன்றைய தினம் பதிவாகியமை குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, கொழும்பு கிரிக்கெட் கழகத்துக்காக விளையாடி வரும் இலங்கை அணியின் அனுபவ வீரரான அஷான் ப்ரியன்ஜன், கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகத்துக்கு எதிரான போட்டியில் 50 ஓட்டங்களுக்கு 8 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

மேலும், தமிழ் யூனியன் கிரிக்கெட் கழகத்தின் திலும் சுதீர (6/71), சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகத்தின லசித் லக்ஷான் (5/57), விமானப்படை விளையாட்டுக் கழகத்தின் கயான் சிறிசோம (5/56) ஆகிய வீரர்கள் 5 விக்கெட் குவியலைப் பதிவு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

அனைத்துப் போட்டிகளினதும் இரண்டாவது நாள் ஆட்டங்கள் நாளை (01) நடைபெறவுள்ளன.

போட்டியின் சுருக்கம்

NCC கழகம்எதிர்சரசென்ஸ்விளையாட்டுக்கழகம்

NCC கழகம் – 337/7 (91) – அஹான் விக்ரமசிங்க 157*, சஹன் ஆரச்சிகே 61, அம்ஷி டி சில்வா 54*, லஹிரு உதார 28, துஷான் விமுக்தி 4/128, மொஹமட் டில்ஷாத் 2/61

SSC கழகம்எதிர்ராகமகிரிக்கெட்கழகம்

SSC கழகம் – 220/5 (70) – நுவனிது பெர்னாண்டோ 126*, சம்மு அஷான் 38, ரொஷேன் சில்வா 34, நிபுன் மாலிங்க 3/34, சஹன் நாணயக்கார 2/50

செபஸ்டியன்ஸ்கிரிக்கெட்கழகம்எதிர்காலிகிரிக்கெட்கழகம்

செபஸ்டியன்ஸ் கிரிக்கெட் கழகம் – 227/6 (70.1) – சச்சித ஜயதிலக 45*, லொஹான் டி சொய்ஸா 44, சௌராப் துபே 38, ரகு சர்மா 4/60, சந்துன் மதுஷங்க 2/50

Ace Capital கிரிக்கெட்கழகம்எதிர்விமானப்படைவிளையாட்டுக்கழகம்

Ace Capital கிரிக்கெட் கழகம் – 312 (69.2) – லசித் க்ரூஸ்புள்ளே 62, நினாத் காதம் 56, பர்மோத் ஹெட்டிவத்த 49, ஓசத பெர்னாண்டோ 48, கயான் சிறிசோம 5/116, லசந்த ருக்மால் 2/61

விமானப்படை விளையாட்டுக் கழகம் – 20/4 (16.3) – மொஹமட் இர்பான் 4/10

இராணுவவிளையாட்டுக்கழகம்எதிர்நீர்கொழும்புகிரிக்கெட்கழகம்

இராணுவ விளையாட்டுக் கழகம் – 129/6 (39.2) – லக்ஷான் எதிரிசிங்க 51, ஷெஹான் பெர்னாண்டோ 24, அஷான் ரன்திக 23, சனுர பெர்னாண்டோ 3/48

BRC கழகம்எதிர்கொழும்புகிரிக்கெட்கழகம்

BRC கழகம் – 153 (44.2) – லஹிரு சமரகோன் 37, தனால் ஹேமானந்த 25, அஷான் ப்ரியன்ஜன் 8/51, லக்ஷான் சந்தகன் 1/32

கொழும்பு கிரிக்கெட் கழகம் – 116/5 (35) – அஷான் ப்ரியன்ஜன் 34, லசித் அபேரட்ன 30*, கமிந்து மெண்டிஸ் 27, துஷான் ஹேமன்த 2/39

குருநாகல்இளையோர்கிரிக்கெட்கழகம்எதிர்கண்டிசுங்கவிளையாட்டுக்கழகம்

குருநாகல் இளையோர் கிரிக்கெட் கழகம் – 271/3 (82) – தமித் பெரேரா 92, சமீர சந்தமால் 87*, கயான் மனீஷான் 48, சம்பத் பெரேரா 2/44

பாணந்துறைவிளையாட்டுக்கழகம்எதிர்நுகேகொடவிளையாட்டுக்கழகம்

பாணந்துறை விளையாட்டுக் கழகம் – 259/6 (64) – ரமிந்த விஜேசூரிய 119*, தரிந்து கௌஷால் 31, ரொஷான் விஜேநாயக 26, கைசர் அஷ்ரப் 3/98, சஹன் நாணயக்கார 2/50

களுத்துறைநகரகழகம்எதிர்பொலிஸ்விளையாட்டுக்கழகம்

களுத்துறை நகர கழகம் – 97/3 (34.3) – யெசித் ரூபசிங்க 42, நிபுன் கமகே 23, நளின் ப்ரியதர்ஷன 2/21

முவர்ஸ்கிரிக்கெட்கழகம்எதிர்கோல்ட்ஸ்கிரிக்கெட்கழகம்

முவர்ஸ் கிரிக்கெட் கழகம் – 126 (38.5) – பசிந்து சூரியபண்டார 46, அதீஷ திலன்சன 19, துனித் வெல்லாலகே 4/32, ஜெஹான் டேனியல் 3/33,

கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் – 178/4 (40) – சங்கீத் குரே 61*, விஷாத் ரன்திக 54, ப்ரியமால் பெரேரா 43*, மிலான் ரத்நாயக 2/40

சிலாபம்மேரியன்ஸ்கிரிக்கெட்கழகம்எதிர்தமிழ்யூனியன்கிரிக்கெட்கழகம்

சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம் – 191 (58.1) – விஷ்வ சதுரங்க 58, தசுன் செனவிரட்ன 28, கசுன் விதுர 24, திலும் சுதீர 6/71, ரவிந்து பெர்னாண்டோ 3/76

தமிழ் யூனியன் கிரிக்கெட் கழகம் – 155/9 (34.2) – கமேஷ் நிர்மால் 61*, நவோத் பரணவிதான 24, ரவிந்து பெர்னாண்டோ 20, லசித் லக்ஷான் 5/57, ஸ்வப்னில் கூகலே 3/55

ப்ளும்பீல்ட்கிரிக்கெட்கழகம்எதிர்கடற்படைவிளையாட்டுக்கழகம்

ப்ளும்பீல்ட் கிரிக்கெட் கழகம் – 149/1 (40) – ஹஸ்னைன் பொக்ஹாரி 86*, யொஹான் டி சில்வா 61*

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<