SSC கழகத்துக்காக தொடர்ச்சியாக 4ஆவது சதமடித்த நுவனிது பெர்னாண்டோ

SLC Major League Tournament 2022

161

இலங்கை கிரிக்கெட் சபையின் ஏற்பாட்டில் நடைபெற்றுவரும் முதல்தர கழகங்களுக்கிடையிலான மூன்று நாட்கள் கொண்ட கிரிக்கெட் தொடரின் நான்காவது வாரத்துக்கான 12 போட்டிகள் இன்று (09) ஆரம்பமாகின.

களுத்துறை நகர கழகத்துக்கு எதிரான போட்டியில் SSC கழகத்தின் மனோஜ் சரத்சந்த்ர மற்றும் நுவனிது பெர்னாண்டோ ஆகிய இருவரும் சதமடித்து அசத்தியிருந்தனர். இதில் நுவனிது பெர்னாண்டோ இம்முறை மேஜர் பிரீமியர் லீக்கில் தனது 4ஆவது சதத்தைப் பூர்த்தி செய்தார்.

அதேபோன்று, நுகேகொட விளையாட்டுக் கழகத்தின் முர்தசா த்ருக்வாலா, சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகத்தின் கௌரவ் ஜதார் ஆகிய இருவரும் சதங்களைக் குவிக்க, NCC கழகத்தின் சந்துன் வீரக்கொடி 95 ஓட்டங்களைக் குவித்து சதமடிக்கும் வாய்ப்பை 5 ஓட்டங்களால் தவறவிட்டார்.

இது தவிர துடுப்பாட்டத்தை பொறுத்தமட்டில் 18 அரைச் சதங்கள் போட்டிகளின் முதல் நாளான இன்றைய தினம் பதிவாகியமை குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, கொழும்பு கிரிக்கெட் கழகத்துக்காக விளையாடி வரும் இலங்கை டெஸ்ட் அணியின் முன்னணி வேகப் பந்துவீச்சாளர்களில் ஒருவரான விஷ்வ பெர்னாண்டோ, கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகத்துக்கு எதிரான போட்டியில் 5 விக்கெட் குவியலைப் பதிவு செய்தார்.

மேலும், விமானப்படை விளையாட்டுக் கழகத்தின் கயான் சிறிசோம, இராணுவ விளையாட்டுக் கழகத்தின கௌமால் நாணயக்கார, பதுரெலிய விளையாட்டுக் கழகத்தின் சலன டி சில்வா மற்றும் செபஸ்டியன்ஸ் கிரிக்கெட் கழகத்தின் தரிந்து ரத்நாயக ஆகிய வீரர்கள் 5 விக்கெட் குவியலைப் பதிவு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

போட்டியின் இரண்டாவது நாள் ஆட்டம் நாளை (10) நடைபெறும்.

போட்டியின் சுருக்கம்

SSC கழகம் எதிர் களுத்துறை நகர கழகம்

SSC கழகம் – 394/5 (88) – மனோஜ் சரத்சந்த்ர 110*, நுவனிது பெர்னாண்டோ 100, லக்ஷித மானசிங்க 86, சம்மு அஷான் 73, தேஷான் செனவிரட்ன 3/61

காலி கிரிக்கெட் கழகம் எதிர் கண்டி சுங்க விளையாட்டுக் கழகம்

காலி கிரிக்கெட் கழகம் – 178/8 (90) – கவிந்து எதிரவீர 49*, டில்ஷான் காஞ்சன 24, மெதுஷன் திலின 4/50, ரவீந்த்ர கருணாரட்ன 2/33

குருநாகல் இளையோர் கிரிக்கெட் கழகம் எதிர் லங்கன் கிரிக்கெட் கழகம்

குருநாகல் இளையோர் கிரிக்கெட் கழகம் – 306 (83) – தனுஷ்க தர்மசிறி 58, தமித் பெரேரா 56, தினுஷ்க மாலன் 72, லஹிரு ஜயரட்ன 24, மிரங்க விக்ரமகே 3/37, ரஜீவ வீரசிங்க 3/75, யசிரு ரொட்றிகோ 2/54, சந்துன் அபேரட்ன 2/58

லங்கன் கிரிக்கெட் கழகம் – 5/1 (1.3)

நுகேகொட விளையாட்டுக் கழகம் எதிர் ACE கெபிடல் கிரிக்கெட் கழகம்

நுகேகொட விளையாட்டுக் கழகம் – 295/8 (89.2) – முர்தசா த்ருக்வாலா 123, சுவத் மெண்டிஸ் 63, அரவிந்த ப்ரமேரட்ன 35, ரொஷான் ஜயதிஸ்ஸ 2/66, சிதும் ஜயசேகர 2/70

BRC கழகம் எதிர் ராகம கிரிக்கெட் கழகம்

BRC கழகம் – 160 (47.1) – மாலிந்த ஜயோத் 44, லஹிரு சமரகோன் 30, திலகரட்ன சம்பத் 24, எஷான் மாலிங்க 4/39, ஜனித் லியனகே 3/33, கல்ஹார சேனாரட்ன 2/25

ராகம் கிரிக்கெட் கழகம் – 134/2 (42) – ஜனித் லியனகே 50*, சமிந்த பெர்னாண்டோ 35, நிஷான் மதுஷ்க 30*, துவிந்து திலகரட்ன 2/28

தமிழ் யூனியன் கிரிக்கெட் கழகம் எதிர் விமானப்படை விளையாட்டுக் கழகம்

தமிழ் யூனியன் கிரிக்கெட் கழகம் – 345 (89.5) – ரவிந்து பெர்னாண்டோ 67, நவோத் பரணவிதான 61, திலும் சுதீர 52, ரொன் சந்த்ரகுப்த 46, கயான் சிறிசோம 5/135, துலான்ஜன மெண்டிஸ் 3/71

NCC கழகம் எதிர் இராணுவ விளையாட்டுக் கழகம்

NCC கழகம் – 282 (69.4) – சந்துன் வீரக்கொடி 95, லஹிரு உதார 59, நிபுன் ரன்சிக 25, வினுக ரூபசிங்க 25, கௌமால் நாணயக்கார 5/76

இராணுவ விளையாட்டுக் கழகம் – 6/0 (5)

சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம் எதிர் சரசென்ஸ் விளையாட்டுக் கழகம்

சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம் – 251/5 (90) – கௌரவ் ஜதார் 110*, அநுக் ஜொடின் 74, சந்துன் மெண்டிஸ் 2/81

கடற்படை விளையாட்டுக் கழகம் எதிர் பதுரெலிய விளையாட்டுக் கழகம்

கடற்படை விளையாட்டுக் கழகம் – 190 (67.4) – லஹிரு ஜயகொடி 46, அசந்த சிங்கப்புலி 38, சஹன் கோசல 34, சலன டி சில்வா 5/84, பர்விஸ் ரசூல் 4/70

பதுரெலிய விளையாட்டுக் கழகம் – 92/2 (22) – மலிந்து மதுரங்க 45, அலங்கார அசங்க சில்வா 26*

கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் எதிர் கொழும்பு கிரிக்கெட் கழகம்

கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் – 125 (40.2) – தனன்ஜய லக்ஷான் 30, சங்கீத் குரே 21, ஹஷான் துமிந்து 20, விஷ்வ பெர்னாண்டோ 5/36, மாலிந்த புஷ்பகுமார 3/22

கொழும்பு கிரிக்கெட் கழகம் – 139/6 (39) – மினோத் பானுக 68, கவிஷ்க அன்ஜுல 2/42, சங்கீத் குரே 2/43

பாணந்துறை விளையாட்டுக் கழகம் எதிர் ப்ளும்பீல்ட் கிரிக்கெட் கழகம்

பாணந்துறை விளையாட்டுக் கழகம் – 292/4 (90) – பார்த் பலாவத் 96, லக்ஷான் ரொட்றிகோ 51*, அபிஷேக் குப்தா 48, பவன் டி சில்வா 46, ஹஸ்னைன் பொக்ஹாரி 2/61

பொலிஸ் விளையாட்டுக் கழகம் எதிர் செபஸ்டியன்ஸ் கிரிக்கெட் கழகம்

பொலிஸ் விளையாட்டுக் கழகம் – 107 (36.4) – லஹிரு தியன்த 24, சுபுன் மதுஷங்க 22, தரிந்து ரத்நாயக 7/47, சாமிக எதிரிசிங்க 2/36

செபஸ்டியன்ஸ் கிரிக்கெட் கழகம் – 164/3 (49) – மானல்கர் டி சில்வா 72*, அக்ஷ்தீப் நாத் 71, லஹிரு தியன்த 2/35

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<