மேஜர் பிரீமியர் லீக்கில் துடுப்பாட்டத்தில் பிரகாசித்த மெதிவ்ஸ், திக்வெல்ல

SLC Major League Tournament 2022

549

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர்களான அஞ்செலோ மெதிவ்ஸ் மற்றும் நிரோஷன் திக்வெல்ல தத்தமது கழகங்களுக்காக முதல் போட்டியில் களமிறங்கியிருந்தனர். இதில் SSC கழகத்துக்கு எதிரான போட்டியில் கோல்ட்ஸ் கழகத்துக்காக ஆடிய அஞ்செலோ மெதிவ்ஸ் 61 ஓட்டங்களையும், நுகேகொட விளையாட்டுக் கழகத்துடனான போட்டியில் NCC கழகத்துக்கு ஆடிய நிரோஷன் திக்வெல்ல 88 ஓட்டங்களையும் குவித்தனர்.

இதனிடையே, இலங்கை டெஸ்ட் அணியின் முன்னணி சுழல் பந்துவீச்சாளரும், NCC கழகத்துக்காக விளையாடி வருகின்ற லசித் எம்புல்தெனிய நுகேகொட விளையாட்டுக் கழகத்துக்கு எதிரான போட்டியில் முதல் இன்னிங்ஸில் 3 விக்கெட்டுகளையும், இரண்டாவது இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளையும் வீழ்த்தியிருந்தார்.

அதேபோன்று, NCC கழகத்துக்காக துடுப்பாட்டத்தில் பிரகாசித்த சந்துன் வீரக்கொடி சதம் கடந்து 165 ஓட்டங்களைக் குவித்தார்.

மறுபுறத்தில் நிமேஷ் விமுக்தியின் சகலதுறை ஆட்டத்தால் கடற்படை விளையாட்டுக் கழகத்துக்கு எதிரான போட்டியில் பாணந்துறை விளையாட்டுக் கழகம் இன்னிங்ஸ் மற்றும் 90 ஓட்டங்களால் வெற்றியீட்டியது. பாணந்துறை விளையாட்டுக் கழகத்தின் சுழல் பந்துவீச்சு சகலதுறை வீரரான நிமேஷ் விமுக்தி துடுப்பாட்டத்தில் 107 ஓட்டங்களையும், பந்துவீச்சில் முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளையும், இரண்டாவது இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளையும் வீழ்த்தி பிரகாசித்திருந்தார்.

சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகத்தின் அனுஜ் ஜொடின் (121), குருநாகல் இளையோர் கிரிக்கெட் கழகத்தின் சனோஜ் தர்ஷிக (142), காலி கிரிக்கெட் கழகத்தின் வினுர துல்சர (102), இராணுவ விளையாட்டுக் கழகத்தின் மஹேஷ் குமார (109), லங்கன் கிரிக்கெட் கழகத்தின் கசுன் அபேரட்ன (101) மற்றும் சரசென்ஸ் விளையாட்டுக் கழகத்தின் மிலிந்த சிறிவர்தன (110) ஆகியோர் சதங்களைக் குவித்து அசத்தியிருந்தனர்.

பந்துவீச்சைப் பொறுத்தமட்டில் முவர்ஸ் விளையாட்டுக் கழகத்தின் சனுக டில்ஷான் (5/86), ப்ளும்பீல்ட் கிரிக்கெட் கழகத்தின் ஹஸ்னைன் பொக்ஹாரி (5/48), காலி கிரிக்கெட் கழகத்தின் ரகு சர்மா (7/140) ஆகிய வீரர்கள் 5 விக்கெட் குவியலைப் பெற்றுக் கொண்டனர்.

இதேவேளை, மேஜர் பிரீமியர் லீக் தொடரின் எட்டாவது வாரத்தில் முவர்ஸ் விளையாட்டுக் கழகம், ப்ளும்பீல்ட் கிரிக்கெட் கழகம், கொழும்பு கிரிக்கெட் கழகம் மற்றும் கண்டி சுங்க விளையாட்டுக் கழகம் என்பன வெற்றிகளைப் பதிவு செய்தன.

போட்டியின் சுருக்கம்

BRC கழகம் எதிர் முவர்ஸ் விளையாட்டுக் கழகம்

BRC கழகம் – 231 (67.1) – லியோ ப்ரான்சிஸ்கோ 53, டிலான் ஜயலத் 38, துஷான் ஹேமன்த 32, திலகரட்ன சம்பத் 20, மிலான் ரத்நாயக 3/55, ரமேஷ் மெண்டிஸ் 3/64, சானுக டில்ஷான் 3/64

முவர்ஸ் விளையாட்டுக் கழகம் – 394 (88.5) – ரமேஷ் மெண்டிஸ் 119, சொஹான் டி லிவேரா 73, அதீஷ திலன்சன 54, துஷான் ஹேமன்த 5/85, திலகரட்ன சம்பத் 2/32, துவிந்து திலகரட்ன 2/79

BRC கழகம் – 286 (74.5) – தனால் ஹேமானந்த 66, லஹிரு சமரகோன் 54, துஷான் ஹேமன்த 44, சனுக டில்ஷான் 5/86, ரமேஷ் மெண்டிஸ் 4/124

முவர்ஸ் விளையாட்டுக் கழகம் – 125/3 (20.5) – மொஹமட் சமாஸ் 50*, அதீஷ திலன்சன 20

முடிவு – முவர்ஸ் விளையாட்டுக் கழகம் 7 விக்கெட்டுகளால் வெற்றி

விமானப்படைவிளையாட்டுக்கழகம்எதிர்ப்ளும்பீல்ட்கிரிக்கெட்கழகம்

விமானப்படை விளையாட்டுக் கழகம் – 273 (106.3) – சச்சின் ஜயவர்தன 59, ஆதித்ய சிறிவர்தன 51, கசுன் ஏகநாயக 48, திலீப ஜயலத் 3/21, ஹஸ்னைன் பொக்ஹாரி 3/55

ப்ளும்பீல்ட் கிரிக்கெட் கழகம் – 232 (75.4) – சரித குமாரசிங்க 50, கஜித கொடுவேகொட 50. கயான் சிறிசோம 5/90, லசந்த ருக்மால் 2/51

விமானப்படை விளையாட்டுக் கழகம் – 185 (47.4) – ரொஸ்கோ தட்டில் 42, மிஷேன் சில்வா 24, ஹஸ்னைன் பொக்ஹாரி 5/48, திலீப ஜயலத் 3/39

ப்ளும்பீல்ட் கிரிக்கெட் கழகம் – 227/6 (32.4) – கஜித கொடுவேகொட 68, யொஹான் டி சில்வா 56, நிமன்த மதுஷங்க 42, லசந்த ருக்மால் 3/64

முடிவு – ப்ளும்பீல்ட் கிரிக்கெட் கழகம் 4 விக்கெட்டுகளால் வெற்றி

செபஸ்டியன்ஸ்கிரிக்கெட்கழகம்எதிர்கொழும்புகிரிக்கெட்கழகம்

செபஸ்டியன்ஸ் கிரிக்கெட் கழகம் – 151 (53.3) – லொஹான் டி சொய்ஸா 57, மானல்கர் டி சில்வா 28, ரையன் பெர்னாண்டோ 21, சொனால் தினூஷ 5/22, கமிந்து மெண்டிஸ் 3/27

கொழும்பு கிரிக்கெட் கழகம் – 481 (113.5) – கமிந்து மெண்டிஸ் 122, மினோத் பானுக 83, அஷான் ப்ரியன்ஜன் 64, லக்ஷான் சந்தகன் 47, தரிந்து ரத்நாயக 6/163, அக்தாப் காதர் 2/44

செபஸ்டியன்ஸ் கிரிக்கெட் கழகம் – 76 (28.5) – ரையன் பெர்னாண்டோ 33, சொனால் தினூஷ 4/47, அசித பெர்னாண்டோ 3/08, சமிந்த விஜேசிங்க 2/19

முடிவு – கொழும்பு கிரிக்கெட் கழகம் இன்னிங்ஸ் மற்றும் 254 ஓட்டங்களால் வெற்றி

பாணந்துறைவிளையாட்டுக்கழகம்எதிர்கடற்படைவிளையாட்டுக்கழகம்

பாணந்துறை விளையாட்டுக் கழகம் – 433 (99.3) – நிமேஷ் விமுக்தி 107, சனுக துலாஜ் 86, அபிஷேக் குப்தா 61, பவன் டி சில்வா 50, சச்சித்ர சேனாநாயக 4/95, டிலங்க அவ்வார்ட் 2/86, நவீன் கவிகார 2/95

கடற்படை விளையாட்டுக் கழகம் – 196 (49) – கவிந்து ரணசிங்க 59, அதீஷ நாணயக்கார 39, சஹன் கோசல 22, நிமேஷ் விமுக்தி 5/73, கோஷான் தனுஷ்க 4/70

கடற்படை விளையாட்டுக் கழகம் – 124 (28.3) F/O – வினோத் பெரேரா 35, சஹன் கோசல 34, கோஷான் தனுஷ்க 5/39, நிமேஷ் விமுக்தி 5/53

முடிவு – பாணந்துறை விளையாட்டுக் கழகம் இன்னிங்ஸ் மற்றும் 90 ஓட்டங்களால் வெற்றி

களுத்துறைநகரகழகம்எதிர்கண்டிசுங்கவிளையாட்டுக்கழகம்

களுத்துறை நகர கழகம் – 142 (50.2) – நிபுன கமகே 46, சதீஷ் ஜயவர்தன 29, சச்சித்ர பெரேரா 6/18, இமேஷ் உதயங்க 2/41

கண்டி சுங்க விளையாட்டுக் கழகம் – 265 (83.4) – இமேஷ் உதயங்க 79, ரஷ்மிக மதுஷங்க 46, ஹர்ஷ ராஜபக்ஷ 45, சுதார தக்ஷின 6/81, தரிந்து சிறிவர்தன 2/25

களுத்துறை நகர கழகம் – 181 (56.1) – மாதவ நிமேஷ் 91, யொஹான் மெண்டிஸ் 20, இமேஷ் உதயங்க 4/41, சச்சித்ர பெரேரா 3/72

கண்டி சுங்க விளையாட்டுக் கழகம் – 62/1 (13) – ஹரிந்து ஜயசேகர 33*,

முடிவு – கண்டி சுங்க விளையாட்டுக் கழகம் 9 விக்கெட்டுகளால் வெற்றி

SSC கழகம்எதிர்கோல்ட்ஸ்கிரிக்கெட்கழகம்

SSC கழகம் – 444/9d (126.2) – நிபுன் தனன்ஜய 201, ரொஷேன் சில்வா 96, மனோஜ் சரத்சந்த்ர 68, துனித் வெல்லாலகே 8/152

கோல்ஸ்ட் கிரிக்கெட் கழகம் – 274 (71.3) – அஞ்செலோ மெதிவ்ஸ் 61, தனன்ஜய லக்ஷான் 56, ஹஷான் துமிந்து 49, நிசல தாரக 5/90, கசுன் ராஜித 2/55

கோல்ஸ்ட் கிரிக்கெட் கழகம் – 186/1 (47) – சங்கீத் குரே 100*, ஹஷான் துமிந்து 78

முடிவு – போட்டி சமநிலையில் நிறைவு

நுகேகொடவிளையாட்டுக்கழகம்எதிர் NCC கழகம்

நுகேகொட விளையாட்டுக் கழகம் – 371 (109.5) – ருமேஷ் புத்திக 109, ரனித லியனாரச்சி 70, நவீன் பெர்னாண்டோ 50, தில்ஹார பொல்கம்பொல 32, மதீஷ பத்திரன 4/46, லசித் எம்புல்தெனிய 3/117, அஷைன் டேனியல் 2/75

NCC கழகம் – 489 (85) – சந்துன் வீரக்கொடி 165, நிரோஷன் டிக்வெல்ல 88, கவின் பண்டார 71, அசேல் சிகேரா 61, அஹான் விக்ரமசிங்க 55, ருமேஷ் புத்திக 2/20, சதீஷ ராஜபக்ஷ 2/52, நவீன் பெர்னாண்டோ 2/55, சமிந்த பண்டார 2/125

நுகேகொட விளையாட்டுக் கழகம் – 204/8 (54.3) – சுவத் மெண்டிஸ் 47, ரனித லியனாரச்சி 46, சதீஷ ராஜபக்ஷ 42, லசித் எம்புல்தெனிய 5/98, சஹன் ஆரச்சிகே 2/31

முடிவு – போட்டி சமநிலையில் நிறைவு

பதுரெலியகிரிக்கெட்கழகம்எதிர்சிலாபம்மேரியன்ஸ்கிரிக்கெட்கழகம்

பதுரெலிய கிரிக்கெட் கழகம் – 432 (100.4) – அலங்கார அசங்க சில்வா 127, அனுக் பெர்னாண்டோ 110, சலன டி சில்வா 56, ரனேஷ் சில்வா 30, ரஜிந்த புன்சிஹேவா 3/63, திக்ஷில டி சில்வா 3/64, ஸ்வப்னில் கூகலே 2/55

சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம் – 441/7 (138) – அனுஜ் ஜொடின் 121, கசுன் விதுர 81, ஸ்வப்னில் கூகலே 67, ரவீன் யசஸ் 52, சலன டி சில்வா 3/160, புத்திக சன்ஜீவ 2/138

முடிவு – போட்டி சமநிலையில் நிறைவு

காலிகிரிக்கெட்கழகம்எதிர்குருநாகல்இளையோர்கிரிக்கெட்கழகம்

காலி கிரிக்கெட் கழகம் – 239 (74.2) – சமீன் கன்தனேஆராச்சி 123, கவிந்து எதிரவீர 37, சாலித் பெர்னாண்டோ 34, சகிது விஜேரட்ன 6/46, தினுஷ்க மாலன் 2/42

குருநாகல் இளையோர் கிரிக்கெட் கழகம் – 411/9d (117.1) – சனோஜ் தர்ஷிக 142, கயான் மனீஷான் 70, தினுஷ்க மாலன் 53, ரகு சர்மா 7/140

காலி கிரிக்கெட் கழகம் – 336/5 (70) – வினுர துல்சர 102, சதுர லக்ஷான் 72*, சமீன் கன்தனேஆராச்சி 61, சாலித் பெர்னாண்டோ 37

முடிவு – போட்டி சமநிலையில் நிறைவு

இராணுவவிளையாட்டுக்கழகம்எதிர்தமிழ்யூனியன்கிரிக்கெட்கழகம்

இராணுவ விளையாட்டுக் கழகம் – 212 (47.4) – மஹேஷ் குமார 50, லக்ஷான் எதிரிசிங்க 38, யசோத மெண்டிஸ் 31, ஷிரான் பெர்னாண்டோ 4/75, கவிந்து பத்திரத்னே 3/50, ரவீன் டி சில்வா 2/23

தமிழ் யூனியன் கிரிக்கெட் கழகம் – 200 (54) – நவோத் பரணவிதான 50, ரவிந்து பெர்னாண்டோ 48, அசங்க மனோஜ் 4/81, சீக்குகே பிரசன்ன 2/57

இராணுவ விளையாட்டுக் கழகம் – 338/8d (107.4) – மஹேஷ் குமார 109*, பெதும் பொதேஜு 61, அஷான் ரன்திக 51, ஷிரான் பெர்னாண்டோ 4/87, ரவீன் டி சில்வா 3/82

தமிழ் யூனியன் கிரிக்கெட் கழகம் – 208/5 (37) – ரவிந்து பெர்னாண்டோ 59*, ரொன் சந்த்ரகுப்த 42, சதீர சமரவிக்ரம 34, லக்ஷான் எதிரிசிங்க 2/75, கௌமால் நாணயக்கார 2/94

முடிவு – போட்டி சமநிலையில் நிறைவு

ராகமகிரிக்கெட்கழகம்எதிர்லங்கன்கிரிக்கெட்கழகம்

ராகம கிரிக்கெட் கழகம் – 499/9d (129.3) – தினெத் திமோத்ய 93, அவிஷ்க தரிந்து 90, நிஷான் மதுஷ்க 64, லஹிரு தெவடகே 70, ஜனித் லியனகே 48, கீத் குமார 2/63, கசுன் மதுஷங்க 2/92, ரஜீவ வீரசிங்க 2/102

லங்கன் கிரிக்கெட் கழகம் – 265 (90.4) – கீத் குமார 62, கசுன் அபேரட்ன 54,  தமித சில்வா 55, சஷிக துல்ஷான் 4/92, சன்ஜுல பண்டார 3/71, ஜனித் லியனகே 2/27

லங்கன் கிரிக்கெட் கழகம் – 165/0 (41) – கசுன் அபேரட்ன 101*, தேஷான் டயஸ் 55*

முடிவு – போட்டி சமநிலையில் நிறைவு

சரசென்ஸ் விளையாட்டுக் கழகம் எதிர் நீர்கொழும்பு கிரிக்கெட் கழகம்

சரசென்ஸ் விளையாட்டுக் கழகம் – 235 (82.2) – சிதார கிம்ஹான் 61, நிபுன் கருணாநாயக 74, துஷான் விமுக்தி 60, உபுல் இந்திரசிறி 4/63, சனுர பெர்னாண்டோ 3/44

நீர்கொழும்பு கிரிக்கெட் கழகம் – 241 (80.4) – அஞ்செலோ ஜயசிங்க 79, கெவின் அல்மேதா 75, மொஹமட் டில்ஷாட் 3/55, கவின் டில்ஷான் 3/60, துஷான் விமுக்தி 2/72

சரசென்ஸ் விளையாட்டுக் கழகம் – 246/8d (69) – மிலிந்த சிறிவர்தன 110, ஹஷேன் ராமநாயக 32, நிபுன் கருணநாயக 30*, சிதார கிம்ஹான் 22, உபுல் இந்தரசிறி 4/76, பசிந்து மதுஷான் 2/53

நீர்கொழும்பு கிரிக்கெட் கழகம் – 68/2 (30) – அஞ்செலோ ஜயசிங்க 28*, கெவின் அல்மேதா 25*

முடிவு – போட்டி சமநிலையில் நிறைவு

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<