நீர் விளையாட்டு ராட்சகர்களை சமநிலைப்படுத்திய இலங்கை நீர்ப்பந்தாட்ட அணி

407
Water Polo Day two

தற்பொழுது நடைபெற்று வரும் முதலாவது தெற்காசிய நீர்சார் விளையாட்டு சம்பியன்ஷிப் போட்டிகளில், மகளிருக்கான நீர்ப்பந்தாட்ட போட்டியில் வலிமைமிக்க இந்தியாவுடனான பலப்பரீட்சையின்போது, இலங்கை மகளிர் அணி இறுதி நிமிடங்களின் சிறப்பாக செயற்பட்டு தோல்வியை தவிர்த்து போட்டியை சமநிலைப்படுத்தியது.

அதே நேரம், இந்திய ஆடவர் பிரிவுடனான 3 போட்டிகளை கொண்ட தொடரின் இரண்டாவது போட்டியில் இலங்கை நீர்ப்பந்தாட்ட தேசிய அணி போராடி தோல்வியுற்றது

நேற்று நடைபெற்ற இப்போட்டிகளின் முழு நேரத்தில், இலங்கை இளையோர் ஆடவர் பிரிவுடனான போட்டியில் இந்திய இளையோர் அணி கடின போராட்டத்துக்கு மத்தியில் 6-7 கணக்கில் வெற்றி பெற்றது. அதே சமயம் இலங்கை மகளிர் இளையோர் அணி, இந்திய மகளிர் அணியுடனான போட்டியில் இரண்டு போட்டிகள் கொண்ட போட்டித் தொடரில் கடும் போராட்டத்துக்கு மத்தியில் 12-12 என்ற கணக்கில் போட்டியை சமநிலைப் படுத்தியது

இலங்கை மகளிர் அணியை கொழும்பு விசாக மகளிர் கல்லூரியை சேர்ந்த ஷாலீனா பிரிஸ் தலைமை தாங்கி வழிநடத்தினார். முதல் மூன்று பகுதிகளினதும் முடிவுகளின்போது 1-7 என்ற கணக்கில் இலங்கை முன்னிலை பெற்றிருந்தது

எனினும் இறுதிப் பகுதியில் 24ஆவது நிமிடத்தில் முதல் போட்டியினை சமப்படுத்தும் வகையில் இந்திய வீராங்கனை அனுஷி தாஸ் நீண்ட தூரத்தில் இருந்து கோல் அடித்தார். எனினும் அதற்குப் பதிலடியாக துசாரி ஏகநாயக்க இரண்டு கோல்களை அடுத்தடுத்து அடித்து அசத்தினார். தொடர்ந்து ஷேநேரா டேவிட்டும் கோல் அடிக்க குறுகிய நேரத்தில் இலங்கை இளையோர் அணி மூன்று கோல்களை பெற்றுக்கொண்டது.

ஆச்சரியப்படத்தக்க வகையில் தொடர்ந்து மூன்று கோல்களை அடித்திருந்தாலும், முதல் பகுதி நேரத்தின் போது 4 கோல்களால் இந்தியா முன்னிலை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

இரண்டாம் பகுதி நேரத்தில் முதல் எட்டு நிமிடங்கள் இரண்டு அணிகளும் தடுப்பாட்டத்தில் ஈடுபட்டன. எனினும் துசாரி ஏகநாயக்க, தனக்கு கிடைத்த ஹட்ரிக் அதிஷ்டத்தின் மூலம் அடுத்தடுத்து மூன்று கோல்களை அடித்து, குறிப்பிட்ட பகுதி நேர முடிவுக்கு முன்பாக புள்ளிகளை சமநிலைப் படுத்தினார்.

இலங்கை இளையோர் அணிக்கு அதிஷ்டம் வாய்ந்த, போட்டியின் முன்றாவது பகுதி நேரத்தில் இந்தியா பெற்றுக்கொண்ட இரண்டு கோல்களுக்கு   பதிலடியாக இலங்கை அணி 6 கோல்களை பெற்றுக்கொண்டது. முன்னிலை வீராங்கனை துசாரி ஏகநாயக்கவுக்கு நேர்த்தியான முறையில் ஷாலீனா பிரிஸ் பந்தை பாஸ் செய்ததனால், 6 கோல்களில் 2 கோல்கள் அவரால் பெறப்பட்டன.

மூன்றாவது பகுதி நேரத்தில் இலங்கை அணி முன்னிலை பெற்றிருந்தாலும் வலிமை மிக்க இந்திய அணி, இறுதிப் பாதியில் களைப்படையாமல் தொடர்ந்து 5 கோல்களை அடித்து மொத்தமாக 12 கோல்களை பெற்றுக் கொண்டது.  பதிலடியாக நம்பிக்கை தரகூடிய வகையில் துசாரி ஏகநாயக்க மற்றும் சஷி வீரவர்ண ஆகியோர் தலா ஒரு கோல்களை அடித்து போட்டியை சமநிலைப் படுத்தினர்.

பதக்கங்களை தீர்மானிக்கும் இரண்டாம் போட்டி எதிர்வரும், சனிக்கிழமை (22ஆம் திகதி) காலை 1 மணிக்கு சுகததாச உள்ளக அரங்க நீச்சல் தடாகத்தில் நடைபெறவுள்ளது.

கோல் அடித்தவர்கள்

இலங்கை – துசாரி ஏக்கநாயக்க (6), ஷேனரா டேவிட் (2), சஷி வீரவர்ண (2), நடிஷிக்கா சமரநாயக்க (1), ஷாலீனா பீரிஸ் (1)

இந்தியா – பியலி சந்த்ரா (4), அனுஷி தாஸ் (4), த்ரிஷா (2), கேளயத்திரி மித்ரா (1), பூஜா கேம்பரே (1)


நீர்ப்பந்தாட்ட ஆண்கள் பிரிவு

இலங்கை இளையோர் நீர்ப்பந்தாட்ட அணி இந்திய அணியுடன் சம நிலையில் கோல்களை பெற்றுக்கொண்ட போதும் தீர்க்கமான இறுதி தருணத்தில் வெற்றி பெற முடியாத நிலையில் இந்திய அணி 6-7 என்ற கணக்கில் வெற்றி பெற்று தெற்காசிய நீர்சார் விளையாட்டு சம்பியன்ஷிப் போட்டிகளில், நீர்ப்பந்தாட்ட போட்டியில் தங்கப் பதக்கத்தை வென்றது.

இலங்கை இளையோர் அணியால் சிறந்த ஆரம்பத்தினை பெற்றுக்கொள்ள முடியாமல் போனது. எனினும் கிசல் அசலாராச்சியின் முயற்சியால், இந்தியா ஏற்கனவே அடித்திருந்த மூன்று கோல்களுக்கு பதிலடியாக போட்டியின் முதல் பாதியில் முதலாவது கோல் அடிக்கப்பட்டது. இந்திய அணி சார்பாக சரோங் வைத்யா 2 கோல்களையும், அவரோடு குமரஜித் குப்தா 1 கோலையும் பெற்றுக் கொடுத்தனர்.

இரண்டாம் பகுதி நேரத்தில் இவ்விரு அணிகளும் தலா இரண்டு கோல்களை பெற்றுக்கொண்டன. இலங்கை அணித் தலைவர் அசேன் பிரான்சிஸ் மற்றும் இசுர கந்தவேல இறுக்கமான இந்திய தடுப்பு வீரர்களை ஊடுறுத்து சென்று இவ்விரு கோல்களையும் போட்டனர். இறுக்கமான தருணத்தில் எழுச்சி பெற்ற இலங்கை அணி இவ்விரு கோல்களை போட்ட நேரத்தில் இந்திய அணியால் ஒரு கோலை மாத்திரமே போட முடிந்தது.

அடுத்த பாதி நேரத்தில், சவிந்த திசாநாயக்க மற்றும் இசுர கந்தவேல ஆகியோரின் கோல்களினால் குறித்த பாதி தீர்க்கமான பாதியாக அமையப் பெற்றது. எனினும் இலங்கை அணியால் (5-6) முன்னிலை பெற முடியாமல் போனது.

இறுதிப் பகுதி நேரத்தில் இலங்கை அணிக்கு கிசல் அசலாராச்சியினால் ஒரு கோல் போடப்பட்டது. அதே நேரம், இந்திய அணியின் பாகேஷ் குல்ஹா இறுதியாக மேலும் ஒரு கோலை போட்டு 7-6 என்ற கோல்கள் கணக்கில் வெற்றி கொண்டு, தொடரை 2-௦ என்ற ரீதியில் தொடரை வென்றது

இந்திய அணி திறமையாக தாக்குதல் நடத்திய அதே நேரத்தில், இலங்கை அணி சார்பாக மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சிறந்த வீரர் சசிந்த் ஜெயதிலக்கவை ஒரு தடவையேனும் தாக்குதல் நடத்த விடாமல் தடுத்தாடியது குறிப்பிடத்தக்கது.

கோல் அடித்தவர்கள்

இந்தியா – சரோங் வைத்யா (3), பாகேஷ் குல்ஹா, வாஷ் மகேண்டல , கார்த்திக் சந்திரதாஸ், குமரஜித் குப்தா

இலங்கை – கிசல் அசசலாராச்சி (2), இசுர கந்தவேல (2), சவிந்த திசாநாயக்க, அசேன் பிரான்சிஸ்