சகல துறையிலும் பிரகாசித்த செஹான் ஜயசூரிய; அஞ்செலோ பெரேராவுக்கு சதம்

190

இலங்கை கிரிக்கெட் சபை ஏற்பாட்டில் (SLC) பிரிவு A கிரிக்கெட் கழகங்களுக்கு இடையிலான மேஜர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது வாரத்துக்கான 6 போட்டிகள் இன்றைய தினம் (07)ஆரம்பமாகியிருந்தன.

பிரீமியர் லீக் தொடரில் முதல் வெற்றியை சுவைத்த SSC

இலங்கை கிரிக்கெட் சபையினால் நடத்தப்படும் மூன்று நாட்கள் கொண்ட பிரீமியர்…

இன்றைய ஆரம்ப தினத்தை பொருத்தவரை மேஜர் பிரீமியர் லீக் தொடரில் அறிமுகமாகியுள்ள நீர்கொழும்பு கிரிக்கெட் கழக அணி, செஹான் ஜயசூரியவின் சகலதுறை பிரகாசிப்பின் ஊடாக, பி.ஆர்.சி. அணியை நெருக்கடிக்கு உள்ளாக்கியுள்ளது. அதேநேரம், இன்றைய போட்டிகளில் துடுப்பாட்ட வீரர்கள் அதிகமான ஆதிக்கத்தை செலுத்தியிருந்தனர்.

செரசன்ஸ் விளையாட்டுக் கழகம் எதிர் எஸ்.எஸ்.சி. (SSC)

இவ்விரு அணிகளுக்கு இடையில் இன்று ஆரம்பமான போட்டியில், கமிந்து கனிஷ்க மற்றும் சாலிய சமன் ஆகியோரின் அரைச்சதங்களின் உதவியுடன் செரசன்ஸ் விளையாட்டுக் கழகம் இன்றைய ஆட்டநேர முடிவில் 293 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது.

Photos: SSC v Saracens SC | Major League Tier A Tournament 2017/2018

போட்டியின் சுருக்கம்

செரசன்ஸ் விளையாட்டுக் கழகம் – 293/10 (88.1), கமிந்து கனிஷ்க  95, சாலிய சமன் 81, தரிந்து ரத்நாயக்க 57/3, கசுன் மதுசங்க 53/2, சச்சித்ர சேனாநாயக்க – 48/2

கொழும்பு கிரிக்கெட் கழகம் எதிர் கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம்

கொழும்பு கிரிக்கெட் கழகத்துக்கு எதிரான இன்றைய போட்டியில், முதலில் துடுப்பெடுத்தாடிய கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் விசாட் ரந்திகவின் போராட்டமான அரைச்சத்தின் உதவியுடன் முதல் இன்னிங்ஸில் 225 ஓட்டங்களுக்கு சுருண்டுள்ளது. இதேவேளை, தங்களுடைய முதல் இன்னிங்ஸை ஆரம்பித்துள்ள பி.ஆர்.சி. அணி விக்கெட்டிழப்பின்றி 29 ஓட்டங்களை பெற்றுள்ளது.

Photos: Colts v CCC | Major League Tier A Tournament 2018/19

போட்டி சுருக்கம்

கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் – 225/10, விசாட் ரந்திக 68, நிசல் தாரக 26, மலிந்த புஷ்பகுமார 86/6, அஷான் பிரியன்ஜன் 32/2

கொழும்பு கிரிக்கெட் கழகம்  – 29/0 (6)


இலங்கை இராணுவ விளையாட்டுக் கழகம் எதிர் இலங்கை துறைமுக அதிகாரசபை கிரிக்கெட் கழகம்

இலங்கை துறைமுக அதிகாரசபை கிரிக்கெட் கழகத்துக்கு எதிராக இந்த பருவகாலத்தின் முதல் போட்டியில் விளையாடிய இலங்கை இராணுவப்படை அணி, துஷான் விமுக்தி ஆட்டமிழக்காமல் பெற்றுக்கொடுத்துள்ள சதத்தின் உதவியுடன் 285 ஓட்டங்களை பெற்றுள்ளது.

Photo Album : Negombo CC Vs. BRC | Major League Tier A Tournament 2018/19

போட்டி சுருக்கம்

இலங்கை இராணுவ விளையாட்டுக் கழகம் – 285/5 (88), துஷான் விமுக்தி 136*, லக்ஷான் எதிரிசிங்க 81, சமிந்த பண்டார 51/4

Photo Album – CCC v SSC | Major League Tier A Tournament 2018/19

சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம் எதிர் றாகம கிரிக்கெட் கழகம்

கட்டுநாயக்க MCG மைதானத்தில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில், சிலாபம் மேரியன்ஸ் அணி சார்பில் முதல் போட்டியில் சிறப்பாக ஆடிய அர்ஷ குரே இந்தப் போட்டியிலும் அரைச்சதம் விளாசியதுடன், ஓசத பெர்னாண்டோ அபார சதத்தை பதிவுசெய்தார். இதன்படி, அந்த அணி 281 ஓட்டங்களை பெற, தங்களுடைய முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த றாகம கிரிக்கெட் கழகம் 70 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்துள்ளது.

போட்டி சுருக்கம்  

சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம்  – 281/10 (60.2), ஓசத பெர்னாண்டோ 100, அர்ஷ குரே 95, அமில அபோன்சோ 86/5, செஹான் நாணயகார 45/4

றாகம கிரிக்கெட் கழகம் – 70/2 (27), ஜனித் லியனகே 31, நிமேஷ் விமுக்தி 19/2


தமிழ் யூனியன் கிரிக்கெட் மற்றும் மெய்வல்லுனர் கழகம் எதிர் என்.சி.சி

என்.சி.சி. அணிக்காக இம்முறை சிறந்த முறையில் துடுப்பெடுத்தாடி வரும் அணித் தலைவர் அஞ்செலோ பெரேரா இன்றைய தினம் அவரது இரண்டாவது சதத்தை பதிவுசெய்துள்ளார். இவரின் அபார சதத்தின் உதவியுடன் என்.சி.சி. அணி 296 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

போட்டி சுருக்கம்

என்.சி.சி – 296/10, (83.2), அஞ்செலோ பெரேரா 124, உபுல் தரங்க 37, சச்சித்ர சேரசிங்க 66/3

தமிழ் யூனியன் கிரிக்கெட் கழகம் – 18/1 (4)

பி.ஆர்.சி. எதிர் நீர்கொழும்பு கிரிக்கெட் கழகம்

இலங்கையின் முதற்தர கழகங்களுக்கான மேஜர் பிரீமியர் லீக் தொடரில் முதன்முறையாக விளையாடி வரும் நீர்கொழும்பு கிரிக்கெட் கழகம், சிறந்த பந்துவீச்சு மற்றும் துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தி பி.ஆர்.சி. அணிக்கு நெருக்கடியை கொடுத்து வருகின்றது.

போட்டி சுருக்கம்

பி.ஆர்.சி. – 221/10, (72.4), ஹஷேன் ராமநாயக்க 66, டேசான் டயஸ் 42, செஹான் ஜெயசூரிய 56/4, உபுல் இந்ரசிறி 49/3

நீர்கொழும்பு கிரிக்கெட் கழகம் – 82/0 (15), செஹான் ஜயசூரிய 47*, லசித் குரூஸ்புல்லே 33*

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<