துடுப்பாட்டத்தில் அசத்திய பெதும் நிஸ்ஸங்க, சதீர சமரவிக்ரம

0

இலங்கை கிரிக்கெட் சபை, இலங்கையின் உள்ளூர் கிரிக்கெட் கழகங்கள் இடையே நடாத்தும் அழைப்பு T20 கிரிக்கெட் தொடரின் நான்காம் நாளுக்குரிய போட்டிகள் இன்று (10) நிறைவடைந்தன. 

இன்றைய நாளில் மொத்தமாக 12 போட்டிகள் நடைபெற்றதோடு, இன்றைய போட்டிகளிலும் இளம் வீரர்கள் திறமையினை வெளிப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அஷேன் பண்டார கன்னி சதம்; இராணுவப்படைக்காக ஜொலித்த சந்திமால்

இலங்கை கிரிக்கெட் சபை, உள்ளூர்….

அண்மைக்காலமாக இலங்கையின் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகள் மூலம் வளர்ந்துவருகின்ற துடுப்பாட்ட நட்சத்திரமான பெத்தும் நிஸங்க NCC அணிக்காக அசத்தல் துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தியிருந்தார். மொத்தமாக 93 ஓட்டங்கள் பெற்ற அவர், அஞ்செலோ பெரேரா ஆட்டமிழக்காமல் பெற்ற 70 ஓட்டங்களுடன் இணைந்து NCC அணி செரசன்ஸ் விளையாட்டு கழகத்திற்கு எதிராக 10 ஓட்டங்களால் த்ரில் வெற்றி ஒன்றினைப் பெற உதவியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

இதேவேளை, செரசன்ஸ் அணிக்காக 90 ஓட்டங்கள் பெற்ற மிலிந்த சிறிவர்தன இந்த அழைப்பு T20 கிரிக்கெட் தொடரில் மூன்றாவது தடவை தொடர்ச்சியாக அரைச்சதம் பெற்று அசத்தியிருந்த போதும் குறித்த துடுப்பாட்டம் வீணாகியிருந்தது.

இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் வீரர்களான தினேஷ் சந்திமால், சதீர சமரவிக்ரம ஆகியோரும் சிறப்பான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தினர். இதில் தினேஷ் சந்திமல் இராணுவப்படை அணிக்காக 51 ஓட்டங்கள் குவிக்க, சதீர சமரவிக்ரம கோல்ட்ஸ் அணிக்காக 89 ஓட்டங்களை எடுத்திருந்தார். 

பந்துவீச்சினை நோக்கும் போது இந்த அழைப்பு T20 கிரிக்கெட் தொடரின் மூன்றாம் நாள் ஆட்டத்தில் 6 விக்கெட்டுக்களைச் சாய்த்திருந்த சிலாபம் மேரியன்ஸ் அணியின் இளம் வேகப் பந்துவீச்சாளர் அசித்த பெர்னாந்து இன்று 4 விக்கெட்டுக்களைச் சாய்த்திருந்ததோடு, அசித்த பெர்னாந்து போன்று இலங்கை இளையோர் கிரிக்கெட் அணியின் இடதுகை சுழல் வீரரான நிஷான் பீரிஸும் றாகம கிரிக்கெட் கழகத்திற்காக  4 விக்கெட்டுக்கள் சாய்த்து அசத்தல் ஆட்டத்தினை வெளிப்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.  

நான்காம் நாள் போட்டிகளின் சுருக்கம்

குழு A 

பாணதுறை கிரிக்கெட் கழகம் எதிர் சோனகர் கிரிக்கெட் கழகம்

CCC மைதானம், கொழும்பு

பாணதுறை கிரிக்கெட் கழகம் – 88 அனுக் பெர்னாந்து 3/18, நிமன்த சுபாசிங்க 2/07, அதீஷ திலன்ச்சன 2/12, ப்ரவீன் ஜயவிக்ரம 2/14

சோனகர் கிரிக்கெட் கழகம் –  92/4 (15.3) பப்சார வடுகே 27, அஷாத் அத்தாரி 2/16

முடிவு – சோனகர் கிரிக்கெட் கழகம் 6 விக்கெட்டுக்களால் வெற்றி

ஆபாச வார்த்தை பிரயோகத்திற்காக ஜொஸ் பட்லர் மீது அபராதம்

சர்வதேச கிரிக்கெட் பேரவையினுடைய…..

கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் எதிர் புளூம்பீல்ட் கிரிக்கெட் கழகம் 

மேரியன்ஸ் மைதானம், கட்டுநாயக்க

கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் –  165/6 (20) சதீர சமரவிக்ரம 89, கயான் சிறிசோம 3/31

புளூம்பில்ட் கிரிக்கெட் கழகம் –  131 (19.5) நிப்புன கமகே 54, ப்ராபத் ஜயசூரிய 3/25

முடிவு –  கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் 34 ஓட்டங்களால் வெற்றி 


யுனிச்செலா விளையாட்டுக் கழகம் எதிர்  காலி கிரிக்கெட் கழகம்

CCC மைதானம், கொழும்பு

யுனிச்செலா விளையாட்டுக் கழகம் – 95/9 (20) ஹசித்த நிர்மல் 31, மன்சூர் அம்ஜாட் 3/20, சத்துர லக்ஷான் 2/15

காலி கிரிக்கெட் கழகம் – 99/9 (19.3) தனுஷ்க ரணசிங்க 3/24, துனீல் அபேய்தாரா 2/07, இஷார அமரசிங்க 2/19

முடிவு – காலி கிரிக்கெட் கழகம்  ஒரு விக்கெட்டினால் வெற்றி 


குழு B

கடற்படை விளையாட்டுக் கழகம் எதிர் SSC

BRC மைதானம், கொழும்பு

கடற்படை விளையாட்டுக் கழகம் – 106/9 (20) விமுத் சப்னாக்க 24, ஹிமேஷ் ராமநாயக்க 3/15, சஜித்ர சேனநாயக்க 2/06

SSC – 110/3 (16.2) கிரிஷான் சஞ்சுல 48, சரித் அசலன்க 39, திலங்க அவார்த்ட் 2/15

முடிவு – SSC 7 விக்கெட்டுக்களால் வெற்றி 

Photos: SSC Vs Navy SC | SLC Invitational T20 Tournament 2019/20


தமிழ் யூனியன் கிரிக்கெட் கழகம் எதிர் பொலிஸ் விளையாட்டுக் கழகம்

BRC மைதானம், கொழும்பு

தமிழ் யூனியன் கிரிக்கெட் கழகம் – 154/9 (20) ரமித் ரம்புக்வல 49, சுப்புன் மதுசங்க 2/19

பொலிஸ் விளையாட்டுக் கழகம் – 159/8 (20) சுஜான் மயுர 54, சுப்புன் மதுசங்க 20*, திலங்க உதேசன 4/34

முடிவு – பொலிஸ் விளையாட்டுக் கழகம் 2 விக்கெட்டுக்களால் வெற்றி

Photos: Police SC Vs Tamil Union C & AC | SLC Invitational T20 Tournament 2019/20


NCC எதிர் செரசன்ஸ் விளையாட்டுக் கழகம் 

மேரியன்ஸ் கிரிக்கெட் மைதானம், கட்டுநாயக்க 

NCC – 188/3 (20) பெத்தும் நிஸ்ஸங்க 93, அஞ்சலோ பெரேரா 70*

செரசன்ஸ் விளையாட்டுக் கழகம் – 178/9 (20) மிலிந்த சிறிவர்த்தன 90, சத்துரங்க டி சில்வா 3/33, திலேஷ் குணரட்ன 2/30

முடிவு – NCC 10 ஓட்டங்களால் வெற்றி 

பரபரப்பான போட்டியில் அயர்லாந்தை வீழ்த்திய மேற்கிந்திய தீவுகள் அணி

அயர்லாந்து அணிக்கெதிரான இரண்டாவது……

குழு C

சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம் எதிர் களுத்துறை நகர கழகம் 

கோல்ட்ஸ் கிரிக்கெட் கழக மைதானம், கொழும்பு

சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம் – 124 (20) புலின தரங்க 25, இஷான் அபயசேகர 3/22

களுத்துறை நகர கழகம் – 89 (18.5) இன்சாக்க ஜயவர்த்தன 35, அசித்த பெர்னாந்து 4/13, திக்ஷில டி சில்வா 2/17

முடிவு – சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம் 35 ஓட்டங்களால் வெற்றி 


நீர்கொழும்பு கிரிக்கெட் கழகம் எதிர் இராணுவப்படை கிரிக்கெட் கழகம்

கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம், கொழும்பு

நீர்கொழும்பு கிரிக்கெட் கழகம் – 130/7 (20) மாதவ்வ வர்ணபுர 33, ஜானக்க சம்பத் 2/14

இராணுவப்படை கிரிக்கெட் கழகம் – 131/5 (18.2) தினேஷ் சந்திமால் 51, மகேஷ் குமார 37*, தனுஷ்க சந்தருவன் 2/19

முடிவு – இராணுவப்படை கிரிக்கெட் கழகம் 5 விக்கெட்டுக்களால் வெற்றி


குருநாகல் இளையோர் கிரிக்கெட் கழகம் எதிர் விமானப்படை விளையாட்டுக் கழகம்

SSC மைதானம், கொழும்பு

குருநாகல் இளையோர் கிரிக்கெட் கழகம் – 156/9 (20) தில்ஷான் கொல்லுர 75, சஞ்சய ரணவீர 2/31

விமானப்படை விளையாட்டுக் கழகம் – 159/5 (19.3) சாபிக் இப்தாரி 43, நவீன் கவிகார 2/26

முடிவு – விமானப்படை விளையாட்டுக் கழகம் 5 விக்கெட்டுக்களால் வெற்றி

எனது கிரிக்கெட் வாழ்க்கைக்கு நானே முன்மாதிரி – மொஹமட் சமாஸ்

தென்னாபிரிக்காவில் இம்மாதம்……

குழு D

நுகேகொடை கிரிக்கெட் கழகம் எதிர் றாகம கிரிக்கெட் கழகம்

பி.சரவணமுத்து மைதானம், கொழும்பு

நுகேகொட கிரிக்கெட் கழகம் – 77 (17.4) இரோஷ் சமரசூரிய 29, நிஷான் பீரிஸ் 4/16, உதார ஜயசுந்தர 3/16

றாகம கிரிக்கெட் கழகம் – 78/2 செஹான் பெர்னாந்து 45, நிஷான்  மதுஷ்க 27*

முடிவு – றாகம கிரிக்கெட் கழகம் 8 விக்கெட்டுக்களால் வெற்றி

Photos: Ragama CC Vs Nugegoda S & WC | SLC Invitation T20 Tournament 2019/20


BRC எதிர் கொழும்பு கிரிக்கெட் கழகம்

SSC மைதானம், கொழும்பு

Photos: CCC vs BRC – SLC Invitational T20 Tournament 2019/20

BRC – 102/8 (20) ரமிந்த விஜேசூரிய 25, அஷான் பிரியஞ்சன் 2/13

கொழும்பு கிரிக்கெட் கழகம் –  108/4 (17.5) மினோத் பானுக்க 40*,  சாலிக்க கருணாநாயக்க 28*

முடிவு – கொழும்பு கிரிக்கெட் கழகம்  6 விக்கெட்டுக்களால் வெற்றி

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<