பரபரப்பான போட்டியில் அயர்லாந்தை வீழ்த்திய மேற்கிந்திய தீவுகள் அணி

60

அயர்லாந்து அணிக்கெதிரான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், மேற்கிந்திய தீவுகள் அணி, ஷெல்டன் கொட்ரல் கடைசி பந்தில் அடித்த சிக்ஸரின் உதவியால் ஒரு விக்கெட்டினால் த்ரில் வெற்றிபெற்றது.

இதன்மூலம் மேற்கிந்திய தீவுகள் அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அயர்லாந்து கிரிக்கெட் அணி, 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடி வருகின்றது

எனது கிரிக்கெட் வாழ்க்கைக்கு நானே முன்மாதிரி – மொஹமட் சமாஸ்

தென்னாபிரிக்காவில் இம்மாதம் ஆரம்பமாகவுள்ள 19…

கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற முதலாவது போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி 5 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்ற நிலையில், 2ஆவது போட்டி நேற்று (09) பார்படோஸில் நடைபெற்றது

இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற அயர்லாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. இதன்படி அயர்லாந்து அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 237 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது

முதலாவது போட்டியைப் போல மேற்கிந்திய தீவுகள் அணியின் வேகப் பந்துவீச்சாளர் அல்சாரி ஜோசப் பந்துவீச்சில் நெருக்கடி கொடுத்தார். இவரது பந்தில் போல் ஸ்டெர்லிங், அன்டி போல்பெர்னி, கெவின் பிரையன், லோகன் டக்கர் ஆகியோர் ஆட்டமிழந்தனர்

எனினும், அந்த அணியின் அதிகபட்ச ஓட்டங்களாக, போல் ஸ்டெர்லிங் 63 ஓட்டங்களையும், சிமி சிங் 34 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து 234 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி, ஆரம்பத்தில் தடுமாற்றத்தை சந்தித்தது

இங்கிலாந்து டெஸ்ட் குழாமிலிருந்து வெளியேறும் ஜேம்ஸ் அண்டர்சன்

நியூசிலாந்து அணியுடனான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் போது விலா எலும்பு…

எனினும், பொறுப்புடன் விளையாடிய நிக்கொலஸ் பூரான் அரைச்சதம் விளாசிய அணியை வெற்றியின் விளிப்பு வரை கொண்டு சென்றார்

இதன்படி, 49.5 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு வெற்றி இலக்கை கடந்தது. இதனால் மேற்கிந்திய தீவுகள் அணி ஒரு விக்கெட்டினால் த்ரில் வெற்றியைப் பதிவு செய்தது.

இதன்போது மேற்கிந்திய தீவுகள் அணியின் அதிகபட்ச ஓட்டங்களாக, நிக்கொலஸ் பூரான் 52 ஓட்டங்களையும், ஹெய்டன் வோல்ஷ் ஆட்டமிழக்காது 46 ஓட்டங்களையும், கிரன் பொல்லார்ட் 40 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.

அயர்லாந்து அணியின் பந்துவீச்சில், சிமி சிங் 3 விக்கெட்டுகளையும், என்டி மெக்பிரைன் மற்றும் பெரி மெக்கார்தி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், வீழ்த்தினர்.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக, மேற்கிந்திய தீவுகள் அணி சார்பில் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய அல்சாரி ஜோசப் தெரிவானார்.

மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின், மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டி நாளை மறுதினம் (12) கிரெனடா மைதானத்தில் நடைபெறவுள்ளது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<