அழைப்பு T20 தொடரின் முதல் நாளில் ஜொலித்த டில்சாட், செஹான் ஜயசூரிய

244

இலங்கை கிரிக்கெட் சபை, ஒழுங்கு செய்து நடாத்தும் அழைப்பு T20 கிரிக்கெட் தொடரின் நேற்றைய (4) ஆரம்ப நாளில் 12 போட்டிகள் நிறைவுக்கு வந்தன. 

முதல் நாளுக்கான போட்டிகளில் இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் வீரர்களான செஹான் ஜயசூரிய மற்றும் கமிந்து மெண்டிஸ் ஆகியோர் சிறப்பான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

கேகலு அணிக்கு எதிராக வெற்றியைப் பதிவு செய்த சென். ஜோன்ஸ் கல்லூரி

சிங்கர் நிறுவனம், டிவிஷன் – II பாடசாலைகள்…..

அண்மையில் இலங்கை T20 அணியில் இருந்து நீக்கப்பட்ட செஹான் ஜயசூரிய சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் அணிக்காக 107 ஓட்டங்கள் விளாசியிருக்க, கமிந்து மெண்டிஸ் உம் அதே அணிக்காக ஆட்டமிழக்காமல் 99 ஓட்டங்களைப் பெற்று T20 போட்டிகளில் தான் பெற இருந்த கன்னி சதத்தை ஒரு ஓட்டத்தினால் தவறவிட்டிருந்தார். 

இந்த இரண்டு வீரர்களினதும் துடுப்பாட்ட உதவியோடு சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் அணி குருநாகல் இளையோர் கிரிக்கெட் கழகத்திற்கு எதிராக கொழும்பு SSC மைதானத்தில் இடம்பெற்ற போட்டியில் 244 ஓட்டங்களை குவித்ததோடு, 127 ஓட்டங்களால் வெற்றியினையும் பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது. இதேநேரம், அதே போட்டியில் பந்துவீச்சில் அசத்தியிருந்த இடதுகை சுழல்வீரரான நிமேஷ் விமுக்தி 4 விக்கெட்டுக்களைச் சாய்த்து சிலாபம் மேரியன்ஸ் அணியின் வெற்றிக்காக பந்துவீச்சில் உதவியிருந்தார்.

மறுமுனையில், இலங்கை A கிரிக்கெட் அணியின் தலைவரான அஷான் பிரியஞ்சன் கொழும்பு கிரிக்கெட் கழகம் சார்பில் விளையாடிய போட்டியில் சகலதுறைகளிலும் சிறப்பாக செயற்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. கண்டி துறைமுக கிரிக்கெட் கழகத்திற்கு எதிரான மோதலில் கொழும்பு கிரிக்கெட் கழகம் 140 ஓட்டங்களால் வெற்றி பெற உதவிய பிரியஞ்சன் 90 ஓட்டங்களையும் 4 விக்கெட்டுக்களையும் கைப்பற்றியிருந்தது குறிப்பிடத்தக்கது.

கோல்ட்ஸ் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரரான சதீர சமரவிக்ரமவும் பாணதுறை விளையாட்டுக்கழகத்திற்கு எதிரான போட்டியில் தனது திறமையினை நிரூபித்திருந்தார். அந்தவகையில், சதீர சமரவிக்ரம பெற்ற 72 ஓட்டங்கள் மூலம் கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் பாணந்துறை விளையாட்டுக் கழகத்திற்கு எதிராக 32 ஓட்டங்களால் வெற்றியினைப் பதிவு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

இதேநேரம், செரசன்ஸ் விளையாட்டுக் கழகத்தின் வேகப்பந்துவீச்சாளரான மொஹமட் டில்சாத் தனது அபார பந்துவீச்சு காரணமாக SSC அணிக்கு எதிராக வெறும் 21 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களைச் சாய்த்திருந்தது குறிப்பிடத்தக்கது. இதேநேரம், டில்சாத் மாத்திமே இலங்கை கிரிக்கெட் சபை நடாத்திய இந்த அழைப்பிதழ் T20 கிரிக்கெட் தொடரின் முதல்நாளில் 5 விக்கெட்டுக்களை கைப்பற்றிய ஒரே பந்துவீச்சாளராக மாறியிருந்ததும் குறிப்பிடத்தக்கது. எனினும், டில்சாத்தின் செரசன்ஸ் விளையாட்டுக் கழகம் SSC அணிக்கு எதிரான போட்டியில் துரதிஷ்டவசமாக 9 ஓட்டங்களால் தோல்வியினைத் தழுவியது.

முதல்நாள் போட்டிகளின் சுருக்கம்

குழு A

பதுரெலிய கிரிக்கெட் கழகள் எதிர் காலி கிரிக்கெட் கழகம்

பி.சரவணமுத்து மைதானம்

பதுரெலிய கிரிக்கெட் கழகம் – 155/9 (20) தமித் பெரேரா 39, சலிந்த பெரேரா 34, மன்சூர் அம்ஜாட் 4/18, சத்துர லக்ஷான் 2/05

காலி கிரிக்கெட் கழகம் – 131 (19.4) மன்சூர் அம்ஜாட் 32*, லஹிரு சமரக்கோன் 2/16, அசங்க சில்வா 2/16

முடிவு – பதுரெலிய கிரிக்கெட் கழகம் 24 ஓட்டங்களால் வெற்றி

மட்டக்களப்பு புனித மைக்கல் கல்லூரிக்கு முதல் இன்னிங்ஸ் வெற்றி

சிங்கர் நிறுனம் 19 வயதுக்குட்பட்ட டிவிஷன்….

கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் எதிர் பாணதுறை கிரிக்கெட் கழகம்

NCC மைதானம்

கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் – 175/7 (20) சதீர சமரவிக்ரம 73, நிம்ஹாஜ் ஜலீல் 3/29

பாணதுறை கிரிக்கெட் கழகம் – நிம்ஹாஜ் ஜலீல் 56, அகில தனன்ஞய 2/28

முடிவு – கோல்ட்ஸ் அணி 32 ஓட்டங்களால் வெற்றி


புளூம்பில்ட் கிரிக்கெட் கழகம் எதிர் சோனகர் கிரிக்கெட் கழகம்

சோனகர் கிரிக்கெட் கழக மைதானம்

புளூம்பீல்ட் கிரிக்கெட் கழகம் – 138/7 (20) ரெவான் கெல்லி 40, நிமன்த சுபாஷிங்க 4/22

சோனகர் கிரிக்கெட் கழகம் – 143/3 (16) பப்சார வடுகே 62, சரித்த குமாரசிங்க 60,  சத்துர ஒபயசேகர 2/25

முடிவு – சோனகர் கிரிக்கெட் கழகம் 7 விக்கெட்டுக்களால் வெற்றி

குழு B

SSC எதிர் செரசன்ஸ் விளையாட்டுக் கழகம்

கொழும்பு கிரிக்கெட் கழக மைதானம்

Photos: Saracens SC vs SSC | SLC Invitation T20 Tournament 2019/20

SSC – 130 (19.4) சம்மு அஷான் 32, மொஹமட் டில்சாத் 5/21

செரசன்ஸ் கிரிக்கெட் கழகம் – 121 (20) ஹர்ஷ ராஜபக்ஷ 39, சசித்ர சேனநாயக்க 3/18, ஜெப்ரி வன்டர்செய் 2/28

முடிவு – SSC 9 ஓட்டங்களால் வெற்றி


NCC எதிர் பொலிஸ் விளையாட்டுக் கழகம்

NCC மைதானம்

Photos: NCC vs Police SC | SLC Invitation T20 Tournament 2019/20

NCC – 234/3 (20) லஹிரு உதார 82, பெத்தும் நிஸ்ஸங்க 78, நிஸார் அஹ்மட் 1/28

பொலிஸ் விளையாட்டுக் கழகம் – 111 (17) லக்ஷான் ரொட்ரிகோ 51, ரவிந்து திலகரட்ன 3/14, சசிந்து கொலம்பகே 3/18

முடிவு – NCC 123 ஓட்டங்களால் வெற்றி


தமிழ் யூனியன் எதிர் கடற்படை விளையாட்டுக் கழகம்

CCC கழக மைதானம்

தமிழ் யூனியன் கிரிக்கெட் கழகம் – 153/5 (20) ரன்மித் ஜயசேன 33*, மனோஜ் சரசந்திர 32

கடற்படை விளையாட்டுக் கழகம் – 98/7 (20) சவிந்து பீரிஸ் 23*, ரமித் ரம்புக்வெல 2/09

முடிவு – தமிழ் யூனியன் கிரிக்கெட் கழகம் 55 ஓட்டங்களால் வெற்றி 

குழு C

சிலாபம் மேரியன்ஸ் எதிர் குருநாகல் இளையோர் கிரிக்கெட் கழகம்

SSC மைதானம்

Photos: Chilaw Marians CC vs Kurunegala Youth CC | SLC Invitation T20 Tournament 2019/20

சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம் – 244/2 (20) செஹான் ஜயசூரிய 107, கமிந்து மெண்டிஸ் 99*, நவீன் அதிகாரி 2/58

குருநாகல் இளையோர் கிரிக்கெட் கழகம் – 117/7 (20) மலிங்க மாலிகஸ்பே 30, நிமேஷ் விமுக்தி 4/27

முடிவு – சிலாபம் மேரியன்ஸ் 127 ஓட்டங்களால் வெற்றி

ராஜஸ்தான் அணியின் சுழல் பந்துவீச்சு ஆலோசகராக இஸ் சோதி

நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் சுழல்….

நீர்கொழும்பு கிரிக்கெட் கழகம் எதிர் விமானப்படை விளையாட்டுக் கழகம்

விமானப்படை விளையாட்டுக் கழகம்

நீர்கொழும்பு கிரிக்கெட் கழகம் – 118 (19.5) டில்சான் முனவீர 33, சஞ்சய ரனவீர 3/33

விமானப்படை விளையாட்டுக் கழகம் – 119/6 (19.4) சாமர பெர்னாந்து 44*

முடிவு – விமானப்படை விளையாட்டுக் கழகம் 4 விக்கெட்டுக்களால் வெற்றி 


இராணுவப்படை விளையாட்டுக் கழகம் எதிர் களுத்துறை நகர கழகம்

SSC மைதானம்

இராணுவப்படை விளையாட்டுக் கழகம் – 111/9 (20) அஷான் ரன்திக்க 33, தினேஷ் சந்திமல் 21, இன்சாக்க ஜயவர்த்தன 3/15

களுத்துறை நகர கழகம் – 113/4 (19.3) தசுன் செனவிரத்ன 34, துஷான் விமுக்தி 2/20

முடிவு – களுத்துறை நகர கழகம் 6 விக்கெட்டுக்களால் வெற்றி

குழு D

BRC எதிர் லங்கன் கிரிக்கெட் கழகம்

FTZ மைதானம் கட்டுநாயக்க

BRC – 177/6 (20) லசித் லக்ஷான் 51, தமித்த சில்வா 2/12

லங்கன் கிரிக்கெட் கழகம் – 141/9 (20) பிரிமோஷ் பெரேரா 32, துவிந்து திலகரட்ன 3/11

முடிவு – BRC அணி 36 ஓட்டங்களால் வெற்றி


கொழும்பு கிரிக்கெட் கழகம் எதிர் கண்டி சுங்க விளையாட்டுக் கழகம

கோல்ட்ஸ் மைதானம்

கொழும்பு கிரிக்கெட் கழகம் – 196/6 (20) அஷான் பிரியஞ்சன் 90, நெரஞ்சன் குமுதித்த 4/42

கண்டி சுங்க விளையாட்டுக் கழகம் – 56 (15.4) அஷான் பிரியஞ்சன் 4/11,  மலிந்த புஷ்பகுமார 3/09

முடிவு – கொழும்பு கிரிக்கெட் கழகம் 140 ஓட்டங்களால் வெற்றி

கிரிக்கெட் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்தார் இர்பான் பதான்

இந்திய கிரிக்கெட் அணியின் பந்துவீச்சு…..

இலங்கை துறைமுக அதிகாரசபை விளையாட்டுக் கழகம் எதிர் றாகாம கிரிக்கெட் கழகம்

FTZ மைதானம் கட்டுநாயக்க

இலங்கை துறைமுக அதிகார சபை கிரிக்கெட் கழகம் – 126/7 (20) பிரசான் விக்ரமசிங்க 28, சுப்புன் கவிந்த 23

றாகம கிரிக்கெட் கழகம் – 130/1 (18.1) நிஷான் பெர்னாந்து 64*, லஹிரு திரிமான்ன 32, உதார ஜயசுந்தர 29*

முடிவு – றாகம கிரிக்கெட் கழகம் 9 விக்கெட்டுக்களால் வெற்றி

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<