2017ஆம் ஆண்டுக்கான பிபாவின் (FIFA) சிறந்த கால்பந்து வீரருக்கான விருதை நட்சத்திர கால்பந்து வீரரான போர்த்துக்கலின் கிறிஸ்டியானோ ரொனால்டோ பெற்றுக்கொண்டார்.

சர்வதேச கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பான பிபா சார்பில் வருடாந்தம் தலை சிறந்த வீரர், சிறந்த வீராங்கனை, பயிற்சியாளர், சிறந்த அணி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட்டு, வீரர்கள் கௌரவிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில், 2017ஆம் ஆண்டுக்கான பிபா கால்பந்து விருதுகள் வழங்கும் விழா லண்டனில் உள்ள பிரபல பலாடியம் அரங்கில் நேற்று (23) இடம்பெற்றது.

நடப்பு உலக சம்பியன் ஜெர்மனி FIFA தரவரிசையில் தொடர்ந்தும் முதலிடத்தில்

சர்வதேச கால்பந்து சம்மேளனத்தின் இன்று (16) புதுப்பிக்கப்பட்ட FIFA உலக..

இந்நிலையில், 2017ஆம் ஆண்டுக்கான சிறந்த வீரருக்கான விருதை தொடர்ச்சியாக 5ஆவது தடவையாக போர்த்துக்கல் அணியின் தலைவரும், ரியல் மெட்ரிட் கழகத்தின் நட்சத்திர வீரருமான கிறிஸ்டியானோ ரொனால்டோ பெற்றுக்கொண்டார். இதன் மூலம் ஐந்து முறை இவ்விருதை பெற்றுக் கொண்ட லியொனல் மெஸ்ஸியின் சாதனையை ரொனால்டோ சமன் செய்தார்.

ரொனால்டோ நடப்பு பருவகாலத்தில் 44 போட்டிகளில் விளையாடி 48 கோல்களை பெற்றுள்ளதுடன் கோல்களுக்கான பல உதவிகளையும்  மேற்கொண்டுள்ளார்.

@fifa.com

கடந்த பருவத்தில் லா லிகா, ஸ்பெய்ன் சுப்பர் கிண்ண தொடர், ஐரோப்பிய சம்பியன் கிண்ணம் ஆகியவற்றை ரியல் மெட்ரிட் அணிக்காக பெற்றுக்கொடுத்த கௌரவம் அண்மைக்காலமாக கால்பந்து அரங்கில் ஜொலித்துக்கொண்டிருக்கின்ற கிறிஸ்டியானோ ரொனால்டோவையே சாரும்.

இதேவேளை, கிறிஸ்டியானோ ரொனால்டோவுடன், இப்பட்டியலில் பலத்த போட்டியைக் கொடுத்த ஆர்ஜென்டீனாவின் லியொனல் மெஸ்ஸி 2ஆவது இடத்தையும், பிரேசில் அணியின் நட்சத்திர வீரர் நெய்மர் 3ஆவது இடத்தையும் பெற்றுக்கொண்டனர்.

மென்செஸ்டர் யுனைடட் மற்றும் ரியல் மெட்ரிட் அணிகளின் வெற்றிப் பயணத்தில் முக்கிய வீரராக விளங்குகின்ற ரொனால்டோ, கடந்த வருடத்தைப் போல தொடர்ச்சியாக இவ்விருதை பெற்றுக்கொண்ட பிறகு கருத்து தெரிவிக்கையில், எனக்காக வாக்களித்த அனைவருக்கும் மிக்க நன்றி. அத்துடன் மெஸ்ஸி மற்றும் நெய்மர் ஆகியோருக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதுடன், ரியல் மெட்ரிட் ரசிகர்களுக்கும், வீரர்களுக்கும், பயிற்சியாளர் உள்ளிட்ட அனைத்து உறுப்பினர்களுக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அத்துடன், நாங்கள் முதற்தடவையாக இங்கிலாந்துக்கு வருகை தந்துள்ளோம். தொடர்ச்சியாக இவ்விருதை பெற்றுக்கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன். இது எனது வாழ்க்கையில் முக்கிய தருணமாக அமைவதுடன், உலகம் பூராகவும் உள்ள எனது ரசிகர்களுக்கு இவ்விருதை சமர்ப்பிக்கிறேன்” எனவும் தெரிவித்தார்.

2016/17 இற்கான UEFA இன் விருதுகளை வென்றோர் விபரம்

UEFA யின் 2016/17 ஆம் பருவகாலத்திற்கான விருது வழங்கும் நிகழ்வு இம்முறையும்.

2008ஆம் ஆண்டு முதற்தடவையாக நடைபெற்ற பிபா விருது வழங்கும் விழாவிலும் வருடத்தின் சிறந்த கால்பந்து வீரருக்கான விருதை ரொனால்டோ பெற்றுக்கொண்டதுடன், கடந்த 4 வருடங்களில் இடம்பெற்ற ப்ளென் டி ஓர் விருதை 3 தடவைகள் தட்டிச் சென்றமை குறிப்பிடத்தக்கது.

சிறந்த பயிற்சியாளருக்கான விருது

@fifa.com

வருடத்தின் சிறந்த பயிற்சியாளருக்கான விருதை ரியல் மெட்ரிட் கழகத்தின் பயிற்றுவிப்பாளரும், பிரான்ஸ் அணியின் முன்னாள் நட்சத்திர வீரருமான சினேடின் சிடேன் தட்டிச் சென்றார்.

இந்நிலையில் சிறந்த பயிற்சியாளர் விருதை வென்ற சிடேன், ரியல் மெட்ரிட் அணியில் உள்ள அனைத்து வீரர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். எனது வாழ்க்கையில் பெற்றுக்கொண்ட சிறந்த பரிசு இதுதான” என தெரிவித்தார்.

இவருடைய கழகத்தைச் சேர்ந்த 5 வீரர்கள் 2017ஆம் ஆண்டுக்கான பிபாவின் கால்பந்து அணியிலும் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.  

சிறந்த கோலுக்கான விருது

@fifa.com

ஆண்டின் சிறந்த கோலுக்கான புஸ்காஸ்(PUSKAS) விருதை பிரான்ஸ் கால்பந்து அணியின் நட்சத்திர வீரரும், ஆர்சனல் அணிக்காக விளையாடி வருகின்றவருமான ஒலிவியர் ஜிரோட் பெற்றுக்கொண்டார். இவர் கிறிஸ்டல் பெலஸ் அணிக்கெதிராக அடித்த அசத்தல் கோலுக்காகவே இந்த விருதைப் பெற்றுக்கொண்டார்.

ரஹ்மானின் இரண்டு கோல்களால் இராணுவப்படைக்கு மற்றொரு வெற்றி

டயலொக் சம்பியன்ஸ் லீக்கின் மற்றொரு போட்டியில் தமது..

சிறந்த கோல் காப்பாளருக்கான விருது 

@fifa.com

சிறந்த கோல் காப்பாளருக்காக விருதை ஜுவென்டஸ் அணியின் கியான்லிகி பப்பன் தட்டிச் சென்றார். இவர் கடந்த பருவகாலத்திற்கான ஐரோப்பிய கால்பந்து விருது வழங்கும் விழாவிலும் சிறந்த கோல் காப்பாளருக்கான விருதை வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பிபா ரசிகர்களின் விருது

பிபாவின் 2017ஆம் ஆண்டுக்கான ரசிகர்களின் விருது செல்பரிக் கால்பந்து கழகத்திற்கு வழங்கப்பட்டது.

சிறந்த பெண் பயிற்சியாளருக்கான விருது

பெண்கள் கால்பந்து அணியின் சிறந்த பயிற்றுவிப்பாளராக, நெதர்லாந்து அணியின் பயிற்றுவிப்பாளர் செரினா வீக்மென் தெரிவு செய்யப்பட்டார். இவ்வருடம் நடைபெற்ற ஐரோப்பிய சம்பியன் கிண்ணத்தை முதற்தடவையாக நெதர்லாந்து அணிக்குப் பெற்றுக்கொடுத்த பெருமையும் இவரையே சாரும்.

சிறந்த விளையாட்டு ஒழுக்கத்திற்கான விருது

சிறந்த விளையாட்டு ஒழுக்கத்திற்கான விருதை பிரான்சிஸ் கோனே தட்டிச் சென்றார்.

சிறந்த வீராங்கனைக்கான விருது

@fifa.com

2017ஆம் ஆண்டுக்கான பிபாவின் சிறந்த பெண் வீராங்கனைக்கான விருதை நெதர்லாந்து அணியின் லீய்க்கி மார்டின்ஸ் தட்டிச் சென்றார். இவர் பார்சிலோனா பெண்கள் கால்பந்து கழகத்துக்காகவும் விளையாடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

2017ஆம் ஆண்டுக்கான பிபாவின் சிறந்த பதினொருவர் அணி

கியான்லிகி பப்பன் (கோல் காப்பாளர்), டானி அல்விஸ், மார்செலோ, சேர்ஜியோ ராமோஸ், லியெனார்டோ போனுச்சி, லுகா மொட்ரிக், டோனி குரூஸ், அன்ட்ருஸ் இனியெஸ்டா, லியொனல் மெஸ்ஸி, நெய்மர், கிறிஸ்டியானோ ரொனால்டோ

2017ஆம் ஆண்டுக்கான பிபாவின் கால்பந்து அணி