பிரவீன், மலிந்துவின் அதிரடி பந்து வீச்சில் 48 ஓட்டங்களுக்கு சுருண்ட சில்வஸ்டர் கல்லூரி

263
U19 Schools Cricket Roundup

பாடசாலைகளுக்கு இடையிலான 19 வயதுக்குட்பட்ட சிங்கர் கிண்ண கிரிக்கெட் தொடரின் முதல் சுற்றுப் போட்டிகளுக்காக இரண்டு போட்டிகள் இன்று நிறைவுற்றதுடன் மற்றொரு போட்டி இன்று ஆரம்பமாகியது.

பசிந்து சூரியபண்டாரவின் சதத்துடன் றோயல் கல்லூரி வலுவான நிலையில்

சிங்கர் 19 வயதுக்கு உட்பட்ட முதல் சுற்றுக்கான நான்கு போட்டிகள் நடைபெற்றன…

றோயல் கல்லூரி எதிர் வெஸ்லி கல்லூரி

நேற்று ஆரம்பமாகிய இந்தப் போட்டியில், பசிந்து சூரியபண்டார ஆட்டமிழக்காமல் பெற்றுக்கொண்ட 108 ஓட்டங்களுடன் 21௦ ஓட்டங்களை பெற்று வலுவான நிலையிலிருந்த றோயல் கல்லூரி, இன்றைய தினம் களமிறங்கி 317 ஓட்டங்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்திருந்த நிலையில் தமது ஆட்டத்தை இடைநிறுத்திக்கொண்டது.

இன்றைய தினம் தொடர்ந்து ஆடிய பசிந்து சூரியபண்டார 138 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தார். ஹிமேஷ் ரத்னாயக்க ஆட்டமிழக்காமல் 5௦ ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டார்.

பின்னர் களமிறங்கிய வெஸ்லி கல்லூரி 6 விக்கெட்டுகளை இழந்து 192 ஓட்டங்களுடன் நெருக்கடியான நிலையில் இருந்த சமயம் மழையின் குறுக்கீட்டால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. அவ்வணி சார்பாக சிறந்த துடுப்பாட்டத்தை வெளிப்படுத்திய மோவின் சுபசிங்க ஆட்டமிழக்காமல் 81 ஓட்டங்களுடன் களத்தில் இருந்தார்.

போட்டியின் சுருக்கம்

றோயல் கல்லூரி: 317/9 (77.3) – பசிந்து சூரியபண்டார 138*, ஹெலித விதானகே 52, தேவிந்து சேனரத்ன 46, ஹிமேஷ் ரத்னாயக்க 5௦*, செனால் தங்கல்ல 5/86, மோவின் சுபசிங்க 2/71, முஹம்மத் உபைதுல்லா 2/78

வெஸ்லி கல்லூரி: 192/6 (62) – மோவின் சுபசிங்க 81*, ஜேசன் டி சில்வா 25, ஹிமேஷ் ராமநாயக்க 2/20, அபிஷேகம் பெரேரா 2/54

போட்டி முடிவு : மழை காரணமாக  போட்டி நிறுத்தப்பட்டது


புனித ஜோசப் கல்லூரி எதிர் புனித தோமியர் கல்லூரி

நேற்று 13 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து நெருக்கடியான நிலையில் இருந்த தோமியர் கல்லூரி அணி, இன்றைய தினம் 9 விக்கெட்டுகளை இழந்து 169 ஓட்டங்களை பெற்றிருந்தபோது ஆட்டத்தை இடைநிறுத்தியது.

இறுதி வரை போராடிய ரொமேஷ் நலப்பெரும ஆட்டமிழக்காமல் 42 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். அதேநேரம், தோமியர் கல்லூரியை குறித்த ஓட்டங்களுக்கு மட்டுப்படுத்த உதவிய  ஹரின் குரே 45 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

அதனை தொடர்ந்து, 56 ஓட்டங்களால் முதல் இன்னிங்ஸ் வெற்றியை பதிவு செய்து கொண்ட நிலையில் இரண்டாவது இன்னிங்சிற்காகக் களமிறங்கிய ஜோசப் கல்லூரி அணி, இன்றைய நாள் நிறைவின்போது நிபுன் சுமனசிங்கவின் அரைச் சதத்தின் உதவியுடன் 9 விக்கெட்டுகளை இழந்து 215 ஓட்டங்களை பெற்றிருந்தது.  எனவே போட்டி சமநிலையில் நிறைவுற்றது.

போட்டியின் சுருக்கம்

புனித ஜோசப் கல்லூரி: 217/9 d(71.2) – ஹரின் குரே  49, பஹான் பெரேரா 47, தினித்  மதுரவேல 33, பாவித் ரத்னாயக்க 3/33, டெலோன் பிரீஸ் 3/50

புனித தோமியர் கல்லூரி: 161/9d(48.4) – ரொமேஷ நலப்பெரும 42*, கழன பெரேரா 32, மந்தில விஜரத்ன 29, சிதார ஹப்புஹின்ன 2௦, ஹரின் குரே 3/45, ருச்சிர ஏக்கநாயக்க 2/31  

புனித ஜோசப் கல்லூரி (இரண்டாம் இன்னிங்ஸ்) 215/9 (63) – நிபுன் சுமனசிங்க 55, ஜிஹான் பெர்னாண்டோ புள்ளே 36, ஹவின் பெரேரா 24*, ரவிந்து  கொடிதுவக்கு 3/32, பாவித் ரத்னாயக்க  2/66, கழன பெரேரா 2/20, டெலோன் பிரிஸ் 2/60

போட்டி முடிவு : போட்டி சமநிலையில் நிறைவடைந்தது.  புனித ஜோசப் கல்லூரிக்கு முதல் இன்னிங்ஸ் வெற்றி


புனித சில்வஸ்டர் கல்லூரி எதிர் குருகுல கல்லூரி

இவ்விரு அணிகளுக்கிடையிலான போட்டி புனித அன்ஸ் கல்லூரி மைதானத்தில் இன்றைய தினம் ஆரம்பமானது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற குருகுல கல்லூரி, முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது

அந்த வகையில் முதல் இன்னிங்சுக்காக களமிறங்கிய  சில்வஸ்டர் கல்லூரி அணி, பிரவீன் நிமேஷ் மற்றும் மலிந்து விதுரங்கவின் அதிரடி பந்து வீச்சில் சிக்குண்டு 48 ஓட்டங்களுக்குள் சுருண்டது.

சிறப்பாக பந்து வீசிய பிரவீன் நிமேஷ் மற்றும் மலிந்து விதுரங்க ஆகியோர்  தலா மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினர். அதன் பின்னர் களமிறங்கிய  குருகுல கல்லூரி, அசிந்த மல்ஷானின் 69 ஓட்டங்களின் உதவியுடன் 9 விக்கெட் இழப்பிற்கு 23௦ ஓட்டங்களை பெற்று வலுவான நிலையில் உள்ளது.

நாளை போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் இடம்பெறவுள்ள நிலையில், குருகுல கல்லூரிக்கு இன்னிங்ஸ் வெற்றியைப் பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளன.

போட்டியின் சுருக்கம்

புனித சில்வஸ்டர் கல்லூரி: 48 (30.3) – பிரவீன் நிமேஷ் 3/15, மலிந்து விதுரங்க 3/16

குருகுல கல்லூரி: 23௦/9(53) – அசிந்த மல்ஷான் 69, தெஷான் மலிந்த 41, பிருதுவி ருசரா31,