சிங்கர் 19 வயதுக்கு உட்பட்ட முதல் சுற்றுக்கான நான்கு போட்டிகள் நடைபெற்றன. இதில் றோயல் மற்றும் வெஸ்லி கல்லூரிகளுக்கு இடையிலான போட்டியில், றோயல் கல்லுரி பசிந்து சூரியபண்டார ஆட்டமிழக்காமல் பெற்றுக்கொண்ட சதத்துடன் வலுவான நிலையில் உள்ளது. மற்றொரு போட்டியில் 13 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்துள்ள புனித தோமியர் கல்லூரி மிகவும் நெருக்கடியான நிலையிலுள்ளது.

றோயல் கல்லூரி எதிர் வெஸ்லி கல்லூரி

முதல் சுற்றுக்காக B குழுவில், இன்றைய நாள் கொழும்பு SSC விளையாட்டு மைதானத்தில் ஆரம்பித்த இவ்விரு அணிகளுக்கிடையிலான போட்டியில், முதலில் துடுப்பாடிய றோயல் கல்லூரி, பசிந்து சூரியபண்டார ஆட்டமிழக்காமல் பெற்றுக்கொண்ட 108 ஓட்டங்களுடன் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 210 ஓட்டங்களை பெற்று மிகவும் வலுவான நிலையில் உள்ளது.

அதே நேரம் ஹெலித விதானகே 52 ஓட்டங்களையும் தெவிந்து சேனாரத்ன ஆட்டமிழக்காமல் 33 ஓட்டங்களையும் பெற்று அணியின் ஓட்டங்களை உயர்த்தினர்.

வெஸ்லி கல்லூரி சார்பாக பந்துவீச்சில் செனால் தங்கல்ல 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

போட்டியின் சுருக்கம்

றோயல் கல்லூரி (முதல் இன்னிங்ஸ்): 210/4 (58) – பசிந்து சூரியபண்டார 108*, ஹெலித விதானகே 52, தெவிந்து சேனாரத்ன 33*, செனால் தங்கல்ல 3/30


புனித சில்வெஸ்டர் கல்லூரி எதிர் புனித ஜோசப்வாஸ் கல்லூரி, வென்னபுவ

இவ்விருஅணிகளுக்கிடையிலான போட்டி இரண்டாம் நாளாக ஆரம்பித்த நிலையில், சீரற்ற காலநிலை காரணமாக போட்டி முடிவற்ற நிலையில் நிறைவுற்றது. 242 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்த நிலையில் இன்றைய நாள் களமிறங்கிய புனித சில்வெஸ்டர் கல்லூரி 94.5 ஓவர்களுக்கு 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 284 ஓட்டங்களை பெற்றிருந்த நிலையில் ஆட்டத்தை நிறுத்திக்கொண்டது.

தமது முதலாவது இன்னிங்சுக்காக  களமிறங்கிய புனித ஜோசப் வாஸ் கல்லூரி 4 விக்கெட்டுகளை இழந்து 142 ஓட்டங்களை பெற்றிருந்த போது மழையின் குறுக்கீடு காரணமாக ஆட்டதை நிறுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. சிறப்பாக துடுப்பாடிய அசித்த கிஹான் 84 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார்.

போட்டியின் சுருக்கம்

புனித சில்வஸ்டர் கல்லூரி (முதல் இன்னிங்ஸ்): 284/9d (94.5) – மனுஜ பெரேரா 54, அவிந்து ஹேரத் 61, சந்துல ஜயக்கொடி 32, கவிந்து முனவீர 24, நிம்சார ஹேஷான் 55, ஷெஹார ரணதுங்க 4/68, நிபுன் தனஞ்சய 3/112

புனித ஜோசப் வாஸ் கல்லூரி முதல் இன்னிங்ஸ்): 142 / 4 (44) – அசித்த கிஹான் 84, சந்தருவன் பெர்னாண்டோ 21, துசித் சொய்சா 3/39

போட்டி முடிவு : சீரற்ற காலநிலையால் போட்டி முடிவற்ற நிலையில் நிறைவுற்றது.


ஆனந்த கல்லூரி எதிர் புனித பெனடிக்ஸ் கல்லுரி

இவ்விரு அணிகளுக்கிடையிலான போட்டி மழை காரணமாக ஒத்திவைக்கப்பட்டது.


புனித ஜோசப் கல்லூரி எதிர் புனித தோமியர் கல்லூரி

இவ்விரு அணிகளுக்கிடையிலான இரண்டு நாள் கொண்ட கலாச்சார போட்டி, புனித ஜோசப் கல்லூரி மைதானத்தில் இன்று ஆரம்பித்தது. முதலில் துடுப்பாடிய புனித ஜோசப் கல்லூரி, முதல் இன்னிங்சுக்காக 9 விக்கெட்டுகளை இழந்து 217 ஓட்டங்களை பெற்றிருந்த நிலையில் ஆட்டத்தை நிறுத்திக் கொண்டது.

அவ்வணி சார்பாக சிறப்பாக துடுப்பாடிய ஹரின் குரே 49 ஓட்டங்களை பெற்றிருந்த வேளை துரதிஷ்டவசமாக அரை சதம் பெறாமலே ஆட்டமிழந்தார். அதே நேரம் டெலோன் பீரீஸ் 50 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

அதனை தொடர்ந்து களமிறங்கிய புனித தோமியர் கல்லூரி 13 ஓட்டங்களுக்கு  3 விக்கெட்டுகளை இழந்து மிகவும் இக்கட்டான நிலையில் உள்ளது. அதே நேரம் சிறப்பாக பந்து வீசிய ஹரின் குரே  8 ஓட்டங்களுக்கு இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

போட்டியின் சுருக்கம்

புனித ஜோசப் கல்லூரி (முதல் இன்னிங்ஸ்): 217/9d (71.2) –  ஷேவோன் ரசூல்  31, தினித் மதுரவேல 33, சாவோன் பொன்சேக்கா 26, ஹரின் குரே 49, பஹான் பெரேரா 47, டினுற குணவர்தன 1/34, கலன பெரேரா 1/37, டெலோன் பிரீஸ் 3/50, பவித் ரத்னாயக்க 3/33, ரவீந்து  கொடிதுவக்கு 1/16

புனித தோமியர் கல்லூரி (முதல் இன்னிங்ஸ்):  13/ 3 (9) – ரவீந்து கொடிதுவக்கு 11*, ருச்சிர ஏக்கநாயக்க 1/1, ஹரின் குரே 2/8