பாடசாலை அணிகளுக்கு இடையிலான 19 வயதுக்குட்பட்ட சிங்கர் கிண்ண பிரிவு l க்கான இரண்டு நாட்களைக் கொண்ட கிரிக்கெட் போட்டித் தொடரின் இறுதிப் போட்டி நேற்று ஆரம்பமாகியது.

இதில் அவிந்து தீக்ஷன மற்றும் சந்துன் மென்டிஸ் ஆகியோரின் அதிரடி ஆட்டத்தின் மூலம், நெருக்கடியில் இருந்த காலி ரிச்மண்ட் கல்லூரி, ஆனந்த கல்லூரிக்கு எதிராக 307 ஓட்டங்களைப் பெற்று வலுவான நிலையிலுள்ளது.

லங்கஷைர் அணிக்காக ஒப்பந்தமாகும் மஹேல ஜயவர்தன

இந்த பருவகாலத்திற்கான இங்கிலாந்தின் T-20 ப்ளாஸ்ட் (T-20 Blast) தொடரில்…

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ரிச்மண்ட் கல்லூரியின் அணித் தலைவர் கமிந்து மென்டிஸ் துடுப்பாட்டத்துக்கு உகந்த இந்த களத்தில் முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்தார். அதன்படி, முதலில் களமிறங்கிய அவ்வணி எதிர்பாராத வகையில் அணித் தலைவர் கமிந்து மென்டிஸ் மற்றும் அதிரடித் துடுப்பாட்ட வீரர் தனஞ்சய லக்ஷான் உள்ளடங்கலாக 22 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து நெருக்கடியில் வீழ்ந்தது.

அதனைத் தொடர்ந்து களமிறங்கிய  அவிந்து தீக்ஷன மற்றும் தவீஷ அபிஷேக் ஆகியோர் இணைந்து நிதானமாக துடுப்பாடி ஐந்தாவது விக்கெட்டுக்காக தங்களுக்கிடையே 76 ஓட்டங்களைப் பகிர்ந்து கொண்ட நிலையில் அணியின் ஓட்டங்களை சற்று உயர்த்தியிருந்தனர்.

எனினும் முக்கியமான தருணத்தில் போட்டி மதிய போசன இடைவேளைக்கு நிறுத்தப்படும் வேளை 81 பந்துகளுக்கு முகம் கொடுத்திருந்த தவீஷ அபிஷேக் 46 ஓட்டங்களுக்கு துரதிஷ்டவசமாக ஆட்டமிழந்து சென்றார்.

அதேவேளை, அண்மையில் நிறைவடைந்த மாகாண ரீதியிலான 19 வயதுக்குட்பட்ட சம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில், தென் மாகாண அணிக்கு வெற்றியை சுவீகரிக்க பங்களிப்பு செய்திருந்த இடது கை துடுப்பாட்ட வீரர் அவிந்து தீக்ஷன, நடுவரிசை துடுப்பாட்ட வீரரான ரவிஷ்க விஜேசிறியுடன் இணைந்து 36 ஓட்டங்களைப் பகிர்ந்துகொண்ட அதேவேளை, தனது அரைச் சதத்தினையும் பதிவு செய்தார்.

>> புகைப்படங்களைப் பார்வையிட  <<

எனினும்,  சுழல் பந்து வீச்சாளர் சுபுன் வராகொட ரவிஷ்க விஜேசிறியை ஆட்டமிழக்கச் செய்ததன் மூலம் தனது போட்டித் தொடரின் 21ஆவது விக்கெட்டைப் பதிவு செய்தார்.

அதனையடுத்து புதிய வீரரான தாரக்க அவிந்து 7ஆவது விக்கெட்டுக்காக தீக்ஷனவுடன் இணைந்து கொண்ட வேளையில் ரிச்மண்ட் கல்லூரி 200 ஓட்டங்களை நெருங்கியிருந்தது.

தேநீர் இடைவேளைக்கு பின்னர் ஆனந்த கல்லூரி மேலும் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தியது.  அவிந்து தீஷன, வராகொடவின் பந்து வீச்சில் LBW முறையில் ஆட்டமிழந்து சென்றார். சிறப்பாக துடுப்பாடியிருந்த அவர் 160 பந்துகளை எதிர்கொண்டு 10 பவுண்டரிகள் உள்ளடங்கலாக  80 ஓட்டங்களை பதிவு செய்திருந்தார்.

சம்பியன் பட்டதை சுவீகரித்த தென் மாகாணம்

இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் ஏற்பாட்டில் 19 வயதுக்கு உட்பட்ட..

நேற்றைய நாள் நிறைவின்போது, சகலதுறை ஆட்டக்காரர் மற்றும் அணித் தலைவரின் சகோதரரான சந்துன் மென்டிஸ் மற்றும் விக்கெட் காப்பாளர் துவீன் கலன்சூரிய இணைந்து பிரிக்கப்படாத 105 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்றுக்கொண்திருந்த நிலையில், ரிச்மண்ட் கல்லூரி 8 விக்கெட் இழப்பிற்கு  307 ஓட்டங்களை பதிவு செய்திருந்தது.

சிறப்பாக துடுப்பாடிய மென்டிஸ் ஆட்டமிழக்காமல் 99 பந்துகளுக்கு 64 ஓட்டங்களுடனும், துவீன் கலன்சூரிய  36  ஓட்டங்களுடனும் களத்தில் உள்ளனர்.

அதேவேளை, இன்றைய தினம் சிறப்பாக பந்து வீசிய வராகொட 91 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளையும்  இடது கை சுழல்பந்து வீச்சாளர் அசெல் சிகர 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றியிருந்தனர்.

இன்று போட்டியின் இரண்டாம் நாளாகும்

போட்டியின் சுருக்கம்

ரிச்மண்ட் கல்லூரி  – 307/8  (95 ஓவர்கள்) – அவிந்து தீக்ஷன  80, சந்துன் மென்டிஸ் 64*, தவீஷ அபிஷேக் 46, துவீன் குலசுரிய 36*, கசுன் தாரக்க  25, சுபுன் வராகொட  4/91, அசெல் சிகர 2/80.