யாழ். இந்துவை இன்னிங்ஸால் வீழ்த்திய புனித. பத்திரிசியார் அணி

79

சிங்கர் நிறுவனம் நடாத்தும் 19 வயதுக்குட்பட்ட பிரிவு 3 (டிவிஷன் – III) பாடசாலை அணிகளுக்கு இடையிலான இரண்டு நாட்கள் கொண்ட கிரிக்கெட் தொடரின் போட்டி ஒன்றில், யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரி அணி, யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அணியினை இன்னிங்ஸ் மற்றும் 53 ஓட்டங்களால் வீழ்த்தியுள்ளது. 

நேற்று (2) யாழ். பத்திரிசியார் கல்லூரியின் சொந்த மைதானத்தில் ஆரம்பமான இப்போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற யாழ். இந்துக் கல்லூரி அணி முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தினை மைதான சொந்தக்காரர்களுக்கு வழங்கியது. 

ஆனந்தா கல்லூரியை வீழ்த்தி சிவகுருநாதன் கிண்ணத்தை வென்ற யாழ் இந்து

கொழும்பு ஆனந்தா கல்லூரி மற்றும்…..

இதன்படி, முதலில் துடுப்பாடிய யாழ். புனித பத்திரிசியார் கல்லூரி அணி 67.2 ஓவர்களில் 9 விக்கெட்டுக்களை இழந்து 272 ஓட்டங்களை குவித்திருந்த போது தமது முதல் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தை நிறைவு செய்தது. 

அவ்வணியின் துடுப்பாட்டம் சார்பாக A. அய்வான் சதம் தாண்டி 105 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார். இதேநேரம், ஜனிசியஸ் அரைச்சதம் பெற்று 55 ஓட்டங்களை குவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

மறுமுனையில் யாழ். இந்துக் கல்லூரி அணியின் பந்துவீச்சில் கஜநாத் 3 விக்கெட்டுக்களை சாய்க்க, விருந்தாவன் 2 விக்கெட்டுக்களை சுருட்டியிருந்தார். 

இதன் பின்னர் தமது முதல் இன்னிங்ஸில் துடுப்பாடிய யாழ். இந்துக் கல்லூரி அணி 69 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து வெறும் 153 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டது. 

இந்துக்கல்லூரி அணியின் துடுப்பாட்டம் சார்பில் விருந்தாவன் 37 ஓட்டங்களை பெற்றதோடு, ஏற்கனவே யாழ். பத்திரிசியார் கல்லூரிக்காக அரைச்சதம் தாண்டிய ஜனிசியஸ் வெறும் 45 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுக்களை சாய்த்து திறமையினை வெளிப்படுத்தியிருந்தார். 

யாழ். இந்துக் கல்லூரியை இன்னிங்ஸால் வீழ்த்திய கொக்குவில் இந்து!

சிங்கர் 19 வயதுக்குட்பட்ட பாடசாலை……

இதன் பின்னர் இந்துக்கல்லூரி அணி தமது முதல் இன்னிங்ஸில் பெற்ற ஓட்டங்கள் போதாது என்பதால் பலோவ் ஒன் முறையில் மீண்டும் தமது இரண்டாம் இன்னிங்ஸில் எதிரணியை விட 120 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் துடுப்பாடியது. 

இரண்டாம் இன்னிங்ஸிலும் மிகப் பெரிய துடுப்பாட்ட அனர்த்தம் ஒன்றை சந்தித்த யாழ். இந்துக் கல்லூரி வீரர்கள் 25.5 ஓவர்களில் 66 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து போட்டியில் இன்னிங்ஸால் தோல்வி அடைந்தனர். 

இந்துக் கல்லூரி அணியினை இரண்டாம் இன்னிங்ஸில் துடுப்பாட்டத்தில் திணறச் செய்த புனித. பத்திரிசியார் அணியின் பந்துவீச்சு சார்பில் ஜனிசியஸ் மீண்டும் 5 விக்கெட்டுக்களை சாய்க்க, A. டேஸ்வின் 2 விக்கெட்டுகளை சுருட்டியிருந்தார்.  

போட்டியின் சுருக்கம்

புனித பத்திரிசியார் கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 272/9d (67.2) A. அய்வான் 105, ஜனிசியஸ் 55, டேத்வின் 43, கஜாநாத் 367, விருந்தாவன் 231

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 153 (69) விருந்தாவன் 37, ஜனிசியஸ் 6/45, சௌதிஜன் 2/15

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி (இரண்டாம் இன்னிங்ஸ்) f/o – 66 (25) ஜனிசியஸ் 5/37, A. டேஸ்வின் 2/07

முடிவு – புனித பத்திரிசியார் கல்லூரி இன்னிங்ஸ் மற்றும் 53 ஓட்டங்களால் வெற்றி 

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளை படிக்க<<