IAAFஇன் புதிய விதிமுறைகளில் இருந்து தப்பிய இலங்கை வீரர்கள்

176

ஒலிம்பிக் மற்றும் உலக மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடர்களை உள்ளடக்கிய முக்கிய போட்டித் தொடர்களில் இனிவரும் காலங்களில் தகுதியினைப் பெற்றுக்கொள்வதற்ககாக உலக மெய்வல்லுனர் சம்மேளனத்தினால் வீரர்களுக்காக அண்மையில் அறிமுகம் செய்யப்பட்ட புதிய நடைமுறைகளை தற்காலிகமாக கைவிடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அடுத்த வருடம் கட்டாரில் நடைபெறவுள்ள 17ஆவது உலக மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடரிற்கான டிக்கெட் விற்பனை கடந்த 11ஆம் திகதி நடைபெற்றது. இதன்போதே குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.

சர்வதேச மெய்வல்லுனர் சம்மேளனத்தினால் மெய்வல்லுனர் வீரர்களுக்கும் தரப்படுத்தல்

ஒலிம்பிக் மற்றும் உலக மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் …

இதன்படி, அடுத்த வருடம் கட்டாரில் நடைபெறவுள்ள உலக மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடரில் பங்குபற்றும் வாய்ப்பு இலங்கை வீரர்களுக்கும் கிட்டவுள்ளது.

உலகம் பூரகவுள்ள மெய்வல்லுனர் வீரர்கள், தொழில்நுட்ப அதிகாரிகள் உள்ளிட்டோர் வீரர்களுக்கான புதிய தரப்படுத்தல் முறைமைக்கு ஆதரவு தெரிவித்திருந்தனர். அத்துடன், புள்ளிகளைக் கொண்ட இந்தப் புதிய முறைமைக்கு மிகப் பெரிய அளவில் வரவேற்பு கிடைத்து இருந்தாலும் ஒருசில மாற்றங்கள் செய்யப்படவுள்ளன.

அதேபோல, இந்தப் புதிய சிக்கலான தகுதி முறை அல்லது வீரர்களுக்கான புள்ளிகள் வழங்கப்படும் முறைமையை பயிற்றுவிப்பாளர்கள் மற்றும் வீரர்கள் நன்றாகப் பரீட்சயமாக்கிக் கொள்ளும் நோக்கில் இவ்வாறு தற்காலிகமாக கைவிடுவதற்கு சர்வதேச மெய்வல்லுனர் சம்மேளனம் தீர்மானித்துள்ளது.

எதிர்வரும் காலங்களில் நடைபெறவுள்ள உலக மெய்வல்லுனர் போட்டிகளில் வீரர்களுக்கான தரப்படுத்தல் முறைமையை நடைமுறைப்படுத்த எதிர்பார்த்துள்ளோம். ஆனால், இதன் பிரதிபலனைப் பெற்றுக்கொள்வதற்கு இன்னும் சில காலங்கள் செல்லும் என தான் எதிர்பார்ப்பதாக சர்வதேச மெய்வல்லுனர் சம்மேளனத்தின் தலைவர் செபெஸ்டியன் கோ தெரிவித்தார்.

அன்று கார் மெக்கானிக்; இன்று சாதனை வீரராக மாறிய மலையகத்தின் சண்முகேஸ்வரன்

மன நிம்மதியையும், சந்தோஷத்தையும் …

பயிற்றுவிப்பாளர்கள் மற்றும் வீரர்களின் நலன்கருதி வீரர்களுக்கான புதிய நடைமுறைகளை தற்காலிகமாக கைவிடுதவதற்கு நடவடிக்கை எடுத்தோம். எனவே, அடுத்த வருடம் கட்டாரில் நடைபெறவுள்ள உலக மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடருக்கு பழைய முறைப்படி வீரர்கள் தெரிவுசெய்யப்படுவர். எனவே, அனைத்து தரப்பினரதும் நம்பிக்கையைப் பெற்றுக்கொண்ட பிறகு இதை விரைவில் நடைமுறைப்படுத்துவதற்கு எதிர்பார்த்துள்ளோம் எனவும் அவர் தெரிவித்தார்.

இதன்படி, 2019ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உலக மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடரிற்காக தகுதியினைப் பெற்றுக்கொள்வதற்கான பழைய நடைமுறையும் நேற்று (12) உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதன்படி, நான்கு முறைகளில் வீரர்கள் இத்தொடருக்காக தகுதியினைப் பெற்றுக்கொள்ள முடியும்.

  1. தகுதியினைப் பெற்றுக்கொள்வதற்கான காலப்பகுதியில் உரிய அடைவுமட்டத்தினைப் பூர்த்தி செய்திருத்தல் வேண்டும்.
  1. உள்ளூரில் நடைபெறும் தனிநபர் போட்டிகளில் (மரதன் தவிர) திறமைகளை வெளிப்படுத்தி உரிய அடைவுமட்டத்தினைப் பூர்த்தி செய்தல்.
  1. வைல்ட் கார்ட் (Wild Card) முறையில் அல்லது நடப்பு உலக சம்பியனாகவும், 2019 டயமன்ட் லீக் மெய்வல்லுனர் போட்டித் தொடரில் அல்லது சர்வதேச மெய்வல்லுனர் சம்மேளனத்தினால் நடத்தப்படுகின்ற சம்மெட்டி எறிதல் போட்டியில் வெற்றி பெறுகின்ற அல்லது வேகநடைப் போட்டியில் அல்லது கலவை போட்டி நிகழ்ச்சிகளில் வெற்றியாளர்களுக்கு வாய்ப்பு கிட்டும். ஆனால், இந்த முறையில் ஒரு நாட்டுக்கு ஒரேயொரு போட்டியாளரை மாத்திரம் களமிறக்க முடியும்.

தேசிய மரதன் ஓட்ட நட்சத்திரம் ஹிருனிக்கு அமெரிக்காவில் மற்றுமொரு வெற்றி

அமெரிக்காவில் வசித்து வரும் இலங்கை மரதன் ஓட்ட …

  1. தகுதியைப் பெற்றுக்கொள்வதற்காக வழங்கப்பட்டுள்ள காலப்பகுதியில் சர்வதேச மெய்வல்லுனர் சம்மேளனத்தின் சிறந்த வீரர்களுக்கான பட்டியலில் இடம்பெற்றிருத்தல் வேண்டும். (10 ஆயிரம், மரதன், வேகநடைப் போட்டிகளைத் தவிர)

உரிய போட்டிகளில் பங்குபற்றவுள்ள வீரர்கள் எண்ணிக்கை தெரிவு போட்டிகளின் ஊடாக உள்ளடக்கப்படாவிட்டால் Rolldown System முறையில் அதிகூடிய திறமைகளை வெளிப்படுத்திய வீரர்கள் பட்டியலில் இருந்து குறித்த போட்டியில் பங்குபற்றுகின்ற வீரர்கள் எண்ணிக்கை தீர்மானிக்கப்படும்.

இதேநேரம், 2019ஆம் ஆண்டு யகஹோமாவில் நடைபெறவுள்ள IAAF அஞ்லோட்டப் போட்டியில் சிறந்த காலத்தைப் பதிவு செய்கின்ற அணிகளுக்கு மாத்திரம் உலக மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடரில் வாய்ப்பு வழங்கப்படும்.

இதேவேளை, சர்வதேச மெய்வல்லுனர் சம்மேளனத்தின் உறுப்புரிமையைப் பெற்றுக்கொண்ட நாடொன்றைச் சேர்ந்த எந்தவொரு வீரரும் குறித்த போட்டித் தொடருக்காக தகுதியினைப் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு கிடைக்காவிட்டால், அவ்வாறு அடைவுமட்டத்தினைப் பூர்த்தி செய்யாத ஒரேயொரு வீரரை மாத்திரம் போட்டிகளில் பங்குபற்றச் செய்ய முடியும்.

இதுஇவ்வாறிருக்க, அடுத்த வருடம் நடைபெறவுள்ள உலக மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடரில் பங்குபெறும் வாய்ப்பை இலங்கையின் நட்சத்திர மரதன் ஓட்ட வீராங்கனையான ஹிருனி விஜேரத்ன மாத்திரம் பெற்றுக்கொண்டுள்ளார். அமெரிக்காவில் அண்மையில் நிறைவுக்கு வந்த இந்தியானாபொலிஸ் மரதன் ஓட்டப் போட்டியில் பங்குபற்றி அவர் 2ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் ஆசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடரும் கட்டாரில் நடைபெறவுள்ளது. இதில் இலங்கை மெய்வல்லுனர் வீரர்களும் பங்குபற்றவுள்ள அதேநேரம், 4X400 அஞ்சலோட்ட அணி, ஆண்களுக்கான நீளம் பாய்தல், ஆண்களுக்கான ஈட்டி எறிதல் ஆகிய போட்டிகளில் உலக மெய்வல்லுனர் போட்டித் தொடரிற்கான தகுதியினை இலங்கை வீரர்கள் பெற்றுக்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.  

மேலும் பல சுவையான செய்திகளைப் படிக்க…