ஹேனகம மத்திய கல்லூரியிடம் தோல்வியடைந்த சென். ஜோன்ஸ் கல்லூரி

 

சிங்கர் நிறுவனத்தின் அனுசரணையோடு 19 வயதுக்கு உட்பட்ட டிவிஷன் – II பாடசாலைகள் இடையில் நடைபெறும் இரண்டு நாட்கள் கொண்ட கிரிக்கெட் தொடரின் போட்டி ஒன்றில் யாழ்ப்பாணம் சென். ஜோன்ஸ் கல்லூரி அணியை ஹேனகம மத்திய கல்லூரி 9 விக்கெட்டுக்களால் தோற்கடித்துள்ளது.

நேற்று (10) யாழ். சென் ஜோன்ஸ் கல்லூரியின் சொந்த மைதானத்தில் ஆரம்பமாகிய இப்போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற மைதானச் சொந்தக்காரர்கள் முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தை தமக்காக பெற்றுக்கொண்டனர். 

இரண்டாவது முறையும் சம்பியன் பட்டம் வென்ற பன்சேனை பாரி வித்தியாலயம்

மட்டக்களப்பு அம்பிளாந்துறை கலைமகள்…

அதன்படி, முதலில் துடுப்பாடிய யாழ். சென் ஜோன்ஸ் கல்லூரி அணியினர் தமது முதல் இன்னிங்ஸில் 43.2 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து 142 ஓட்டங்களை பெற்றுக்கொண்டனர். யாழ். சென் ஜோன்ஸ் கல்லூரி அணியின் சார்பில் பிரசன்னா தனுஜன் 35 ஓட்டங்களை குவித்திருக்க ஹேனகம மத்திய கல்லூரிக்காக ஷெஹான் லக்ஷன் 4 விக்கெட்டுக்களை கைப்பற்றியிருந்தார்.

இதன் பின்னர் தமது முதல் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தை ஆரம்பித்த ஹேனகம மத்திய கல்லூரி அணி, 175 ஓட்டங்களை குவித்துக் கொண்டது. ஹேனகம மத்திய கல்லூரி அணியின் துடுப்பாட்டம் சார்பில் ஜனித் மதுஹன்ஷ அரைச்சதம் தாண்டி 59 ஓட்டங்களை பெற்றிருக்க, திலின சத்துரங்க 48 ஓட்டங்களை குவித்திருந்தார்.

அதேநேரம், சென்.ஜோன்ஸ் கல்லூரி அணிக்கு யோகதாஸ் செனுதாஸ் 3 விக்கெட்டுக்களையும், அன்டோன் அபிஷேக் 2 விக்கெட்டுக்களையும் கைப்பற்றியிருந்தனர்.

Photos: St John’s College, Jaffna vs Henegama Central College | U19 Division II Cricket Tournament 2019/20

தொடர்ந்து 33 ஓட்டங்கள் பின்தங்கியவாறு தமது இரண்டாம் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தை ஆரம்பம் செய்த சென். ஜோன்ஸ் கல்லூரி அணி எதிரணி வீரர்களின் சிறந்த பந்துவீச்சு காரணமாக மிகப்பெரிய துடுப்பாட்ட அனர்த்தம் ஒன்றை சந்தித்து 36 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்தது. 

யாழ். சென் ஜோன்ஸ் கல்லூரிக்கு எதிராக மிகச்சிறந்த பந்துவீச்சினை வெளிப்படுத்திய ஹேனகம கல்லூரி அணியின் பந்துவீச்சு சார்பில் சமித் விஜேயநாயக்க 6 விக்கெட்டுக்களை சுருட்டியிருந்தார். இதேநேரம், ஷெஹான் லக்ஷான் 3 விக்கெட்டுக்களை கைப்பற்றியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் T20 லீக் தொடரொன்று இல்லாமை கவலையளிக்கிறது – தசுன் ஷானக்க

இலங்கையைப் பொறுத்தமட்டில் வெளிநாட்டு…

பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 4 ஓட்டங்களை அடைய பதிலுக்கு இரண்டாம் இன்னிங்ஸில் துடுப்பாடிய ஹேனகம மத்திய கல்லூரி அணி ஒரு விக்கெட்டினை இழந்து வெற்றி இலக்கினை அடைந்தது.

போட்டியின் சுருக்கம்

யாழ். சென் ஜோன்ஸ் கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 142 (43.2) – பிரசன்னா தனுஜன் 35, செஹான் லக்ஷன் 4/35, பப்சார அதிகார 2/13, சமித் விஜேநாயக்க 2/14

ஹேனகம மத்திய கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 175 (53.3) – ஜனித் மதுஹன்ச 59, திலின சத்துரங்க 48, யோகதாஷ் விதுசன் 3/42, அன்டோன் அபிஷேக் 2/16

யாழ். மத்திய கல்லூரி (இரண்டாம் இன்னிங்ஸ்) – 36 (16.4) – சமித் விஜேநாயக்க 6/21, செஹான் லக்ஷன் 3/06

ஹேனகம மத்திய கல்லூரி (இரண்டாம் இன்னிங்ஸ்) – 4/1 (2.3)

முடிவு – ஹேனகம மத்திய கல்லூரி 9 விக்கெட்டுக்களால் வெற்றி 

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<