மேஜர் லீக்கில் துடுப்பாட்டத்தில் அசத்திய மெதிவ்ஸ், சந்திமால், மெண்டிஸ்

817

இலங்கை கிரிக்கெட் சபையின் ஏற்பாட்டில் நடைபெற்று வரும் மேஜர் லீக் கிரிக்கெட் தொடரின் சுப்பர் 8 மற்றும் ப்ளேட் சுற்றுக்கான 7 போட்டிகள் கடந்த மூன்று நாட்கள் நடைபெற்றுவந்த நிலையில், இன்றைய தினம் நிறைவுப்பெற்றன.

கொழும்பு கிரிக்கெட் கழகம் எதிர் றாகம கிரிக்கெட் கழகம் (சுப்பர் 8)

றாகம அணிக்கு எதிராக கட்டுநாயக்க மேரியன்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில், குசல் மெண்டிஸ், மினோத் பானுக மற்றும் வனிந்து ஹசரங்க ஆகியோரின் அதிரடி துடுப்பாட்டம் மற்றும் மலிந்த புஷ்பகுமாரவின் சிறந்த பந்துவீச்சின் ஊடாக கொழும்பு கிரிக்கெட் கழக அணி இன்னிங்ஸ் மற்றும் 125 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது.

இலங்கை – பங்களாதேஷ் டெஸ்ட் தொடர் ஒக்டோபரில்

சுருக்கம்

கொழும்பு கிரிக்கெட் கழகம் – 499/7d (117), குசல் மெண்டிஸ் 139, மினோத் பானுக 88, வனிந்து ஹசரங்க 88, அஷான் ப்ரியன்ஜன் 58, லஹிரு மதுசங்க 57*, பினுர  பெர்னாண்டோ 4/72

றாகம கிரிக்கெட் கழகம் – 132 (41.2), ஜனித் லியனகே 43*, மலிந்த புஷ்பகுமார 4/35, லஹிரு மதுசங்க 2/16

றாகம கிரிக்கெட் கழகம் (F) – 242 (58.3), ஜனித் லியனகே 50*, ரொஷேன் சில்வா 41, மலிந்த புஷ்பகுமார 4/55

முடிவு – கொழும்பு கிரிக்கெட் கழகம் இன்னிங்ஸ் மற்றும் 25 ஓட்டங்களால் வெற்றி

சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம் எதிர் BRC கிரிக்கெட் கழகம் (சுப்பர் 8)

கொழும்பு சிசி மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியானது மூன்றாவது நாள் ஆட்டநேர நிறைவிலும் முடிவுக்கு வராத காரணத்தால், போட்டி சமனிலையில் நிறைவுபெற்றது.

சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம் – 195/10 (47.2), ஓசத பெர்னாண்டோ 42, புலின தரங்க 40, பானுக ராஜபக்ஷ 3/26

BRC கிரிக்கெட் கழகம் – 87 (41.2), டேஷான் டையஸ் 24, அஷித பெர்னாண்டோ 4/42

சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம் – 385/8d (89.2), கமிந்து மெண்டிஸ் 150*, கசுன் விதுர 87, பானுக ராஜபக்ஷ 3/60

BRC கிரிக்கெட் கழகம் – 231/8 (80), டிஸான் டி ஷொய்சா 105, கமிந்து மெண்டிஸ் 4/43

முடிவு – போட்டி சமனிலை

இலங்கை தொடரில் விளையாடுவாரா சகிப் அல் ஹசன்?

இலங்கை இராணுவ விளையாட்டு கழகம் எதிர் NCC கழகம் (சுப்பர் 8)

எஸ்.எஸ்.சி. கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில், லஹிரு உதார, உபுல் தரங்க, தினேஷ் சந்திமால் மற்றும் துலின டில்ஷான் ஆகியோர் சதங்களை விளாசியிருந்த போதும், ஆட்டநேர முடிவின் காரணமாக போட்டி சமனிலையில் முடிவடைந்தது.

சுருக்கம்

இலங்கை இராணுவ விளையாட்டு கழகம் – 269/10 (84.1), ஜனித் சில்வா 54, அசேல குணரத்ன 50, டிலேஸ் குணரத்ன 5/42

NCC கழகம் – 417/7d (88), உபுல் தரங்க 121, லஹிரு உதார 105, மஹேல உடவத்த 77, சீகுகே பிரசன்ன 3/91

இலங்கை இராணுவ விளையாட்டு கழகம் – 255/3 (60), தினேஷ் சந்திமால் 129, துலின டில்ஷான் 116, டிலேஸ் குணரத்ன 2/13

முடிவு – போட்டி சமனிலை


கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் எதிர் செரசென்ஸ் விளையாட்டு கழகம் (சுப்பர் 8)

கோல்ட்ஸ் கிரிக்கெட் கழக அணியின் அஞ்செலோ மெதிவ்ஸ் மற்றும் சந்துஸ் குணதிலக்க ஆகியோர் சதமடித்து பிரகாசிக்க போதும், செரசென்ஸ் அணிக்கு எதிரான இந்தப் போட்டி சமனிலையில் முடிவடைந்தது.

சுருக்கம்

கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் – 408/6d (128.2), அஞ்செலோ மெதிவ்ஸ் 173*, சந்துஸ் குணதிலக்க 100, அவிஷ்க பெர்னாண்டோ 66, கசுன் ராஜித 3/85

செரசென்ஸ் கிரிக்கெட் கழகம்  – 182 (81.2), அமரசிங்க 45, நிசால தாரக 3/34

கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் – 106/3 (40), நவிந்து விதானகே 34*, அகில தனன்ஜய 2/19

முடிவு – போட்டி சமனிலை

Video – LPL இல் களமிறங்கும் நட்சத்திரங்கள்|Sports RoundUp – Epi 127

லங்கன் கிரிக்கெட் கழகம் எதிர் நீர்கொழும்பு கிரிக்கெட் கழகம் (ப்ளேட்)

மொறட்டுவையில் நடைபெற்ற இந்தப் போட்டியில், லங்கன் கிரிக்கெட் கழக அணியை எதிர்கொண்ட நீர்கொழும்பு கிரிக்கெட் கழகம் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

லங்கன் கிரிக்கெட் கழகம் – 270/10 (68.2), சானக ருவான்சிறி 124, லஹிரு டில்ஷான் 43, லக்ஷித மானசிங்க 5/85

நீர்கொழும்பு கிரிக்கெட் கழகம்  – 238/10 (69.2), மாதவ வர்ணபுர 64, ரொஸ்கோ தட்டில் 63, அஷேன் சில்வா 53, துனித் வெல்லாலகே 3/63

லங்கன் கிரிக்கெட் கழகம் – 111/10 (50.3), ரிசித் உப்மல், 36, சானக ருவான் சிறி 30, உபுல் இந்தரசிறி 5/34

நீர்கொழும்பு கிரிக்கெட் கழகம்  – 147/5 (36.5), ரொஸ்கோ தட்டில் 38, மாதவ வர்ணபுர 33, துனித் வெல்லாலகே 3/60

முடிவு – நீர்கொழும்பு கிரிக்கெட் கழகம் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

பதுரெலிய கிரிக்கெட் கழகம் எதிர் மூர்ஸ் கிரிக்கெட் கழகம் (ப்ளேட்)

கொழும்பு கோல்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியானது, ஆட்டநேர நிறைவின் காரணமாக சமனிலையுடன் நிறைவுபெற்றது.

மூர்ஸ் கிரிக்கெட் கழகம் – 340/10 (100.2), அயன ஸ்ரீவர்தன 83, அதீச திலன்சன 53, லஹிரு சமரகோன் 5/86

பதுரெலிய கிரிக்கெட் கழகம் – 149/10 (45.5), சாலிந்த உஷான் 67, கவிஷ்க அஞ்சுல 5/39

மூர்ஸ் கிரிக்கெட் கழகம்  – 305/6d (69.1), ரமேஷ் மெண்டிஸ் 61, சச்சித்ர சேரசிங்க 60, நிபுன் கருணாநாயக்க 58, லஹிரு சமரகோன் 2/33

பதுரெலிய கிரிக்கெட் கழகம் – 120/9 (40), டுஷான் ஹேமந்த 43, கவிஷ்க அஞ்சுல 6/35

முடிவு – போட்டி சமனிலை

புதிய விளையாட்டுத்துறை அமைச்சராக நாமல் ராஜபக்ஷ நியமனம்

எஸ்.எஸ்.சி. எதிர் தமிழ் யூனியன் கிரிக்கெட் மற்றும் மெய்வல்லுனர் கழகம் (ப்ளேட்)

கொழும்பு NCC மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில், இரண்டு அணிகளதும் துடுப்பாட்ட வீரர்கள் சமபலமான முறையிலான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில், போட்டி சமனிலையில் முடிவடைந்தது.

எஸ்.எஸ்.சி. கிரிக்கெட் கழகம் – 254/10 (77.5), சச்சித்ர சேனாநாயக்க 83, ஆகாஸ் சேனாரத்ன 37, சுரங்க லக்மால் 4/36

தமிழ் யூனியன்  – 349 (102.4), ரமித் ஜயசேன 82, நவோத் பர்ணவிதான 71, தனன்ஜய டி சில்வா 53, சச்சித்ர சேனாநாயக்க 3/63

எஸ்.எஸ்.சி. கிரிக்கெட் கழகம் – 271/5 (63), சரித் அசலங்க 94, சந்துன் வீரகொடி 68, மதுக லியனபதிரனகே 2/51

முடிவு – போட்டி சமனிலை

>>மேலும் கிரிக்கெட் செய்திகளை படிக்க<<