லசித் உடகேயின் அதிரடி பந்து வீச்சினால் புனித மரியார் கல்லூரிக்கு இன்னிங்ஸ் வெற்றி

239
U19 Schools Cricket Roundup 02

இன்றைய தினம் முடிவுற்ற, பாடசாலை கிரிக்கெட் அணிக்ளுக்கு இடையிலான தொடரின் மூன்று போட்டிகளில் செர்வாடியஸ் கல்லூரி மற்றும் கொழும்பு இசிபதன கல்லூரிகள் முதல் இன்னிங்சில் வெற்றி பெற்ற அதேவேளை, நேற்றும் இன்றும் தலா ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்திய லசித் உடகேவின்  அதிரடி பந்து வீச்சின் மூலம் கேகாலை, புனித மரியார் கல்லூரி இலகுவாக வெற்றியீட்டியது.

வத்தளை, புனித அந்தோனியர் கல்லூரி எதிர் புனித மரியார் கல்லூரி

இவ்விரு அணிகளுகிடையிலான போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டத்தில் லசித் உடகேயின் அதிரடி பந்து வீச்சின் மூலம் கேகாலை, புனித மரியார் கல்லூரி இன்னிங்ஸ் மற்றும் ஒரு ஓட்டத்தினால் வத்தளை புனித அந்தோனியர் கல்லூரியை வெற்றியீட்டியது.

184 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்த நிலையில் இரண்டாம் நாளாக இன்று துடுப்பாட்டத்தை தொடர்ந்த மரியார் கல்லூரி, சஞ்சய ரஞ்சித் மற்றும் ரிஷாத் ரஹிம் ஆகியோரின் பங்களிப்புடன் முதல் இன்னிங்சுக்காக சகல விக்கெட்டுகளையும் இழந்து 263 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. அதேநேரம், மறுமுனையில்  சிறப்பாக பந்து வீசிய ஷங்க மதுபஷன 65 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

அதனையடுத்து, முதல் இன்னிங்சில் 149 ஓட்டங்களால் பின்னிலையுற்ற நிலையில், கடினமான இலக்கை நோக்கி துடுப்பாடிய புனித அந்தோனியர் கல்லூரி, லசித் உடகேயின் அதிரடி பந்து வீச்சில் 148 ஓட்டங்களுக்கு சுருண்டது. கூடிய ஓட்டங்களாக ருக்ஷான் ரொட்ரிகோ மற்றும் அவிஷ்க தரிந்து முறையே 39 மற்றும் 38 ஓட்டங்களை பதிவு செய்தனர்.

அதேவேளை, முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அந்தோனியர் கல்லூரியை 114 மட்டுப்படுத்திய லசித் உடகே இரண்டாவது இன்னிங்சிலும் 59 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை வீழ்த்தி வெற்றிக்கு வழிவகுத்தார்.

போட்டியின் சுருக்கம்

புனித அந்தோனியர் கல்லூரி : 114 (48.3) – அரிந்து பசிந்து 36, ருக்ஷான் ரொட்ரிகோ 26,  எறங்க மதுஷான் 20, லசித் உடகே 5/33, 2/18 றிசாட் ரஹிம்

புனித மரியார் கல்லூரி, கேகாலை : 263 (71.4) சந்தரு ஷ்ரியசாந்த 41, சுஜித் குமார 39, திமிர குமார  25, லசித் உடகே 25, சஞ்சய ரஞ்சித் 23, ரிஷாத் ரஹிம் 21, ஷங்க மதுபஷன 5/65, கவிந்து மதுக்க 3/55

புனித அந்தோனியர் கல்லூரி (இரண்டாம் இன்னிங்ஸ்) : 148 (48.3) ருக்ஷான் ரொட்ரிகோ 39, அவிஷ்க தரிந்து 38, கவீஷ துலஞ்சன 20, லசித் உடகே 5/59

போட்டி முடிவு : இன்னிங்ஸ் மற்றும் ஒரு ஓட்டத்தால் கேகாலை புனித மரியார் கல்லூரி வெற்றி


புனித செர்வாடியஸ் கல்லூரி எதிர் டி மெசனொட் கல்லூரி

நேற்றைய தினம் 89 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்த டி மெசனொட் கல்லூரி, இன்றைய தினம் களமிறங்கிய நிலையில் முதல் இன்னிங்ஸ் வெற்றியை 5 ஓட்டங்களால் தவறவிட்டது. 147 ஓட்டங்களை இலக்காகக் கொண்டு களமிறங்கிய அவ்வணி 58.3 ஓவர்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்து 142 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது.

கூடிய ஓட்டங்களாக தேஷான் பெர்னாண்டோ 26 ஓட்டங்களை பதிவு செய்த போதிலும் ஏனையோர் சொற்ப ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்து சென்றனர். அதே நேரம் சிறப்பாக பந்து வீசிய சசிக்க துல்ஷான் 44 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

அதனையடுத்து இரண்டாம் இன்னிங்சுக்காக களமிறங்கிய புனித செர்வாடியஸ் கல்லூரி இசுறு உதயங்கன மற்றும் சந்தரு நேத்மினவின் அபார அரை சதங்களுடன் 6 விக்கெட்டுகளை மாத்திரமே இழந்து 22௦ ஓட்டங்களை பெற்றிருந்த வேளை ஆட்டம் வெற்றி தோல்வியின்றி சமநிலையில் நிறைவு பெற்றது. பந்து வீச்சில்  ரோஷித செனவிரத்ன 57 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

போட்டியின் சுருக்கம்

புனித செர்வாடியஸ் கல்லூரி : 147 (53.3) – பசிந்து மனுப்பிரிய 37*, திலான் பிரஷான் 33, கேஷர நுவந்த , மிதில அரவிந்த 2/25, சஷான் பெர்னாண்டோ 2/32, பெர்னாண்டோ தேஷான்  2/30, ரோஷித செனவிரத்ன 2/29

டி மெசனொட் கல்லூரி : 142 (58.3) – தேஷான் பெர்னாண்டோ 26, ரோஷித செனவிரத்ன, சசிக்க துல்ஷான் 3/44,  25 கேசர நுவந்த 2/27, நேத்தும்  செஷான் 2/4

புனித செர்வாடியஸ் கல்லூரி (இரண்டாம் இன்னிங்ஸ்) : 220/6 (76) – இசுறு உதயங்கன 75, சந்தரு நேத்மின 68, சுபுன் கவிந்த 31, ரோஷித செனவிரத்ன 4/57

போட்டி முடிவு : புனித செர்வாடியஸ் கல்லூரிக்கு முதல் இன்னிங்ஸ் வெற்றி


இசிபதன கல்லூரி எதிர் வெஸ்லி கல்லூரி

கொழும்பு கோல்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில், 2௦2 ஓட்டங்களை முதல் இன்னிங்ஸ் இலக்காக கொண்டு களமிறங்கிய கொழும்பு இசிபதன கல்லூரி, அயன சிறிவர்தனவின் அபாரமான 77 ஓட்டங்களுடன் 7 விக்கெட் இழப்பிற்கு 21௦ ஓட்டங்களை பெற்றுக்கொண்ட நிலையில் தமது  ஆட்டத்தை இடைநிறுத்திக் கொண்டது.

சிறப்பாக பந்து வீசிய ருச்சிரா தங்கல்ல மற்றும் சகலதுறை ஆட்டக்காரர் மோவின் சுபசிங்க ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

தொடர்ந்து களமிறங்கிய வெஸ்லி கல்லூரி, இரண்டாம் இன்னிங்சில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 2௦7 ஓட்டங்களை பெற்ற நிலையில் ஆட்டம் நிறைவுக்கு வந்தது.

முதல் இன்னிங்சில் 3 ஓட்டங்களால் சதத்தை தவறவிட்ட மோவின் சுபசிங்க மீண்டும் அரைச் சதம் விளாசினார். திசுறக்க அக்மீமன அரைச் சதம் எட்டுவதற்கு ஒரு ஓட்டமே பெற வேண்டிய நிலையில் துரதிஷ்டவசமாக ஆட்டமிழந்து சென்றார்.

அதேநேரம் இசிபதன கல்லூரி சார்பாக கலன பெரேரா மற்றும் லஹிரு தில்ஷன் ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

போட்டியின் சுருக்கம்  

வெஸ்லி கல்லூரி : 202 (57) – மோவின் சுபசிங்க  97, மொஹமட் உபைதுல்லா 27, லிசுல வினத் 3/30, லஹிரு தில்ஷன் 3/49, நிரஞ்சன் வன்னியாராச்சி 2/27

இசிபதன கல்லூரி : 210/7d (52.5) – அயன சிறிவர்த்தன  77, ஹெஷான் பெர்னாண்டோ 43, சஞ்சுலஅபேவிக்ரம 30, மொஹமட் உபைதுல்லா 27, ருச்சிரா தங்கல்ல  2/50, மோவின் சுபசிங்க 2/30

வெஸ்லி கல்லூரி (இரண்டாம் இன்னிங்ஸ்) : 207 (72) – மோவின் சுபசிங்க 62, திசுறக்க அக்மீமான 49, திலின பெரேரா 32, கழன பெரேரா 3/44, லஹிரு தில்ஷன் 3/60, அயன சிறிவர்த்தன 2/20

போட்டி முடிவு : போட்டி சமநிலையில் நிறைவு பெற்றது. இசிபதன கல்லூரிக்கு முதல் இன்னிங்ஸ் வெற்றி


கொழும்பு மஹாநாம கல்லூரி எதிர் கொழும்பு  புனித பெனடிக் கல்லூரி

கொழும்பு, புனித பெனடிக் கல்லூரி மைதானத்தில் இன்று ஆரம்பித்த இவ்விரு அணிகளுகிடையிலான போட்டியில் முதலில் துடுப்பாடிய மஹாநாம கல்லூரி 69 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 227 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. சிறப்பாக துடுப்பாடிய மலிந்து மதுரங்க மற்றும் ஹெஷான் ஹெட்டியாராச்சி ஆகியோர் முறையே 51, 43 ஓட்டங்களை பதிவு செய்தனர்.

அதேநேரம், சிறப்பாக பந்து வீசிய  மகீஸ் தீக்ஷன 43 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பிருத்வி ஜெகராஜசிங்கம் மற்றும் கவீஷ ஜயதிலக்க ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

அதனைத் தொடர்ந்து களமிறங்கிய புனித பெனடிக் கல்லூரி  47 ஓட்டங்களுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்து மிகவும் நெருக்கடியான நிலையில் இருக்கிறது.

நாளை போட்டியின் இரண்டாம் நாளாகும்

போட்டியின் சுருக்கம்  

மஹாநாம கல்லூரி : 227 (69) – மலிந்து மதுரங்க 51, ஹெஷான் ஹெட்டியாராச்சி 43, நிதுக்க வலிக்கல 41, திஷான் மென்டிஸ் 31, பத்தும் போஜே 25, மகீஸ் தீக்ஷன 4/43, பிருத்வி ஜெகராஜசிங்கம் 2/31, கவீஷ ஜயதிலக்க 2/53,

புனித பெனடிக் கல்லூரி : 47/3 (19)