19 வயதுக்குட்பட்ட பாடசாலைகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடர் அடுத்த வாரம்

152

சிங்கர் 19 வயதுக்குட்பட்ட பிரிவு 1 (டிவிஷன் 1) பாடசாலை கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான 2018/2019 பருவகாலத்திற்கான போட்டித் தொடர் அடுத்த வாரம் ஆரம்பமாகவுள்ளது.

இலங்கை பாடசாலை கிரிக்கெட் சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ள இந்த போட்டித் தொடரில் 4 குழுக்களாக வகுக்கப்பட்டுள்ள 36 பாடசாலை அணிகள், 2018 செப்டம்பர் மாதம் தொடக்கம் 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரையில் மோதவுள்ளன.

சிங்கர் கிண்ண இறுதிப் போட்டியில் புனித ஜோசப் கல்லூரி அணி

அத்துடன், இந்த பருவாலத்தில் ஒரு அணியொன்று 8 போட்டித் தொடர்களில் பங்கேற்கவுள்ளதுடன், இதில் அதிகபட்சமாக ஒரு அணி 7 மரபுரீதியான போட்டித் தொடர்களில் விளையாட முடியும். இதேவேளை சாதரணதர பரீட்சை டிசம்பர் மாதம் ஆரம்பமாகவுள்ள நிலையில், (நவம்பர் மாதம் 25ஆம் திகதிக்கு முன்னர்)குறித்த காலப்பகுதிக்குள் அணிகள் குறைந்தது 3 போட்டித் தொடர்களில் பங்கேற்க வேண்டும் என்பதுடன், இதில் 2 மரபுரீதியான போட்டித் தொடர்கள் உள்ளடங்க வேண்டும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதில் போட்டி முடிவுகளின் அடிப்படையில் இறுதியாக புள்ளிப்பட்டியலில் முதல் நான்கு இடங்களை பிடிக்கும் அணிகள் நொக்-அவுட் சுற்றுக்கு தகுதிபெறும். நொக்-அவுட் போட்டிகளானது லீக் போட்டிகள் நிறைவடைந்த பின்னர் அல்லது எதிர்வரும் ஆண்டு பெப்ரவரி மாதம் 15 ஆம் திகதிக்கு முன்னர் நடாத்தப்படும் என போட்டி ஏற்பாட்டுக்குழு அறிவித்துள்ளது.

அதுமாத்திரமின்றி போட்டித் தொடரில் பங்கேற்கும் அணிகள், இந்த பருவகாலத்தில் அதிகபட்சமாக 15 போட்டிகளில் மாத்திரமே விளையாட முடியும் எனவும் அதற்கு மேற்பட்ட போட்டிகளில் விளையாட முடியாது எனவும் கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளதாக, இலங்கை பாடசாலை கிரிக்கெட் சங்கத்தின் செயலாளர் டில்ஷான் டி சில்வா எமது இணையத்தளத்துக்கு தெரிவித்துள்ளார்.

கடந்த வருடம் நடைபெற்ற சிங்கர் 19 வயதுக்கு உட்பட்ட பிரிவு 1 (டிவிஷன் 1) பாடசாலை கிரிக்கெட் தொடரின் சம்பியன் கிண்ணத்தை ஜெஹான் டேனியல் தலைமையிலான புனித ஜோசப் கல்லூரி வெற்றிகொண்டதுடன், கண்டி திரித்துவக் கல்லூரி இரண்டாம் இடத்தை பிடித்துக்கொண்டது.

இதேவேளை கடந்த முறை புள்ளிப்பட்டியலில் இறுதி இரண்டு இடங்களை பிடித்திருந்த பாணந்துறை சென்.ஜோன்ஸ் கல்லூரி மற்றும் கம்பஹா பண்டாரநாயக்க கல்லூரிகள் பிரிவு 2 இற்கு (டிவிஷன் 2)தரமிறக்கம் செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில் குறித்த இடங்களை குருநாகல் புனித அனா கல்லூரி மற்றும் ரத்கம தேவபதிராஜ கல்லூரிகள் பிரதியீடு செய்துள்ளன.

குழு A

கொழும்பு புனித ஜோசப் கல்லூரி , காலி மஹிந்த கல்லூரி , களனி குருகுல கல்லூரி, நீர்கொழும்பு மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி, ரத்கம தேவபதிராஜ கல்லூரி, கொட்டாஞ்சேனை புனித பெனடிக் கல்லூரி, குருநாகல் மலியதேவ கல்லூரி, கொழும்பு இசிபதன கல்லூரி, கண்டி சில்வெஸ்டர் கல்லூரி

இலங்கைக்கு எதிரான முதல் போட்டியில் தமிம் இக்பால் விளையாடுவதில் சந்தேகம்

குழு B

மொறட்டுவ பிரின்ஸ் ஒஃப் வேல்ஸ் கல்லூரி, கொழும்பு நாலந்த கல்லூரி, கொழும்பு புனித பேதுரு கல்லூரி, கொழும்பு டீ.எஸ்.சேனநாயக்க கல்லூரி, கொழும்பு ஸாஹிரா கல்லூரி, கொழும்பு லும்பினி கல்லூரி, கந்தானை டி மெசனொட் கல்லூரி, ராஜகிரிய ஜனாதிபதி கல்லூரி, அம்பலாங்கொடை தர்மாசோக கல்லூரி

குழு C

கொழும்பு மஹானாம கல்லூரி, மொறட்டுவ புனித செபஸ்டியன் கல்லூரி, கல்கிஸ்சை புனித தோமியர் கல்லூரி, காலி புனித அலோசியஸ் கல்லூரி, கண்டி தர்மராஜ கல்லூரி, மாத்தறை புனித சேர்விசியஸ் கல்லூரி, மொறட்டு மஹா வித்தியாலயம், வென்னப்புவ புனித ஜோசப் வாஸ் கல்லூரி, கேகாலை புனித மரியாள் கல்லூரி

குழு D

கண்டி திரித்துவக் கல்லூரி, கொழும்பு ஆனந்த கல்லூரி, காலி றிச்மண்ட் கல்லூரி, கொழும்பு தர்ஸ்டன் கல்லூரி, குருநாகல் புனித அனா கல்லூரி, மாத்தறை புனித தோமியர் கல்லூரி, வத்தளை புனித அந்தோனியார் கல்லூரி, பன்னிப்பிட்டிய தர்மபால வித்தியாலயம், கொழும்பு வெஸ்லி கல்லூரி

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<