தலைவராக டோனியின் சாதனையை முறியடித்த இயன் மோர்கன்

117
 

சர்வதேச கிரிக்கெட்டில் இங்கிலாந்து அணித் தலைவர் இயன் மோர்கன் அயர்லாந்துக்கு எதிராக கடைசி ஒருநாள் போட்டியில் சதம் எடுத்த போது, இந்திய முன்னாள் அணித் தலைவர் எம்.எஸ். டோனியின் சாதனையை முறியடித்தார். 

இதன்படி, அணித் தலைவராக சர்வதெச கிரிக்கெட்டில் டோனி 211 சிக்ஸர்கள் என்ற சாதனையை தன் வசம் வைத்திருந்தார். அதை இயன் மோர்கன் தற்போது முறியடித்துள்ளார்

அடுத்த டோனி யார் என்பதை வெளிப்படையாக கூறிய சுரேஷ் ரெய்னா

இங்கிலாந்து சென்றுள்ள அயர்லாந்து கிரிக்கெட் அணி, இங்கிலாந்து அணியுடன் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது.

இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகளிலும் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று, தொடரை கைப்பற்றியிருந்த நிலையில், மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நேற்றுமுன்தினம் நடைபெற்றது. 

இதில் நாணய சுழற்சியில் வென்ற அயர்லாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு இயன் மோர்கன் 106 ஓட்டங்களையும், டொம் பெண்டன் 58 ஓட்டங்களையும், டேவிட் வில்லி 51 ஓட்டங்களையும் எடுத்து கைகொடுத்ததன் மூலம் 49.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த இங்கிலாந்து அணி 328 ஓட்டங்களை எடுத்தது.

இதனையடுத்து 329 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்கை நோக்கி களமிறங்கிய அயர்லாந்து அணிக்கு அந்த அணியின் துவக்க வீரரான போல் ஸ்டர்லிங் 128 பந்துகளில் 6 சிக்ஸர் மற்றும் 9 பௌண்டரிகளுடன் 142 ஓட்டங்களை எடுத்து கைகொடுத்தார். அதன்பின் வந்த அயர்லாந்து அணியின் தலைவர் அன்ட்ரூ போல்பர்னி 113 ஓட்டங்களை எடுத்து கொடுத்து அயர்லாந்து அணியை வெற்றியை நோக்கி அழைத்து சென்றார்.

இறுதியில் 49.5 ஓவர்களில் இலக்கை அடைந்த அயர்லாந்து அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது

video – மாலிங்க, இசுரு IPL ஆடுவாங்களா?|Sports RoundUp – Epi 126

இந்த போட்டியில் இங்கிலாந்து அணி தோல்வியடைந்திருந்தாலும், இந்த போட்டியின் மூலம் இங்கிலாந்து அணித் தலைவர் இயன் மோர்கன் இந்த புதிய சாதனையை படைத்துள்ளார்.

இந்தப் போட்டியில் 4 சிக்ஸர்கள் விளாசியதன் மூலம் சர்வதேச ஒருநாள் அரங்கில் தலைவராக தனது 215ஆவது சிக்ஸரை மோர்கன் பதிவு செய்தார்.

இதன்மூலம் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் அதிக சிக்ஸர் அடித்த தலைவர்கள் பட்டியலில் இந்திய அணியின் முன்னாள் தலைவர் டோனியை (211 சிக்ஸர்) பின்னுக்குத் தள்ளி மோர்கன் முதலிடத்தை பிடித்துள்ளார்.

ஆனால் மோர்கன் 163 போட்டிகளில் இந்தச் சாதனையை நிகழ்த்தியிருந்தாலும், டோனி 332 போட்டிகளில் 215 சிக்ஸர்களை அடித்துள்ளார்

இந்தப் பட்டியலில் ரிக்கி பொண்டிங் 324 போட்டிகளில் 171 சிக்ஸர்களையும், பிரெண்டன் மெக்கல்லம் 121 போட்டிகளில் 170 சிக்ஸர்களையும், ஏபி.டி.வில்லியர்ஸ் 124 போட்டிகளில் 135 சிக்ஸர்களையும் அடித்து தலைவர்களாக அதிக சிக்ஸர்களை விளாசியுள்ள வீரர்களாகக் காணப்படுகின்றனர்.

இங்கிலாந்து அணியின் துடுப்பாட்ட பயிற்சியாளராக ஜொனதன் ட்ரோட்

ஒட்டுமொத்தமாக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளை எடுத்துக்கொண்டால் அதிக சிக்ஸர்களில் 534 சிக்ஸர்களுடன் கிறிஸ் கெய்ல் முதலிடத்தில் உள்ளார்.

இதில் சஹீட் அப்ரிடி (476 சிக்ஸர்கள்), ரோஹித் சர்மா (423 சிக்ஸர்கள்), பிரெண்டன் மெக்கலம் (398 சிக்ஸர்கள்) அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.

இதனிடையே, ஒட்டுமொத்த சர்வதேசப் போட்டிகளில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் இயன் மோர்கன் மிக வேகமாக முன்னேறி வருகிறார். விரைவில் அவர் டோனியை முந்தி விடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. மோர்கன் 324 சிக்ஸர்கள் அடித்து அந்தப் பட்டியலில் எட்டாம் இடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க …