ரவிந்து சஞ்சனவின் சதத்துடன் வலுவடைந்த புனித அலோசியஸ் கல்லூரி

134

19 வயதுக்குட்பட்ட டிவிஷன் – I  பாடசாலை அணிகளுக்கு இடையில் சிங்கர் நிறுவனத்தின் அனுசரணையோடு நடைபெற்று வரும் இந்தப் பருவகாலத்திற்கான இரண்டு நாட்கள் கொண்ட “சிங்கர் கிண்ண” கிரிக்கெட் தொடரில் இன்றைய நாளில் மூன்று போட்டிகள் ஆரம்பமாகியிருந்தன.

பண்டாரநாயக்க கல்லூரி எதிர் புனித அலோசியஸ் கல்லூரி

கதிரான மைதானத்தில் ஆரம்பமாகிய இப்போட்டியில் காலி புனித அலோசியஸ் கல்லூரியினால் முதலில் துடுப்பாட பணிக்கப்பட்டிருந்த கம்பஹா பண்டாரநாயக்க கல்லூரி வீரர்கள், தமது முதல் இன்னிங்சில் கவிக தில்ஷானின் அபார பந்து வீச்சினால் 85 ஓட்டங்களை மாத்திரம்  பெற்று சுருண்டனர்.

புனித அலோசியஸ் கல்லூரி சார்பாக கவிக தில்ஷான் வெறும் 19 ஓட்டங்களுக்கு  5 விக்கெட்டுக்களை பதம்பார்த்திருந்தார்.

பத்திரிசியார் கல்லூரிக்கு எதிராக அபார வெற்றியைப் பெற்ற புனித ஜோசப் கல்லூரி

இன்று நிறைவடைந்திருக்கும் 19 வயதுக்குட்பட்ட பிரிவு I (டிவிஷன் – I) ‘ …

இதனையடுத்து தமது முதல் இன்னிங்சினை ஆரம்பித்த புனித அலோசியஸ் கல்லூரி, ரவிந்து சஞ்சன ஆட்டமிழக்காமல்  சதம் கடந்து பெற்றுக்கொண்ட 141 ஓட்டங்களின் துணையுடன் 4 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 239 ஓட்டங்களினை குவித்து வலுப்பெற்றிருந்த  நிலையில் போட்டியின் முதல் நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்தது.

போட்டியின் சுருக்கம்

பண்டாரநாயக்க கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) 85 (30) – தஹிரு ரோஷன் 27, கவிக தில்ஷான் 5/19, ஹரீன் புத்தில 2/5, கவிந்து மதுரங்க 2/12

புனித அலோசியஸ் கல்லூரி (முதல் இன்னிங்ஸ் ) 239/4 (66) –  ரவிந்து சஞ்சன 141*, ஜனிது ஜயவர்த்தன 2/50

போட்டியின் இரண்டாம் நாள் நாளை தொடரும்

இசிபதன கல்லூரி எதிர் டி.எஸ் சேனநாயக்க கல்லூரி

கோல்ட்ஸ் மைதானத்தில் தொடங்கியிருந்த இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பாடிய இசிபதன கல்லூரி சார்பாக அயான சிறிவர்த்தன சதம் (101)  கடந்திருந்தார். இவரோடு சேர்த்து சமிக விக்ரமதிலகவும் பெறுமதியான அரைச்சதம் (71) ஒன்றினை விளாசியிருந்தார்.

இவர்களின் துடுப்பாட்ட உதவிகளோடு 77.1  ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்த இசிபதன கல்லூரி 278 ஓட்டங்களினை முதல் இன்னிங்சுக்காகப் பெற்றுக்கொண்டது.

டி.எஸ் சேனநாயக்க கல்லூரியின் பந்து வீச்சில் திறமையினை வெளிக்கொணர்ந்த வீரர்களான சனதரு சன்தித மற்றும் ருவின் பீரிஸ் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுக்கள் வீதம் கைப்பற்றியிருந்தனர்.

தொடர்ந்து முதல் இன்னிங்சினை ஆரம்பத்திருந்த டி.எஸ் சேனநாயக்க கல்லூரி அணி விக்கெட் இழப்பின்றி 3 ஓட்டங்களைப் பெற்றிருந்த வேளையில் போட்டியின் முதல் நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்தது.

போட்டியின் சுருக்கம்

இசிபதன கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) 278 (77.1) – அயான சிறிவர்த்தன 101, சமிக விக்ரமதிலக 71, லேசான் அமரசிங்க 39, சனதரு சன்தித்த 2/20, ருவின் பீரிஸ் 2/20

டி.எஸ் சேனநாயக்க கல்லூரி – 3/0 (4)

போட்டியின் இரண்டாம் நாள் நாளை தொடரும்

 

தர்மராஜ கல்லூரி எதிர் தர்மபால கல்லூரி

கண்டி தர்மராஜ கல்லூரியின் சொந்த மைதானத்தில் இன்றைய நாளில் ஆரம்பமாகிய இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற கொழும்பு தர்மபால கல்லூரியினர் முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தினை மைதான சொந்தக்கார வீரர்களுக்கு வழங்கினர்.

ஜெப்ரி வண்டேர்சேயின் அதிரடிப் பந்துவீச்சால் இலகு வெற்றியடைந்த டீஜே லங்கா

வர்த்தக நிறுவனங்களுக்கு இடையிலான கிரிக்கெட் சுற்றுப் போட்டியின் சிங்கர் நிறுவன அனுசரணையில் நடக்கும் …

 

இதன்படி முதலில் களமிறங்கிய தர்மராஜ கல்லூரியின் இளம் வீரர்களில் கசுன் குணவர்தன மற்றும் செத்திய ஏக்கநாயக்க ஆகியோர் சிறப்பான அரைச் சதங்களை விளாசியிருந்தனர்.  இவற்றின் துணையுடன் 256 ஓட்டங்களுக்கு 9 விக்கெட்டுக்களை இழந்திருந்த தர்மராஜ கல்லூரி தமது முதல் இன்னிங்சினை நிறுத்திக்கொண்டது.

இதில் தர்மபால கல்லூரி சார்பாக சிறப்பான  பந்து வீச்சு ஒன்றினை பதிவு செய்த சமிந்து லக்ஷித 6 விக்கெட்டுக்களை பதம் பார்த்திருந்தார்.

இரண்டு நாட்கள் கொண்ட போட்டியில் தமது முதல் இன்னிங்சினை ஆரம்பித்த தர்மபால கல்லூரி, 36 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களை இழந்திருந்த நிலையில் போட்டியின் முதல் நாள் ஆட்டம் நிறைவடைந்தது.

போட்டியின் சுருக்கம்

தர்மராஜ கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) 256/9d (71.3) – கசுன் குணவர்தன 82, செத்திய ஏக்கநாயக்க 57, சமிது லக்ஷித 6/51

தர்மபால கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) 36/2 (15.4)

போட்டியின் இரண்டாம் நாள் நாளை தொடரும்