பூரண உடற்தகுதியினைப் பெற்றுள்ள ஸ்ரேயாஸ் அய்யர்

119

அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாட ஸ்ரேயாஸ் அய்யர் பூரண உடற்தகுதியுடன் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை வீராங்கனைகளின் போட்டிக்கட்டணம் அதிகரிப்பு!

மத்திய வரிசை துடுப்பாட்டவீரரான ஸ்ரேயாஸ் அய்யர் தனக்கு ஏற்பட்ட உபாதை காரணமாக சுமார் ஒரு மாத காலமாக கிரிக்கெட் போட்டிகள் எதிலும் விளையாடியிருக்கவில்லை. கடைசியாக இலங்கை அணியுடனான ஒருநாள் தொடரில் ஆடிய அவர் அதனை அடுத்து நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டிகளில் விளையாடும் சந்தர்ப்பத்தினை இழந்திருந்தார்.

விடயங்கள் இவ்வாறு இருக்க அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் குழாத்தில் ஸ்ரேயாஸ் அய்யர் உள்ளடக்கப்பட்ட போதும் அவரினால் நாக்பூரில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியுடன் இணைய முடியாமல் போயிருந்தது.

ஸ்ரேயாஸ் அய்யருக்குப் பதிலாக இந்திய அணியினால் முதல் டெஸ்ட் போட்டியில் சூர்யகுமார் யாதவ்விற்கு டெஸ்ட் அறிமுகம் வழங்கப்பட்டிருந்ததோடு, யாதவ் எதிர்பார்த்த ஆட்டத்தினை நாக்பூரில் நடைபெற்ற குறித்த டெஸ்ட் போட்டியில் வெளிப்படுத்த தவறியிருந்தார்.

இந்த நிலையில் தற்போது பூரண உடற்தகுதியினைப் பெற்றிருக்கும் ஸ்ரேயாஸ் அய்யர் சூர்யகுமார் யாதவ்விற்குப் பதிலாக இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய முதல் பதினொருவர் அணிக்குத் திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதேவேளை அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா இன்னிங்ஸ் வெற்றியினை பதிவு செய்து நான்கு போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என முன்னிலை பெற்றிருக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.

மகளிர் பிரீமியர் லீக்கில் விலைபோகாத இலங்கை வீராங்கனைகள்!

அதேவேளை இந்திய – அவுஸ்திரேலிய அணிகள் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி எதிர்வரும் வெள்ளிக்கிழமை (17) ஆரம்பமாகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்திய டெஸ்ட் குழாம்

ரோஹிட் சர்மா (அணித்தலைவர்), கே.எல். ராகுல் (பிரதி தலைவர்), சுப்மான் கில், செட்டெஸ்வர் புஜாரா, விராட் கோலி, ஸ்ரேயாஸ் அய்யர், கே.எஸ். பாரத், இஷான் கிஷான், ரவிச்சந்திரன் அஸ்வின், அக்ஷார் பட்டேல், குல்தீப் யாதவ், ரவிந்திர ஜடேஜா, மொஹமட் சமி, மொஹமட் சிராஜ், உமேஷ் யாதவ், சூர்யகுமார் யாதவ்

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<