இலங்கை வீராங்கனைகளின் போட்டிக்கட்டணம் அதிகரிப்பு!

Sri Lanka Women's Cricket

229

இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி வீராங்கனைகளின் போட்டிக்கட்டணத்தை உயர்த்துவதற்கான தீர்மானத்தை கிரிக்கெட் சபையின் செயற்குழு மேற்கொண்டுள்ளது.

இலங்கை கிரிக்கெட் சபையின் செயற்குழு சந்திப்பு கடந்த மாதம் 31ம் திகதி நடைபெற்றபோது, மகளிர் கிரிக்கெட் அணியின் போட்டி கட்டணம் தொடர்பிலான தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மகளிர் பிரீமியர் லீக்கில் விலைபோகாத இலங்கை வீராங்கனைகள்!

அதன்படி மகளிர் அணியின் வீராங்கனைகளுக்கு போட்டிக்கட்டணமாக 250 அமெரிக்க டொலர்கள் வழங்கப்பட்டுவந்த நிலையில், குறிப்பிட்ட தொகையானது 750 அமெரிக்க டொலர்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் மேலதிக வீராங்கனைகளாக அணியில் இடம்பெறும் வீராங்கனைகளுக்கு போட்டிக்கட்டணத்தில் 25 சதவீதம் வழங்கப்படவுள்ளது.

அதுமாத்திரமின்றி இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியை வலுப்படுத்தும் முகமாக அணியின் ஒவ்வொரு வெற்றிகளுக்கும், வீராங்கனைகளுக்கு தலா 250 அமெரிக்க டொலர்களை மேலதிகமாக வழங்கவும் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதேவேளை இந்த போட்டிக்கட்டண அதிகரிப்பானது, ஜனவரி முதலாம் திகதி முதல் அமுலுக்கு வந்துள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<