முதல் வாரத்தில் வெற்றிகளை சுவீகரித்த ஜாவா லேன் மற்றும் சுபர் சன் அணிகள்

194

சம்பியன்ஸ் லீக் 2022 தொடருக்கான முதல் வார ஆட்டத்தில் ஜாவா லேன் மற்றும் சுபர் சன் அணிகள் முறையே பொலிஸ் மற்றும் பெலிகன்ஸ் அணிகளை வீழ்த்தின.

ஜாவா லேன் எதிர் பொலிஸ்

சுகததாஸ அரங்கில் இடம்பெற்ற இந்த போட்டியில் ஜாவா லேன் பொலிஸ் அணியை 2 – 1 என்ற கோல்கள் கணக்கில் வீழ்த்தியது. நவீன் ஜூட்டின் கோலின் உதவியோடு ஜாவா லேன் அணி முதலாம் பாதியை 1 – 0 என முன்னிலையில் நிறைவு செய்தது. தொடர்ந்து அந்த ஆதிக்கத்தை டொச்சோக்கு பிரான்சிஸ் 86 ஆவது நிமிடத்தில் இரட்டிப்பாக்கினார். பொலிஸ் அணிக்காக 90+4 ஆவது நிமிடத்தில் தமித் பத்திரன ஆறுதல் கோலடித்தார்.

>>சம்பியன்ஸ் லீக்; மொறகஸ்முல்ல, நியூ ஸ்டார், மாத்தறை சிடி அணிகளுக்கு முதல் வெற்றி

பெலிகன்ஸ்  எதிர் சுபர் சன்

குருநாகல் மாளிகாப்பிட்டிய மைதானத்தில் இடம்பெற்ற மற்றுமொரு போட்டியில் ஒரு கோல் பின்னிலையில் இருந்து வந்து பெலிகன்ஸ் அணியை 2 – 1 என சுபர் சன் வீழ்த்தியது.  போட்டியின் 9 ஆவது நிமிடத்தில் ரஜிகுமார் சாந்தன் பெலிகன்ஸ் அணிக்கு ஒரு கோலடித்தார். 14 ஆவது நிமிடத்தில் சுபர் சன் அணியின் ஹசித பிரியங்கர ஒரு கோலடித்து மொத்த கோல் எண்ணிக்கையை சமன் செய்தார்.

>>“சம்பியன்ஸ் லீக்கில் ரியல் மட்ரிட் சிறந்த அணியில்லை” – மெஸ்ஸி

இந்த நிலையில் போட்டி நிறைவு செய்ய 7 நிமிடங்கள் இருக்கும் வேளையில் (83 ஆவது நிமிடம்)  பிரியங்கர , சுபர் சன் அணிக்காக வெற்றி கோலினை அடித்தார்.

>> மேலும் கால்பந்து செய்திகளுக்கு <<