இலங்கை மகளிர் அணியில் 17 வயது பாடசாலை மாணவி

598

இலங்கை மற்றும் பாகிஸ்தான் மகளிர் கிரிக்கெட் அணிகளுக்கு இடையில் இடம்பெறவுள்ள மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட தொடர்களுக்கான 15 பேர் கொண்ட இலங்கை மகளிர் அணி வீராங்கனைகளின் விபரம் தற்பொழுது வெளியிடப்பட்டுள்ளது.

[rev_slider LOLC]

ஐ.சி.சியின் மகளிர் சம்பியன்ஷிப் போட்டித் தொடரினை முன்னிட்டு இடம்பெறவுள்ள இந்தப் போட்டித் தொடருக்கு இடது கை துடுப்பாட்ட வீராங்கனையான சமரி அத்தபத்து இலங்கை அணியைத் தலைமை தாங்கவுள்ளார். அவ்வணியில், அம்பலாங்கொடை தேவபத்திராஜ கல்லூரி மாணவியான 17 வயதுடைய கவிஷா தில்ஹாரியும் உள்வாங்கப்பட்டுள்ளார்.  

சமரியின் தலைமையில் பாகிஸ்தானுடன் சொந்த மண்ணில் மோதும் இலங்கை மகளிர் அணி

இலங்கை மகளிர் அணியின் துடுப்பாட்ட நட்சத்திரமான சாமரி அத்தபத்து …

ஏற்கனவே தேசிய அணியில் அங்கம் வகித்த நிபுனி ஹன்சிகா, பிரசாதனி வீரக்கொடி, டிலானி மனோதரா, ஹாசினி பெரேரா, சமரி பொல்கம்பொல, இனோகா ரனவீர உள்ளிட்ட பலர் இந்த குழாமில் உள்வாங்கப்பட்டுள்ளனர். நிபுனி ஹன்சிகா அணியின் துணைத் தலைவியாகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கை மகளிர் அணி இறுதியாக கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக விளையாடுவதற்கு அந்நாட்டிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்தது. அதன் பின்னர் விளையாடும் முதல் தொடராக பாகிஸ்தானுடனான இத்தொடர் இருப்பதால், இலங்கை மகளிர் அணி இந்த வருடத்தில் விளையாடும் முதல் சர்வதேசப் போட்டித் தொடராகவும் இது அமையவுள்ளது.

பாகிஸ்தான் மகளிர் அணியின் இலங்கைக்கான இந்த சுற்றுத் தொடர் 3 ஒரு நாள் போட்டிகள் மற்றும் 3 T-20 போட்டிகளைக் கொண்டதாக அமையவுள்ளது. இதன் ஒரு நாள் போட்டிகள் அனைத்தும் தம்புள்ளையிலும், T-20 போட்டிகள் அனைத்தும் கொழும்பிலும் இடம்பெறவுள்ளன.  

மகளிருக்கான தரவரிசையில் முதல் 8 இடங்களில் உள்ள அணிகளும் 2017ஆம் ஆண்டு முதல் 2021ஆம் ஆண்டுவரை ஏனைய அணிகளுடனும் 3 போட்டிகளைக் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாட வேண்டும். இதன்படி, இதுவரை நடைபெற்ற போட்டிகளில் ஒரு வெற்றியை மாத்திரம் பெற்றுள்ள பாகிஸ்தான் அணி தரப்படுத்தலில் 6ஆவது இடத்தில் உள்ள அதேவேளை, இலங்கை மகளிர் 8ஆவது இடத்தில் உள்ளனர்.

புலியின் வாயிலிருந்து வெற்றியைப் பறித்த தமிழக நட்சத்திரம் கார்த்திக்!

கடைசி இரண்டு ஓவர்களிலும் தனது துடுப்பாட்டத்தால் சாகசம் நிகழ்த்திய தினேஷ் …

இந்நிலையில், இத்தொடரின் வெற்றி மற்றும் தோல்வி என்பன ஜ.சி.சியினால் மகளிருக்காக நடத்தப்படுகின்ற 2017-2023 சம்பியன்ஷிப் போட்டிகளில் புள்ளிகள் பட்டியலில் மாற்றங்களை ஏற்படுத்தும். எனவே, இத்தொடர் இலங்கைக்கு முக்கிய தொடராக உள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை மகளிர் குழாம்

சமரி அத்தபத்து (அணித் தலைவி), நிபுனி ஹன்சிகா (துணைத் தலைவி), பிரசாதனி வீரக்கொடி, டிலானி மனோதரா, ஹாசினி பெரேரா, ரெபெக்கா வண்டோர்ட், சமரி பொல்கம்பொல, சசிகலா சிறிவர்தன, இனோகா நனவீர, அமா கான்சனா, அஷினி குலசூரிய, சிறிபாலி வீரக்கொடி, இனோகா ரனவீர, சுகன்திகா குமாரி, இனோசி பெர்ணான்டோ, கவிஷ்க தில்ஹாரி

போட்டி அட்டவணை

திகதி போட்டி இடம்
மார்ச் – 20   முதலாவது ஒரு நாள் போட்டி தம்புள்ளை
மார்ச் – 22 2ஆவது ஒரு நாள் போட்டி தம்புள்ளை
மார்ச் – 24 3ஆவது ஒரு நாள் போட்டி தம்புள்ளை
மார்ச் – 28 முதலாவது T-20 SSC மைதானம், கொழும்பு
மார்ச் – 30 இரண்டாவது T-20 SSC மைதானம், கொழும்பு
மார்ச் – 31 மூன்றாவது T-20 SSC மைதானம், கொழும்பு

இலங்கை – பாகிஸ்தான் மகளிர் அணிகளுக்கு இடையிலான இந்த போட்டித் தொடர்களின் உடனடித் தகவல்கள், புகைப்படங்கள் மற்றும் போட்டி முடிவுகளை அறிந்துகொள்வதற்கு ThePapare.com உடன் இணைந்திருங்கள்.