உயிரிழந்த சுஷாந்த் சிங் குறித்து சொஹைப் அக்தர்…

222

பொலிவூட் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம்வந்த சுஷாந்த் சிங், தற்கொலை செய்துகொள்ள முன்னர் மும்பையில் வைத்து அவரை சந்தித்தும் அவருடன் பேச முடியாமல் போனது மிகவும் கவலையளிப்பதாக பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளரான சொஹைப் அக்தர் தெரிவித்துள்ளார். 

இந்திய கிரிகெட் அணியின் முன்னாள் தலைவர் மகேந்திர சிங் தோனியின் வாழ்க்கை கதையானஎம். எஸ். தோனி அன்ட் டோல்ட் ஸ்டோரிபடத்தில் நடித்து பிரபலமான பொலிவூட் நடிகர் சுஷாந்த் சிங், கடந்த 14ஆம் திகதி மும்பை பந்த்ரா பகுதியில் இருக்கும் தன் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.  

PSL தொடரின் எஞ்சிய போட்டிகளை நடாத்த தீர்மானம்

கடந்த 6 மாதங்களாக மன அழுத்தத்தால் அவதிப்பட்டு வந்த சுஷாந்த் சிங் இப்படி ஒரு முடிவை எடுத்துவிட்டதாக கூறப்பட்டது

கடந்த 2016இல் வெளியான இந்த படத்தில் தோனி கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்து அதன் மூலம், இந்தியா முழுவதும் நல்ல அறிமுகம் பெற்றார். அவரது நடிப்பும் பாராட்டப்பட்டது.

இந்த நிலையில், சுஷாந்த் சிங்கின் தற்கொலையானது இந்திய திரைப்படத்துறையை மாத்திரமல்லாது, கிரிக்கெட் விளையாட்டிலும் மிகப் பெரிய கவலையை ஏற்படுத்தியது.

குறிப்பாக, இந்திய அணியின் இன்னாள் மற்றும் முன்னாள் வீரர்கள் அவரது மறைவிற்கு தமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில், பொலிவூட் நடிகர் சுஷாந்த் சிங்கின் தீடீர் மரணத்துக்கு பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரரான சொஹைப் அக்தரும் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்திருந்ததுடன், 2016இல் இந்தியா சென்ற போது அவருடனான சந்திப்பு குறித்த முக்கிய தகவலொன்றையும் வெளியிட்டிருந்தார். இதுதொடர்பில் சொஹைப் அக்தர் கருத்து வெளியிடுகையில்

”2016இல் இந்தியாவிற்குச் சென்று நாடு திரும்பிக் கொண்டிருந்த வேளையில் பொலிவூட் நடிகர் சுஷாந்த் சிங்கை மும்பையில் வைத்து நான் சந்தித்தேன். எனினும், அவருடன் எனக்கு பேசுவதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை.

உண்மையில் அவரை பார்த்த போது நம்பிக்கை இழந்த நிலையில் தோற்றமளித்திருந்தார். அவர் கீழே பார்த்துக்கொண்டு என்னை கடந்து சென்றார். தோனியின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடித்த சுஷாந்த் சிங் இவர் தான் என்று எனது நண்பர் சொன்னார். 

அதன்பிறகு அவர் நடித்த படங்களைப் பார்க்க வேண்டும் என நினைத்தேன். உண்மையில் அவர் பெருமை இல்லாத அடக்கமான ஒரு மனிதர். அவருடைய திரைப்படங்களில் அதை நிறைய பார்த்துள்ளேன்

எனினும், அவருடன் அன்று பேச முடியாமல் போனதையிட்டு நான் மிகவும் கவலைப்படுகிறேன். எனது வாழ்க்கையில் பெற்றுக்கொண்ட அனுபவங்ளை அவருடன் பகிர்ந்து கொள்ள எண்ணியிருந்தேன். வாழ்க்கை என்றால் என்ன என்பது பற்றி அவருக்கு சொல்லிக் கொடுக்க காத்திருந்தேன்

உண்மையில் அவரை சந்தித்தும் அந்த வாய்ப்பை தவறவிட்டமை தொடர்பில் இன்றும் நான் கவலைப்படுகிறேன்” என குறிப்பிட்டார்.

21ஆம் நூற்றாண்டின் மதிப்புமிக்க வீரராக முரளிக்கு மகுடம்

இதனிடையே, நீண்ட நாட்களாக மன அழுத்தம் காரணமாக பாதிக்கப்பட்ட நடிகர் சுஷாந்த் சிங்குக்கு உதவி தேவைப்பட்டதாகத் தெரிவித்துள்ள சொஹைப் அக்தர், பிரச்சினைகளுக்கு முடிவு தற்கொலை அல்ல என சுட்டிக்காட்டியுள்ளார்

இதேவேளை, பாகிஸ்தான் அணியில் முன்னணி வீரராக வலம்வருவதற்கு தான் முகங்கொடுத்த ஷ்டங்கள் தொடர்பில் சொஹைப் அக்தர் கருத்து தெரிவிக்கையில்,  

”நான் பாகிஸ்தான் அணியில் விளையாட ஆரம்பித்த போது வசீம் அக்ரம் மற்றும் வக்கார் யூனிஸ் போன்ற வீரர்களும் அணியில் இருந்தார்கள். அவர்கள் பொலிவூட் நடிகர்களான சல்மான் கான் மற்றும் ஷாருக்கான் போன்று தோற்றமளித்தார்கள்

எனவே அவர்களைப் போல எனது பெயரையும் முத்திரைப் பதிக்க நான் நிறைய ஷ்டப்பட்டேன்” என அவர் தெரிவித்தார்

 >> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<