21ஆம் நூற்றாண்டின் மதிப்புமிக்க வீரராக முரளிக்கு மகுடம்

222

உலகில் அதிக டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்திய இலங்கை அணியின் முன்னாள் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் 21 ஆம் நூற்றாண்டின் மிக மதிப்புமிக்க வீரராக விஸ்டன் கிரிக்கெட் மாதாந்த சஞ்சிகை அறிவித்துள்ளது.  

உலகின் முன்னணி கிரிக்கெட் பகுப்பாய்வு நிறுவனமான CricViz உடன் இணைந்து விஸ்டன் சஞ்சிகை 21 ஆம் நூற்றாண்டின் 30 முன்னணி டெஸ்ட் வீரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் முரளிதரன் முதலிடத்தை பெற்றுள்ளார்

சர்வதேச போட்டிகள் ஆரம்பமாகும்வரை பயிற்சிகளை தொடரவுள்ள இலங்கை

நாம் 2000ஆம் ஆண்டில் இருந்த தரவுகளை சேகரித்தோம். எனவே இது 2000-2020 ஆம் ஆண்டுகளுக்கானதாக அமையும் என்று விஸ்டன் கிரிக்கெட் சஞ்சிகையின் சந்தைப்படுத்தல் பணிப்பாளர் சாம் ஸ்டோவ் தெரிவித்தார்.  

முரளியின் மொத்தம் 800 டெஸ்ட் விக்கெட்டுகளில் 2000 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் திகதி தொடக்கம் 2010 ஆம் ஆண்டு வரை அவர் 85 போட்டிகளில் 573 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இந்தக் காலப்பிரிவில் அவரை விடவும் முன்னிலையில் இருக்கும் ஒரே ஒருவர் ஜேம்ஸ் அன்டர்ஸர் ஆவார். அவர் (2000-2020) 151 போட்டிகளில் 584 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் என்றும் அவர் தெரிவித்தார்

“CricViz இன்போட்டி தாக்கம்பற்றிய வடிவம் வீரர்களின் பங்களிப்பு பற்றி புதிய தெளிவை தருகிறது. அதன்படி டெஸ்ட் கிரிக்கெட்டில் இதுவரையான காலத்தில் 21 ஆம் நூற்றாண்டின் மிக மதிப்புமிக்க வீரராக இலங்கை சுழற் பந்துவீச்சாளர் முத்தையா முரளிதரன் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. முரளியின் திறமைக்கு எண்கள் மாத்திரமன்றி, கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக டெஸ்ட் கிரிக்கெட்டில் அவரது நிகரற்ற தாக்கத்தை வெளிப்படுத்துவதாகவும் CricViz வடிவம் ஆழமாக ஆராய்வதாக உள்ளது என்று விஸ்டன் கிரிக்கெட் மாதாந்த சஞ்சிகையின் ஆசிரியர் ஜோ ஹார்மன் தெரிவித்தார்.  

இந்த பகுப்பாய்வு பற்றி விளக்கிய CricViz பகுப்பாய்வாளர் பிரெட்டி வைல்ட் கூறியதாவது, முரளி மற்றும் கிளென் மெக்ராத் இந்த பகுப்பாய்வில் மிகவும் பயனுள்ள இரு பந்துவீச்சாளர்களாக உள்ளனர். இந்த ஆய்வில் யார் சிறந்தவர் என்று தீர்மானிக்காமல் வீரர்கள் செலுத்திய தாக்கம் பற்றியும் நாம் ஆய்வு மேற்கொண்டோம். ஒரு சுழற்பந்து வீச்சாளராக அவர் நீண்ட ஓவர்களை வீசியது டெஸ்ட் போட்டிகளில் ஆதிக்கம் செலுத்த இலங்கையர்களுக்கு சிறந்த சந்தர்ப்பமாக அமைந்தது என்றார்.   

கடந்த 1992ஆம் ஆண்டு தனது கன்னி டெஸ்ட் போட்டியில் களமிறங்கிய முத்தையா முரளிதரன் மொத்தம் 133 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். குறிப்பாக, இந்த ஆய்வுக்கு உட்பட்ட 2000 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் திகதி தொடக்கம் அவர் ஓய்வுபெற்ற 2010 ஆம் ஆண்டு வரையான காலத்தில் அவரது பந்துவீச்சு சராசரி 20.92 என்பதோடு  5 விக்கெட்டுகளை 50 தடவைகள் வீழ்த்தியுள்ளார்.    

2000 ஆம் ஆண்டுக்கு பின்னர் அவர் ஆடிய 84 போட்டிகளில் இலங்கை அணி 40 போட்டிகளில் வெற்றியீட்டி இருப்பதோடு 17 போட்டிகளை சமன் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது. எனவே, இலங்கை அணி 27 போட்டிகளிலேயே தோல்வியை சந்தித்துள்ளது.  

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<