பிரவீன் ஜயவிக்ரம மீது ICC இன் ஊழல் தடுப்பு பிரிவு குற்றச்சாட்டு

81
Praveen Jayawickrama

இலங்கை கிரிக்கெட் அணியின் சுழல் பந்துவீச்சாளரான பிரவீன் ஜயவிக்ரம மீது சர்வதேச கிரிக்கெட் வாரியம் (ICC) ஆட்ட நிர்ணய குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.  

>>இங்கிலாந்து தொடருக்கான இலங்கை டெஸ்ட் குழாம் அறிவிப்பு!<<

ICC இன்று (08) வெளியிட்டிருக்கும் ஊடக அறிக்கை ஒன்றின் வாயிலாகவே பிரவீன் ஜயவிக்ரம மீது குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருக்கின்றது. பிரவீன் ஜயவிக்ரம தொடர்பிலான ஆட்ட நிர்ணய குற்றச்சாட்டுக்கள் தெளிவாக விபரிக்கப்படாத போதிலும் அவை சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் மற்றும் 2021ஆம் ஆண்டு நடைபெற்ற LPL தொடரின் போட்டிகள் என்பவற்றுடன் தொடர்புபட்டவை என சுட்டிக்காட்டப்பட்டிருக்கின்றது.   

இதேநேரம் பிரவீன் ஜயவிக்ரம தொடர்பில் மேலும் தெரிய வரும் விடயங்களின் அடிப்படையில் அவர் ICC இன் ஊழல் தடுப்பு விதிமுறைகளை மூன்று பிரிவுகளில் மீறியிருப்பதாக கூறப்படுவதோடு அதில் அவர் ஆட்டநிர்ணய முயற்சி ஒன்று நடைபெறுவது தொடர்பில் ICC இடம் அறிவிக்காமல் போனது முக்கிய விடயமாக சுட்டிக்காட்டப்படுகின்றது. 

அத்துடன் பிரவீன் ஜயவிக்ரம LPL போட்டிகளின் போது சக வீரர் ஒருவரினை ஆட்டநிர்ணய சதியில் ஈடுபட்ட ஒருவர் தொடர்புபடுத்துமாறு கேட்கப்பட்ட சந்தர்ப்பத்தில் அது தொடர்பிலும் ICC இடம் அறிவிக்கவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது 

பிரவின் ஜயவிக்ரம ஆட்டநிர்ணய சதி இடம்பெற்றதாக கூறப்படும் 2021ஆம் ஆண்டுக்கான LPL தொடரில் ஜப்னா கிங்ஸ் அணியின் வீரராக ஆடியிருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்த விடயங்கள் தொடர்பில் தெளிவுபடுத்த ஜயவிக்ரமவிற்கு 14 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டிருக்கின்றமை சுட்டிக்காட்டத்தக்கது 

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<