இந்தியாவின் சவாலை முறியடித்த இலங்கை கட்புலனற்றோர் அணி

151

இலங்கை மற்றும் இந்திய கட்புலனற்றோர் கிரிக்கெட் அணிகளுக்கு இடையில் நேற்று (15) நடைபெற்ற முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 2 விக்கெட்டுகளால் வெற்றி பெற்ற இலங்கை அணி தொடரில் 1-0 என முன்னிலை பெற்றது.  

மூன்று நாட்களுக்குள்ளேயே தென்னாபிரிக்காவுடனான டெஸ்ட் போட்டியினை முடித்த இலங்கை

சுற்றுலா தென்னாபிரிக்கா மற்றும் இலங்கை அணிகள் …

கொழும்பு, BRC மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை கட்புலனற்றோர் அணியின் தலைவர் சந்தன சூரியாரச்சி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தார். இதன்படி முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய இந்திய கட்புலனற்றோர் அணி நிர்ணயிக்கப்பட்ட 40 ஓவர்கள் முடிவதற்குள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 260 ஓட்டங்களை பெற்றது.

இந்திய அணி சார்பில் அதிகபட்சமாக துர்காராவோ 64 ஓட்டங்களை பெற்றதோடு தீபக் மாலிக் மற்றும் ஆர். ரம்பீர் ஆகியோரும் மேலும் இரு அரைச்சதங்களை பெற்றனர். பந்துவீச்சில் வலதுகை மிதவேகப்பந்து வீச்சாளரான B2 பிரிவின் தினேஷ் மதுகம 35 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

பின்னர் 261 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலெடுத்தாடிய இலங்கை கட்புலனற்றோர் அணி துடுப்பெடுத்தாடிக் கொண்டிருக்கும்போது ஆட்டம் மழையால் தடைப்பட்டது. இதனால் இந்தப் போட்டி 33 ஓவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டது.

எனவே, இலங்கை அணியின் வெற்றி இலக்கு 233 ஆக குறைக்கப்பட்டது. இலங்கை அணி சார்பில் அஜித் சில்வா அந்த இலக்கை எட்டுவதில் முக்கிய பங்கு வகித்து 68 ஓட்டங்களை பெற்றார். இதன்போது, அவர் 4 பௌண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்களை விளாசினார்.

இலங்கை இளையோர் அணிக்காக பந்துவீச்சில் சோபித்த யாழ் வீரர் வியாஸ்காந்த்

இந்திய 19 வயதுக்கு உட்பட்ட அணிக்கு எதிராக இலங்கை …

இதன்மூலம் இலங்கை அணி 28.2 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கான 233 ஓட்டங்களை எட்டியது. இந்திய கட்புலனற்றோர் அணி சார்பில் பந்துவீச்சில் துர்காராவோ 32 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை பதம்பார்த்தார்.

இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது ஒரு நாள் போட்டி இன்று (16) கொழும்பு, BRC மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டிகளின் விபரங்கள், புகைப்படங்களை உங்களுக்கு வழங்குவதற்கு ThePapare.com தயாராக உள்ளது.

போட்டியின் சுருக்கம்

இந்தியா – 260 (37.2) – துர்காராவோ 64, தீபக் மாலிக் 54, ஆர். ரம்பீர் 50, தினேஷ் மதுகம 4/35

இலங்கை – 233/8 (28.2) – அஜித் சில்வா 68, துர்காராவோ 3/32

போட்டியின் ஆட்ட நாயகன் தினேஷ் மதுகம (இலங்கை)

முடிவு: இலங்கை கட்புலனற்றோர் அணி 2 விக்கெட்டுகளால் வெற்றி

மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க…