PSL தொடரின் எஞ்சிய போட்டிகளை நடாத்த தீர்மானம்

184
psl

கொவிட்-19 எனப்படும் கொரோனா வைரஸ் காரணமாக தடைப்பட்டுப் போன இந்த ஆண்டுக்கான பாகிஸ்தான் சுபர் லீக் (PSL) T20 தொடரின் எஞ்சிய போட்டிகளை இந்த ஆண்டின் இறுதியில் நடாத்துவதற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் சபை (PCB) தீர்மானம் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஆட்டநிர்ணயம் தொடர்பில் மஹிந்தானந்தவினால் பொலிஸ் முறைப்பாடு

2011 கிரிக்கெட் உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் ஆட்டநிர்ணயம் இடம்பெற்றதாக

பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் நிர்வாகிகள் நேற்று (26) இணையத்தளம் வாயிலாக சந்திப்பு ஒன்றினை மேற்கொண்டிருந்தனர். இந்த சந்திப்பின் போதே, பாகிஸ்தான் சுபர் லீக் தொடர்பான முடிவு எடுக்கப்பட்டிருந்தது.   

இந்த ஆண்டுக்கான பாகிஸ்தான் சுபர் லீக் தொடரின் குழுநிலைப் போட்டிகள் அனைத்தும் நிறைவடைந்திருந்ததோடு, அரையிறுதிப் போட்டிகள் இரண்டும் நடைபெறாத நிலையிலையே கொரோனா வைரஸ் காரணமாக இந்த ஆண்டுக்கான பாகிஸ்தான் சுபர் லீக் தொடர் ஒத்திவைக்கப்பட்டது. எனவே தற்போது எடுக்கப்பட்டுள்ள தீர்மானத்திற்கு அமைய இந்த ஆண்டின் இறுதிப் பகுதியில் பாகிஸ்தான் சுபர் லீக்கின் அரையிறுதிப் போட்டிகளும், இறுதிப் போட்டியும் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.  

இதேநேரம் அடுத்த ஆண்டுக்கான (2021) பாகிஸ்தான் சுபர் லீக் தொடரின் போட்டிகள் யாவும் அடுத்த ஆண்டின் பெப்ரவரி, மார்ச் மாதங்களில் திட்டமிட்டபடி நடைபெறும் என பாகிஸ்தான் கிரிக்கெட் சபை அறிவித்திருந்தது.   

அதோடு, பெஷாவர் நகரில் இருக்கும் கிரிக்கெட் மைதானத்தினை பாகிஸ்தான் சுபர் லீக் போட்டிகள் நடைபெறும் ஐந்தாவது மைதானமாக மாற்றுவதற்கு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருவதாகவும் பாகிஸ்தான் கிரிக்கெட் சபை தெரிவித்திருக்கின்றது.  

இதுதவிர குறித்த நிர்வாகிகள் சந்திப்பின் போது பாகிஸ்தான் சுபர் லீக் தொடரினை முகாமைத்துவம் செய்வதற்கான விஷேட குழுவொன்றினை உருவாக்கியிருப்பதாகவும் இந்த குழுவின் தலைவராக சொஹைப் நவீட் செயற்பாடுவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

IPL இற்காக ஆசிய கிண்ணம் இரத்து செய்யப்படாது: பாகிஸ்தான்

இந்தியன் ப்ரீமியர் லீக் (ஐ.பி.எல்) தொடரை நடத்துவதற்காக இவ்வருடம்

பாகிஸ்தான் சுபர் லீக் தொடர் ஒரு பக்கம் இருக்க, பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் தலைவர் எஹ்சான் மணி பாகிஸ்தானின் கிரிக்கெட் விளையாட்டில் நடக்கும் ஊழல் விடயங்களை தடுக்க, ஊழல் தொடர்பான புதிய சட்டதிட்டங்கள் அடங்கிய வரைவு ஒன்றினை பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானிடம் சமர்ப்பித்திருப்பதாகவும் சுட்டிக்காட்டியிருந்தார்.  

இவற்றோடு 2020/21ஆம் ஆண்டுக்கான பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் புதிய வரவு செலவுத் திட்டம் தொடர்பிலும் நடைபெற்ற முடிந்த நிர்வாகிகள் சந்திப்பில் முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. 

மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க