ஐ.சி.சி. தலைமை பதவிக்கு மனோஹர் மீண்டும் போட்டியின்றி தேர்வு

114
Shashank Manohar

சர்வதேச கிரிக்கெட் கௌன்சில் (ஐ.சி.சி.) தலைமை பதிவிக்கு தனி வேட்பாளராக போட்டியிட்ட தற்போதைய தலைவர் சாஷங் மனோஹர் இரண்டாவது தவணைக்கு மீண்டும் தேர்வாகியுள்ளார். இந்திய கிரிக்கெட் சபையின் தலைவராக இருந்த மனோகர் 2016 இல் ஐ.சி.சி. இன் முதலாவது சுயாதீனமான தலைவராக பொறுப்பேற்றார். இந்நிலையில் அவர் மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு அந்த பதவியில் நீடிக்கவுள்ளார்.  

உலக பதினொருவர் அணியில் லூக் ரோன்ச்சி மற்றும் மெக்லெனகன்

இந்த மாத இறுதியில் மேற்கிந்திய தீவுகள் அணிக்கும் உலக பதினொருவர் அணிக்கும் இடையில் இடம்பெறவுள்ள

.சி.சி. இன் தேர்தல் நடைமுறைப்படி, கிரிக்கெட்டின் உயர்மட்ட சபையைச் சேர்ந்த தற்போதைய அல்லது முன்னாள் இயக்குனர்களுக்கு வேட்பாளராக நிற்க அனுமதி உள்ளது. இதில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட இயக்குனர்களின் ஆதரவுள்ள வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிட தகுதி பெறுகின்றனர். எனினும் .சி.சி. சபையில் இருந்து தலைவர் போட்டிக்கு மனோஹர் மாத்திரமே நின்றார்.

சர்வதேச கிரிக்கெட் கௌன்சிலின் தலைவராக மீண்டும் தேர்வு செய்யப்பட்டது கௌரவமானதாகும். தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் சக .சி.சி. இயக்குனர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன். 2016 ஆம் ஆண்டு நான் நியமிக்கப்பட்டபோது அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் கடந்த இரண்டு ஆண்டுகளாக நாம் ஒன்றிணைந்து பெரும் சவால்களுக்கு முகம்கொடுத்தோம் என்று தலைமை பதவிக்கு மீண்டும் தெரிவான பின் மனோஹர் குறிப்பிட்டார்.

மனோஹர் தனது பதவிக்காலத்தில் இந்தியா, இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபைகளுக்கு அதிக அதிகாரம் வழங்கும் 2014 .சி.சி. தீர்மானத்தை வெற்றிகரமாக மறு சீரமைத்தது குறிப்பிடத்தக்கதாகும். இந்திய கிரிக்கெட் சபையின் (மற்றும் இலங்கை கிரிக்கெட் சபை) எதிர்ப்பு வரும் என்று எதிர்பார்க்கப்பட்ட உயர்மட்ட அமைப்பின் விதிமுறைகள் மற்றும் நிதி மாதிரிகளை மறு சீரமைக்கவும் முடிந்தது. .சி.சி. இன் பங்கேற்புடன் முன்னர் திட்டமிடப்பட்டதை விடவும் வருவாயில் பெரும் பங்கை ஒதுக்குவதற்கான சமரசம் ஒன்றும் எட்டப்பட்டது.   

சர்வதேசப் போட்டிகளில் பங்கேற்கும் வீரர்களுக்கு ஊக்கமருந்து சோதனை கட்டாயம்

சர்வதேசப் போட்டிகளில் பங்குபற்றச் செல்கின்ற அனைத்து வீரர்களும் கட்டாயமாக ஊக்கமருந்து

.சி.சி. நிர்வாக கட்டமைப்பிலும் மனோஹர் திருத்தங்கள் கொண்டுவந்தார். இதன்மூலம், .சி.சி. இன் முதல் சுயாதீன பெண் இயக்குனராக இந்திரா நூயி நியமிக்கப்பட்டார். அவரது நிர்வாகத்தின் கீழ் .சி.சி. இன் அனைத்து அங்கத்துவ நாடுகளுக்கும் அண்மையில் T20 சர்வதேச அந்தஸ்து வழங்கப்பட்டதோடு அது இணை உறுப்பு நாடுகளுக்கு புதிய வாய்ப்புகளுக்கு வழி ஏற்படுத்தியது.

அடுத்த இரண்டு ஆண்டுகளில் எமது உறுப்பினர்களுடன் இந்த விளையாட்டுக்கான சர்வதேச மூலோபாயம் ஒன்றை முன்னெடுக்க நாம் எதிர்பார்த்துள்ளோம். இதன்மூலம் உலகமெங்கும் கிரிக்கெட்டை ரசிக்கக் கூடியதாக இந்த விளையாட்டை எம்மால் மேலும் வளரச் செய்ய முடியும். இந்த விளையாட்டு நல்ல நிலையில் உள்ளது என்றாலும் நாம் அதன் காவலர்கள் என்ற வகையில் அதனை தொடர்ந்து தக்கவைத்துக் கொள்ள பாடுபட வேண்டும் என்று மனோஹர் மேலும் கூறினார்.   

கிரிக்கெட் காணொளிகளைப் பார்வையிட