பேர்த் ஸ்கோச்சர்ஸ் அணிக்காக ஒப்பந்தமாகியுள்ள சாமரி அத்தபத்து

141

இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் முன்னணி வீராங்கனையான சாமரி அத்தபத்து, அவுஸ்திரேலியாவின் மகளிர் பிக் பேஷ் லீக் (WBBL) T20 தொடரில் பேர்த் ஸ்கோச்சர்ஸ் அணிக்கு விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கின்றார்.  

முதல் ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் மகுடம் யாருக்கு?

இந்த ஆண்டு (2021) ஆறாவது முறையாக மகளிர் பிக் பேஷ் லீக் (WBBL) தொடர் நடைபெறுகின்றது. இந்த தொடரில் கடந்த முறை மெல்போர்ன் ரெனகேட்ஸ் அணிக்காக ஆடிய இடதுகை துடுப்பாட்டவீராங்கனையான சாமரி அத்தபத்து பேர்த் ஸ்கோச்சர்ஸ் அணிக்கு ஒப்பந்தமானதன் மூலம் அவுஸ்திரேலிய உள்ளூர் கிரிக்கெட்டில் மீண்டும் விளையாடும் வாய்ப்பினைப் பெற்றிருக்கின்றார். 

இலங்கை மகளிர் கிரிக்கெட் அணிக்காக 84 ஒருநாள் மற்றும் 85 T20 போட்டிகளில் விளையாடியிருக்கும் சாமரி அத்தபத்து, கடந்த 2017ஆம் ஆண்டில் நடைபெற்ற மகளிர் உலகக் கிண்ணத்தின் போது  அவுஸ்திரேலிய அணிக்கு எதிராக ஆட்டமிழக்காமல் 178 ஓட்டங்களை விளாசி மகளிர் ஒருநாள் போட்டிகளில் ஒருவர் பெற்ற கூடிய அதிகூடிய ஓட்டங்களைப் பதிவு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

இதேநேரம், 2019ஆம் ஆண்டு T20 போட்டிகளிலும் சாமரி அத்தபத்து 66 பந்துகளில் 113 ஓட்டங்கள் பெற்று சிறந்த ஆட்டத்தினை வெளிப்படுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது. 

இரண்டு நாடுகளுக்கு கிரிக்கெட் ஆடிய முன்னணி வீரர்கள்

இந்நிலையில் சாமரி அத்தபத்து பேர்த் ஸ்கோச்சர்ஸ் அணிக்கு ஒப்பந்தமான விடயம் தொடர்பில் கருத்து வெளியிட்டிருக்கும் அவ்வணியின் தலைமைப் பயிற்சியாளர் செல்லி நிட்ஸ்கே, ”சாமரி அத்தபத்து மறுக்க முடியாத போட்டி வெற்றியாளராக இருப்பதோடு, எந்த சந்தர்ப்பத்திலும் போட்டியினை எதிரணியிடமிருந்து எடுத்துக்கொள்ளும் ஆற்றல் கொண்டவர்.” எனத் தெரிவித்திருந்தார்.  

இதேவேளை, மகளிர் பிக் பேஷ் லீக் (WBBL) தொடரில் சாமரி அத்தபத்துவின் பேர்த் ஸ்கோச்சர்ஸ் அணியுடன் சேர்த்து மொத்தம் 8 அணிகள் பங்கெடுக்கவிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது. 

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க…