பங்களாதேஷ் குழாத்தில் இணையும் முன்னணி வீரர்!

Sri Lanka tour of Bangladesh 2024

101

இலங்கை அணிக்கு எதிராக நடைபெறவுள்ள இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான பங்களாதேஷ் குழாத்தில் சகீப் அல் ஹஸன் இணைக்கப்பட்டுள்ளார். 

சகீப் அல் ஹஸன் இறுதியாக அயர்லாந்து அணிக்கு எதிராக கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் நடைபெற்ற தொடரில் விளையாடியிருந்தார். அதனைத் தொடர்ந்து டெஸ்ட் போட்டிகளில் விளையாடியிருக்கவில்லை. 

2024 ஐபிஎல் தொடரின் முழு அட்டவணை வெளியானது

சுமார் ஒரு வருட காலப்பகுதிக்கு பின்னர் மீண்டும் சகீப் அல் ஹஸன் அணியில் இணைக்கப்பட்டுள்ள நிலையில், ஏற்கனவே குழாத்தில் பெயரிடப்பட்டிருந்த தவ்ஹித் ரிடோய் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். 

அதேநேரம் கணுக்கால் உபாதைக்கு முகங்கொடுத்துள்ள முஷ்பிக் ஹஸன் இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான குழாத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளார். இவருக்கு பதிலாக வேகப்பந்துவீச்சாளர் ஹஸன் மஹ்முட் இணைக்கப்பட்டுள்ளார். இவர் பங்களாதேஷ் அணிக்காக இதுவரை டெஸ்ட் போட்டிகளில் விளையாடவில்லை. 

இவர் 39 மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டிகளில் விளையாடியுள்ள நிலையில், 16 முதற்தர போட்டிகளில் 49 விக்கெட்டுகளை சாய்த்துள்ளார். 

குறித்த இந்த இரண்டு மாற்றங்களை தவிர்த்து முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடிய ஏனைய அனைத்து வீரர்களுக்கும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 

இலங்கைபங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி எதிர்வரும் 30ம் திகதி சிட்டகொங்கில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

பங்களாதேஷ் குழாம் 

நஜ்முல் ஹுசைன் செண்டோ (தலைவர்), ஷாகீர் ஹஸன், மஹ்மதுல் ஹஸன், ஷாட்மன் இஸ்லாம், லிடன் டாஸ், மொமினுல் ஹக், சகீப் அல் ஹஸன், சஹாதத் ஹொசைன், மெஹிதி ஹாஸன் மிராஷ், நயீம் ஹஸன், தாஜூல் இஸ்லாம், சொரிபுல் இஸ்லாம், கஹ்லீட் அஹ்மட், நஹிட் ராணா, ஹஸன்  மஹ்முட் 

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<