சனத்தின் சாதனையை சமப்படுத்திய சகிப் அல் ஹசன்

598
©AFP

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக நடைபெற்ற நேற்றைய (14) உலகக் கிண்ண   கிரிக்கெட் போட்டியில், பங்களாதேஷ் அணியின் சகலதுறை வீரர் சகிப் அல் ஹசன், இலங்கை அணியின் முன்னாள் வீரர் சனத் ஜயசூரியவின் சாதனை ஒன்றை சமப்படுத்தியுள்ளார். 

ஆப்கானை வீழ்த்தி அரையிறுதி வாய்ப்பை தொடர்ந்தும் தக்கவைத்துள்ள பங்களாதேஷ்

கிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடரின் 31………

சௌதெம்டனில் நடைபெற்ற ஆப்கானிஸ்தான் – பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான போட்டியில் பங்களாதேஷ் அணி 62 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. குறித்த போட்டியில் விளையாடிய சகிப் அல் ஹசன் 51 ஓட்டங்களை பெற்றதுடன், பந்துவீச்சில் 5 விக்கெட்டுகளையும் கைப்பற்றியிருந்தார்.  

இதன் அடிப்படையில் உலகக் கிண்ணத்தில் 1000 ஓட்டங்களையும், 33 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார். இதன்படி, உலகக் கிண்ணங்களில் 1000 ஓட்டங்கள் மற்றும் 25 இற்கும் அதிகமான விக்கெட்டுகளை வீழ்த்தியவர்கள் பட்டியலில் இலங்கை அணியின் சனத் ஜயசூரியவுடன், சகிப் அல் ஹசன் இணைந்துக்கொண்டார்.  

அதேநேரம், நேற்றைய போட்டியில் அரைச்சதம் மற்றும் 5 விக்கெட்டுகளை பெற்றிருந்த சகிப் அல் ஹசன், இந்திய அணியின் முன்னாள் வீரர் யுவ்ராஜ் சிங்கின் சாதனையையும் சமப்படுத்தியுள்ளார். உலகக் கிண்ணப் போட்டியொன்றில் 5 விக்கெட்டுகள் மற்றும் அரைச்சதம் கடந்த இரண்டாவது வீரர் என்ற பெருமையை சகிப் அல் ஹசன் பெற்றுக்கொண்டார்.

எனது வெற்றிக்கு கடின உழைப்பும், அதிஷ்டமும் காரணம் – சகிப்

இம்முறை உலகக் கிண்ணத் தொடரில் ………..

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஒய்வை அறிவித்துள்ள இந்திய அணியின் முன்னாள் சகலதுறை வீரர் யுவ்ராஜ் சிங் கடந்த 2011ம் ஆண்டு நடைபெற்ற அயர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் 5 விக்கெட்டுகளை கைப்பற்றியதுடன், துடுப்பாட்டத்தில் 50 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் பெற்றுக்கொடுத்திருந்தார்.  

தற்போது எட்டு வருடங்களுக்கு பின்னர் குறித்த சாதனையை சகிப் அல் ஹசன் சமப்படுத்தியுள்ளார் என்பதுடன், சகிப் அல் ஹசன் மற்றும் யுவ்ராஜ் சிங் ஆகிய இருவர் மாத்திரமே உலகக் கிண்ணங்களில் இந்த சாதனையை கைவசம் வைத்துள்ளனர்.

இதேவேளை சகிப் அல் ஹசன், உலகக் கிண்ணத் தொடரொன்றில் 5 விக்கெட்டுகள் மற்றும் சதம் கடந்த மூன்றாவது வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இதற்கு முன்னர் இந்திய அணியின் கபில் தேவ் மற்றும் யுவ்ராஜ் சிங் ஆகியோர் இந்த சாதனையை படைத்திருந்தனர். அத்துடன், பங்களாதேஷ் அணி சார்பாக உலகக் கிண்ணங்களில் 1000 ஓட்டங்களை கடந்த முதல் வீரர் என்ற பெருமையையும் சகிப் அல் ஹசன் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<