ஐசிசியின் சிறந்த டெஸ்ட் அணியில் திமுத்; ஒருநாள் அணியின் தலைவியாக சமரி

ICC Team of the Year 2023

88

ஐசிசி வெளியிட்டுள்ள 2023ம் ஆண்டுக்கான சிறந்த டெஸ்ட் அணியில் இலங்கை அணியின் முன்னாள் தலைவர் திமுத் கருணாரத்ன ஆரம்ப துடுப்பாட்ட வீரராக இடம்பெற்றுள்ளார். 

சர்வதேச கிரிக்கெட் வாரியம் கடந்த ஆண்டுக்கான சிறந்த அணிகளை அறிவித்து வருகின்றது. இதில் சிறந்த மகளிர் T20I அணியின் தலைவியாக பெயரிடப்பட்ட இலங்கை அணியின் சமரி அதபத்து, சிறந்த ஒருநாள் அணியின் தலைவியாகவும் பெயரிடப்பட்டுள்ளார். 

முதல் இரண்டு டெஸ்ட்களிலும் கோலிக்கு ஓய்வு

நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடர் வெற்றியை நோக்கிய போட்டியில் 80 பந்துகளுக்கு 140 ஓட்டங்களை விளாசிய சமரி அதபத், பங்களாதேஷ் அணிக்கு எதிரான தொடர் வெற்றிக்கு பந்துவீச்சு மற்றும் துடுப்பாட்டம் என இரண்டிலும் பிரகாசித்திருந்தார். 

இறுதியாக நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரில் 2 சதங்களை விளாசியிருந்த இவர் முதன்முறையாக அந்த அணிக்கு எதிராக தொடர் வெற்றியை பெறுவதற்கும் உதவியிருந்தார். கடந்த ஆண்டு 69.16 என்ற ஓட்ட சராசரியில் 415 ஓட்டங்களையும் விளாசியிருந்தார். இதன்காரணமாக ஒருநாள் அணியின் தலைவியாக பெயரிடப்பட்டுள்ளார். 

ஐசிசியின் சிறந்த ஒருநாள் அணி (மகளிர்) 

போயெப் லிட்ச்பீல்ட், சமரி அதபத்து (தலைவி), எல்லிஸ் பெரி, அமீலியா கெர், பெத் மூனி, நட் ஸ்கேவியர் ப்ரண்ட், அஷ் கார்ட்னர், அனெபெல் சௌத்லேண்ட், நடீ டி கிளார்க், லியா தஹு, நயீடா அக்தார் 

திமுத் கருணாரத்ன 2023ம் ஆண்டுக்கான சிறந்த டெஸ்ட் அணியில் இடம்பெற்றுள்ளதுடன், அணியின் தலைவராக அவுஸ்திரேலியாவின் பெட் கம்மின்ஸ் பெயரிடப்பட்டுள்ளார். இந்திய அணியை பொருத்தவரை ரவீந்திர ஜடேஜா மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோர் இடம்பெற்றுள்ளதுடன், நியூசிலாந்தின் கேன் வில்லியம்சனும் இடத்தை தக்கவைத்துக்கொண்டுள்ளார். 

திமுத் கருணாரத்ன கடந்த ஆண்டு 6 டெஸ்ட் போட்டிகளில் மாத்திரம் விளையாடியிருந்தாலும், நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடர்ச்சியான 3 அரைச்சதங்களுடன் 60.8 என்ற சராசரியில் 608 ஓட்டங்களை குவித்துள்ளார். 

ஐசிசியின் சிறந்த டெஸ்ட் அணி (ஆடவர்) 

உஸ்மான் கவாஜா, திமுத் கருணாரத்ன, கேன் வில்லியம்சன், ஜோ ரூட், டிராவிஷ் ஹெட், ரவீந்திர ஜடேஜா, அலெக்ஸ் கேரி, பெட் கம்மின்ஸ் (தலைவர்), ரவிச்சந்திரன் அஸ்வின், மிச்சல் ஸ்டார்க், ஸ்டுவர்ட் புரோட் 

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<