முதல்முறை தேசிய கெரம் சம்பியனாக தெரிவாகிய சஹீட் ஹில்மி

234

தேசிய கெரம் சம்பியன் பட்டத்தை மூன்று தடவைகள் வென்றவரும், நடப்பு உலக கெரம் ஒற்றையர் சம்பியனுமான நிஷாந்த பெர்னாண்டோவை வீழ்த்தி இவ்வருடத்துக்கான தேசிய கெரம் சம்பியனாக கொழும்பு றோயல் கல்லூரியைச் சேர்ந்த சஹீட் ஹில்மி தெரிவானார்.

கடந்த மாதம் நடைபெற்ற சம்மேளனக் கிண்ண கெரம் சம்பியன்ஷிப் போட்டித் தொடரில் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் சம்பியன் பட்டத்தை வென்ற சஹீட், முதற்தடவையாக தேசிய கெரம் சம்பியனாகத் தெரிவானார்.

சம்பளேனக் கிண்ண கெரமில் சஹீட், ரொஷிட்டாவுக்கு ஒற்றையர் சம்பியன் பட்டம்

இலங்கை கெரம் சம்மேளனத்தினால் நடத்தப்பட்ட ..

இலங்கை கெரம் சம்மேளனத்தினால் நடத்தப்பட்ட 51ஆவது சம்மேளனக் கிண்ண கெரம் சம்பியன்ஷிப் போட்டித் தொடரின் இறுதிக் கட்டப் போட்டிகள் கொஹுவலையில் அமைந்துள்ள இலங்கை கெரம் சம்மேளன தலைமையகத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (10) நடைபெற்றது.

சுமார் ஒரு மாதகாலம் நடைபெற்ற இம்முறை தேசிய கெரம் சம்பியன்ஷிப் போட்டிகளில் நாடளாவிய ரீதியிலிருந்து சுமார் 350 வீர, வீராங்கனைகள் பங்குபற்றியிருந்தனர்.  

இதில் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் நடப்புச் சம்பியன் நிஷாந்த பெர்னாண்டோவை எதிர்கொண்ட கொழும்பு றோயல் கல்லூரியைச் சேர்ந்த சஹீட் ஹில்மி, 2-1 என்ற ஆட்டங்கள் (22-25, 25-00, 25-06) அடிப்படையில் வெற்றி பெற்று தேசிய கெரம் சம்பியன்ஷிப் தொடரில் முதற்தடவையாக சம்பியனாகத் தெரிவானார்.  

கடந்த 2011ஆம் ஆண்டு முதல் தேசிய கெரம் சம்பியன்ஷிப் போட்டித் தொடரில் பங்குபற்றி வருகின்ற சஹீட், 2014ஆம் ஆண்டு இறுதிப் போட்டிக்குத் தெரிவாகி இரண்டாவது இடத்தைப் பெற்றுக்கொண்டார். அதன்பிறகு நடைபெற்ற போட்டிகளில் தொடர்ந்து மூன்றாவது இடத்தைப் பெற்றுவந்த அவர், இம்முறை முதலிடத்தைப் பெற்று அசத்தினார்.

இதேநேரம், இம்முறை தேசிய கெரம் சம்பியன்ஷிப் தொடரில் இரட்டையர் பிரிவு மற்றும் கலப்பு பிரிவு ஆட்டங்களில் போட்டியிட்ட சஹீட்டுக்கு மூன்றாவது சுற்றுடன் வெளியேற நேரிட்டது.

இந்திய சிரேஷ்ட மெய்வல்லுனரில் இலங்கைக்கு 105 பதக்கங்கள்

இந்திய சிரேஷ்ட மெய்வல்லுனர் சம்மேளனத்தினால் …

முன்னதாக கடந்த மாத முற்பகுதியில் நடைபெற்ற சம்மேளனக் கிண்ண கெரம் சம்பியன்ஷிப் போட்டித் தொடரிலும் முதற்தடவையாக சஹீட் ஹில்மி சம்பியனாகத் தெரிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேநேரம், இம்முறை தேசிய கெரம் சம்பியன்ஷிப் போட்டித் தொடரில் இலங்கை விமானப்படையைச் சேர்ந்த சலனி லக்மாலி இரண்டு சம்பியன் பட்டங்களை வென்று அசத்தியிருந்தார்.

பெண்களுக்கான ஒற்றையர் இறுதிப் போட்டியில் இராணுவத்தின் ரெபேகா டெல்ரினை 2-1 என்ற கணக்கில் (25-23, 16-25, 25-00) வீழ்த்தி இலங்கை விமானப்படையைச் சேர்ந்த சலனி லக்மாலி சம்பியனானார்.

அதனைத்தொடர்ந்து கலப்புப் பிரிவில் உதேஷ் சந்திமவுடன் களமிறங்கிய சலனி, 2-0 என நேர் ஆட்டங்கள் கணக்கில் இலங்கை இராணுவத்தைச் சேர்ந்த அனஸ் அஹமட் மற்றும் ரெபேகா டெல்ரினை வீழ்த்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், கடந்த மாத முற்பகுதியில் நடைபெற்ற சம்மேளனக் கிண்ண கெரம் சம்பியன்ஷிப் போட்டித் தொடரில் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் சம்பியன் பட்டத்தை வென்ற ஜோசப் ரொஷிட்டாவுக்கு இம்முறை தேசிய கெரம் சம்பியன்ஷிப்பில் காலிறுதிச் சுற்றுடன் வெளியேற நேரிட்டது.

கரம் உலகில் இளம் வயதில் சாதனை படைத்த மொஹமட் சஹீட்

கிரிக்கெட் விளையாட்டுக்குப் பிறகு இலங்கையின் …

எனினும், நுகேகொட மஹமாயா கல்லூரி மாணவி தாருஷி ஹிமாஹன்சிகாவுடன் ஜோடி சேர்ந்து பெண்களுக்கான இரட்டையர் பிரிவில் போட்டியிட்ட ரொஷிட்டா, 2-0 என்ற நேர் ஆட்டங்கள் கணக்கில் இலங்கை இராணுவத்தைச் சேர்ந்த மதுவன்தி குணதாச மற்றும் எம். சித்ரா தேவி ஆகியோரை வீழ்த்தியிருந்தார்.

இதனிடையே, 2010ஆம் ஆண்டு முதல் தேசிய கெரம் சம்பியன்ஷிப் போட்டித் தொடரில் பங்குபற்றி வருகின்ற கொழும்பைச் சேர்ந்த ஜோசப் ரொஷிட்டா, 2010, 2012, 2014, 2015, 2016 மற்றும் 2018ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற தேசிய கெரம் சம்பியன்ஷிப் போட்டித் தொடரில் ஒற்றையர் பிரிவு சம்பியனாகத் தெரிவானார். எனினும், இம்முறை போட்டிகளில் அவருக்கு காலிறுதிச் சுற்றுடன் வெளியேற நேரிட்டது.

இதேவேளை, சிரேஷ்ட வீரர்களுக்கான வெட்டரன்ஸ் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் தெமடகொட யுனைடெட் விளையாட்டுக் கழகத்தின் ஹீனைட் ஹடீம் 2-1 ஆட்டங்கள் (24-23, 19-25, 25-24) கணக்கில் இலங்கை பாராளுமன்ற அணியைச் சேர்ந்த உபாலி பிரேமசந்திரவை வெற்றிகொண்டார்.

>>மேலும் விளையாட்டு செய்திகளைப் படிக்க<<