யுனைடெட் அணி அதிர்ச்சித் தோல்வி: சிட்டிக்கு இலகு வெற்றி

128

இங்லாந்து பிரீமியர் லீக் தொடரில் ஞாயிற்றுக்கிழமை (19) நடந்த இரு முக்கிய போட்டிகளில் பிரபல மன்செஸ்டர் சிட்டி அணி இலகு வெற்றியைப் பெற, மன்செஸ்டர் யுனைடட் அணி அதிர்ச்சித் தோல்வியை சந்தித்துள்ளது.

மன்செஸ்டர் யுனைடெட் எதிர் பிரைடன் மற்றும் ஹோவ் அல்பியோன்

இந்தப் போட்டியின் முதல் பாதியிலேயே மூன்று கோல்களை பெற்று அதிர்ச்சி கொடுத்த பிரைடன் அணி மன்செஸ்டர் யுனைடெட் அணியை 3-2 என்ற கோல் வித்தியாசத்தில் வீழ்த்தி இம்முறை பிரீமியர் லீக் தொடரில் புள்ளிகள் பெறுவதை ஆரம்பித்துள்ளது.

செல்சி, டொட்டன்ஹாமுக்கு அடுத்தடுத்து வெற்றி

இங்கிலாந்து பிரீமியர் லீக் தொடரின் இரண்டாவது..

இதன்மூலம் மன்செஸ்டர் யுனைடெட் அணி தனது சொந்த மைதானத்திற்கு வெளியில் பிரைடன் அணியிடம் தொடர்ச்சியாக மூன்றாவது லீக் தோல்வியை எதிர்கொண்டுள்ளது.  

பிரைடனின் கிழக்கு சசெக்ஸில் உள்ள பல்மர் அரங்கில் ஞாயிற்றுக்கிழமை நடந்த போட்டியில் மன்செஸ்டர் யுனைடெட் அணியின் மோசமான ஆரம்பத்தை பிரைடன் கச்சிதமாக பயன்படுத்திக் கொண்டது. 25 ஆவது நிமிடத்தில் தனியே பந்தை கடத்திச் சென்ற கிளன் முரய் அதனை வலைக்குள் தட்டிவிட்டார்.   

இந்த கோல் மூலம் முன்னிலை பெற்ற பிரைடன் அணி இரண்டு நிமிடங்களுக்குள்ளேயே மற்றொரு கோலை போட்டு பலம்மிக்க யுனைடெட்டுக்கு அதிர்ச்சி கொடுத்தது. எதிரணியினர் பந்தை கடத்திச் செல்வதில் தடுமாறுவதை பயன்படுத்திக் கொண்ட ஷேன் டப்பி இரண்டாவது கோலை பெற்றதோடு பிரீமியர் லீக்கில் அவரது முதல் கோலாகவும் இது இருந்தது.

இந்நிலையில் பெல்ஜியத்தின் முன்கள வீரரான ரொமேலு லுகாகு 34 ஆவது நிமிடத்தில் மன்செஸ்டர் யுனைடெட்டுக்கு முதல் கோலை பெற்றுக்கொடுத்தபோதும் அடுத்த 10 நிமிடங்களில் பிரைடன் அதற்கும் பதில் கொடுத்தது.

உலக சம்பியன் பிரான்ஸ் பிஃபா தரவரிசையில் முதலிடத்திற்கு முன்னேற்றம்

சர்வதேச கால்பந்து சம்மேளனத்தின் தரவரிசைப்..

பெனால்டி எல்லைக்குள் எரிக் பெய்லி இழைத்த தவறால் பிரைடன் அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்ததோடு 44ஆவது நிமிடத்தில் அதனை கோலாக மாற்றினார் பாஸ்கல் க்ரோஸ்.

இரண்டாவது பாதி ஆட்டத்தில் மன்செஸ்டர் யுனைடெட் அணியின் ஆட்டம் மேம்பட்டபோதும் அது வெற்றி கோல்களை பெறுவதற்கு முடியுமானதாக இருக்கவில்லை. போட்டியின் கடைசி தருவாயில் போல் பொக்பா கோல் ஒன்றை பெற்றார். எனினும் பிரைடன் அணி 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று 3 புள்ளிகளை பெற்றுக்கொண்டது.

மன்செஸ்டர் யுனைடெட் அடுத்து வரும் ஓகஸ்ட் 27 ஆம் திகதி முக்கியமான போட்டி ஒன்றில் டொட்டன்ஹாம் அணியை எதிர்கொள்ளவுள்ளது.

மன்செஸ்டர் சிட்டி எதிர் ஹடர்ஸ்பீல்ட் டவுன்

செர்ஜியோ அகுவேரோவின் ஹட்ரிக் கோல் உட்பட கோல் மழை பொழிந்த நடப்புச் சம்பியன் மன்செஸ்டர் சிட்டி அணி ஹடர்ஸ்பீல்ட் டவுன் கழத்தை துவம்சம் செய்து அந்தப் போட்டியை 6-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

இதன்மூலம் மன்செஸ்டர் சிட்டி பிரீமியர் லீக் புள்ளிப் பட்டியலில் ஆறு புள்ளிகளோடு முதலிடத்திற்கு முன்னேறியதோடு இதுவரை ஆடிய இரண்டு போட்டிகளிலும் எதிரணிக்கு மொத்தம் ஒன்பது கோல்களை விட்டுக்கொடுத்த ஹடர்ஸ்பீல்ட் டவுன் புள்ளிப் பட்டியலில் கடைசி இடமான 20ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டது.

குரோஷிய வீரர் மன்ட்சூகீச் சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு

நடந்து முடிந்த 2018ஆம் ஆண்டு பிஃபா உலகக் கிண்ண..

மன்செஸ்டர் சிட்டியின் சொந்த மைதானமான எட்டிஹாட் அரங்கில் நடைபெற்ற போட்டியில் 25ஆவது நிமிடத்தில் கோல் பெற ஆரம்பித்த அகுவாரோ, சிட்டி அணிக்காக 35 மற்றும் 75ஆவது நிமிடங்களில் கோல்களை பெற்று தனது 13 ஆவது ஹட்ரிக் கோலை பதிவு செய்து கொண்டார். இதில் அவர் ஒன்பது ஹட்ரிக் கோல்களை பிரீமியர் லீக்கில் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மன்செஸ்டர் சிட்டி சார்பில் காப்ரியல் ஜேசுஸ் (31′) மற்றும் டேவிட் சில்வா (48′) ஆகியோரும் கோல் பெற்றதோடு எதிரணி வீரரான டெரென்ஸ் ஹொங்கோலோவின் ஓன் கோல் ஒன்றும் சிட்டி அணிக்கு கிடைத்தது. மறுபுறம் 43 ஆவது நிமிடத்தில் ஸ்டதன்கோவிக் மூலம் கோல் ஒன்றை பெற்று ஹடர்ஸ்பீல்ட் டவுன் அணி ஆறுதல் அடைந்தது.

>> மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க <<