இந்திய சிரேஷ்ட மெய்வல்லுனரில் இலங்கைக்கு 105 பதக்கங்கள்

131

இந்திய சிரேஷ்ட மெய்வல்லுனர் சம்மேளனத்தினால் 39ஆவது தடவையாகவும் ஏற்பாடு செய்யப்பட்ட சிரேஷ்ட மெயவ்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடரில் பங்குகொண்ட இலங்கை வர்த்தக சேவை மெய்வல்லுனர் அணி, 105 பதக்கங்களை வென்று அசத்தியது.

இதில் இலங்கை சார்பாக போட்டியிட்ட சிரேஷ்ட மெய்வல்லுனர் வீரர்கள் 45 தங்கப் பதக்கங்களையும், 32 வெள்ளிப் பதக்கங்களையும், 28 வெண்கலப் பதக்கங்களையும் கைப்பற்றியிருந்தனர்.

ஊக்கமருந்து குற்றச்சாட்டில் சிக்கிய இளம் வீராங்கனை செல்ஸி மெலனி

கடந்த பெப்ரவரி முதலாம் திகதி முதல் 3 வரை இந்தியாவின் மகாராஷ்ட்ர மாநிலத்தில் உள்ள நாஷிக் விளையாட்டரங்கில் நடைபெற்ற இப்போட்டியில் இந்தியாவின் அனைத்து மாநிலங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தி சுமார் 3000 வீர வீராங்கனைகள் பங்குபற்றியிருந்தனர். இதனிடையே, இலங்கை வர்த்தக சேவை மெய்வ்லுனர் சங்கம் சார்பாக 35 வீரர்கள் பங்குபற்றியிருந்தனர்.

வருண உடவத்த தலைமையிலான இலங்கை சிரேஷ்ட மெய்வல்லுனர் அணியில், 21 வீரர்களும், 14 வீராங்கனைகளும் இடம்பெற்றிருந்தனர். அத்துடன், அணியின் முகாமையாளராக பசில் சில்வாவும், உதவி முகாமையாளராக தனுஷ்க ஜயவர்தனவும் செயற்பட்டிருந்தனர்.

இதுஇவ்வாறிருக்க, இந்திய சிரேஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடரில் பங்கேற்ற இலங்கை வர்த்தக சேவை மெய்வல்லுனர் அணி, நேற்று (06) நாடு திரும்பியது. இதன்போது, இலங்கை வர்த்தக சேவை மெய்வல்லுனர் சங்கத்தின் தலைவர் பிரசன்ன இந்திக மற்றும் ஆலோசகர் சிட்னி ரத்னாயக்க ஆகியோர் கலந்துகொண்டனர்.  

மேலும் பல மெய்வல்லுனர்  செய்திகளைப் படிக்க