சம்பளேனக் கிண்ண கெரமில் சஹீட், ரொஷிட்டாவுக்கு ஒற்றையர் சம்பியன் பட்டம்

107

இலங்கை கெரம் சம்மேளனத்தினால் நடத்தப்பட்ட 30ஆவது சம்மேளனக் கிண்ண கெரம் சம்பியன்ஷிப் போட்டித் தொடரில் சஹீட் ஹில்மி ஆண்கள் ஒற்றையர் பிரிவிலும், ஜோசப் ரொஷிட்டா பெண்கள் ஒற்றையர் பிரிவிலும் சம்பியன்களாகத் தெரிவாகினர்.

உலக உடற்கட்டழகர் போட்டியில் தங்கம் வென்ற இலங்கை வீரர் புஷ்பராஜ்

ஆசியாவின் கறுப்புச் சிங்கம் என வர்ணிக்கப்படுகின்ற ….

இதேநேரம், இம்முறை சம்மேளனக் கிண்ண கெரம் சம்பியன்ஷிப் போட்டித் தொடரில் கடற்பரை வீரரான நிஷான்த பெர்னாண்டோ மற்றும் ஜோசப் ரொஷிட்டா ஆகியோர் ஹெட்ரிக் சம்பியன் பட்டங்களை வென்று அசத்தியிருந்தனர்.

கொஹுவலையில் அமைந்துள்ள இலங்கை கெரம் சம்மேளன தலைமையகத்தில் கடந்த வார இறுதியில் நடைபெற்ற இம்முறை சம்மேளன கிண்ண கெரம் சம்பியன்ஷிப் போட்டிகளில் நாடாளவிய ரீதியிலிருந்து சுமார் 300 வீர, வீராங்கனைகள் பங்குபற்றியிருந்தார்.

இதில், ஆண்களுக்கான இறுதிப் போட்டியில் இராணுவத்தைச் சேர்ந்த சுராஜ் மதுவன்தவை எதிர்கொண்ட கொழும்பு றோயல் கல்லூரியைச் சேர்ந்த சஹீட் ஹில்மி, 2-0 நேர் ஆட்டங்கள் (25-10 25-8) அடிப்படையில் வெற்றி பெற்று சம்மேளன கிண்ண கெரம் சம்பியன்ஷிப் தொடரில் முதற்தடவையாக சம்பியனாகத் தெரிவானார்.

எனினும், இரட்டையர் பிரிவு மற்றும் கலப்பு பிரிவு ஆட்டங்களில் போட்டியிட்ட சஹீட்டுக்கு காலிறுதிச் சுற்றுடன் வெளியேற நேரிட்டமை குறிப்பிடத்தக்கது.

2019 கிரிக்கெட் உலகம் குறித்த ஓர் அலசல்

கடந்த காலங்களைக் காட்டிலும் 2019 ஆண்டானது கிரக்கெட் ….

கடந்த வருடம் தென்கொரியாவில் நடைபெற்ற உலக கெரம் சம்பியன்ஷிப் போட்டித் தொடரில் சம்பியன் பட்டத்தை வென்ற இலங்கை அணியில் விளையாடிய இளம் வீரராக இடம்பிடித்த மொஹமட் சஹீட், 2012 முதல் 2016 வரை நடைபெற்ற கனிஷ்ட மட்ட கெரம் போட்டிகளில் தனிநபர் மற்றும் குழு நிலைப் போட்டிகளில் சம்பியனாகவும் தெரிவாகினார்.

அதன்பிறகு 2014ஆம் ஆண்டு மாலைதீவுளில் நடைபெற்ற 4ஆவது உலக கெரம் சம்பியன்ஷிப் போட்டிகளில் முதற்தடவையாக இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்துவத்தி ஸ்விஸ் லீக் போட்டிப் பிரிவில் 6ஆவது இடத்தையும், குழு நிலைப் போட்டியில் சம்பியன் பட்டத்தையும் அவர் வென்றார்.

அதனைத்தொடர்ந்து 2016இல் இங்கிலாந்தில் நடைபெற்ற உலக கெரம் சம்பியன்ஷிப் தொடரில் தனிநபர் போட்டியில் 8ஆவது இடத்தையும், குழு நிலைப் போட்டியில் சம்பியன் பட்டத்தையும் வெற்றி கொண்ட அவர், குறித்த காலப்பகுதியில் நடைபெற்ற தேசிய மட்டப் போட்டிகளில் தேசிய கெரம் சம்பியன்களான சமில் குரேவை 2 தடவைகளும், நிஷாந்த பெர்னாண்டோவை ஒரு முறையும் வீழ்த்தியிருந்தார்.

இதேவேளை, பெண்களுக்கான இறுதிப் போட்டியில் இராணுவத்தின் மதுவன்தி குணதாசவை 2-1 என்ற கணக்கில் (17-25, 25-13, 25-8) வீழ்த்தி கடற்படையைச் சேர்ந்த ஜோசப் ரொஷிட்டா சம்பியனானார்.

2018 கால்பந்து உலகம் – ஒரு கண்ணோட்டம்

உயர்ந்துவரும் பந்தை தடுக்கும் முயற்சியாகவே மரியோ..

பெண்கள் ஒற்றையர் பிரிவில் சம்பியனான ரொஷிட்டா, மகளிர் இரட்டையர் பிரிவில் நுகேகொட மஹமாயா கல்லூரி மாணவி தாருஷி ஹிமாஹன்சிகவுடனும் கலப்பு இரட்டையர் பிரிவில் நிஷான்த பெர்னாண்டோவுடனும் ஜோடி சேர்ந்து மேலும் 2 சம்பியன் பட்டங்களை வென்றெடுத்து புதிய சாதனையையும் நிலைநாட்டினார்.

2010ஆம் ஆண்டு முதல் தேசிய மட்டப் போட்டிகளில் பங்குபற்றி வருகின்ற கொழும்பைச் சேர்ந்த ஜோசப் ரொஷிட்டா, 2010, 2012, 2014, 2015, 2016 மற்றும் 2018ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற தேசிய கெரம் சம்பியன்ஷிப் போட்டித் தொடர்களில் ஒற்றையர் பிரிவு சம்பியனாகத் தெரிவானார்.

அத்துடன், 2016ஆம் ஆண்டு நடைபெற்ற உலக கெரம் சம்பியன்ஷிப் போட்டித் தொடரில் இரண்டாவது இடத்தைப் பெற்றுக் கொண்ட இலங்கை மகளிர் கெரம் அணியில் இடம்பெற்றிருந்த அவர், இறுதியாக கடந்த வருடம் தென்கொரியாவில் நடைபெற்ற உலக கெரம் சம்பியன்ஷிப் போட்டித் தொடரிலும் பங்குபற்றி இரண்டாவது இடத்தைப் பெற்றுக்கொண்டார்.

இதேவேளை, சிரேஷ்ட வீரர்களுக்கான வெட்டரன்ஸ் ஒற்றையர் இறுதிப் போட்டியில் யுனைட்டட் விளையாட்டுக் கழகத்தின் ..டி இந்திரஜித்தை 2 நேர் ஆட்டங்கள் (25-23, 25-19) கணக்கில் நிஷாந்த பெர்னாண்டோ வெற்றிகொண்டார். அத்துடன், இரட்டையர் பிரிவில் சானக்க ஜீவனுடன் ஜோடி சேர்ந்து இரட்டையர் சம்பியன் பட்டத்தையும் வென்றமை குறிப்பிடத்தக்கது.

>>மேலும் விளையாட்டு செய்திகளைப் படிக்க<<