மொஹமட் அமீனின் அதிரடி பந்துவீச்சால் பேதுரு கல்லூரிக்கு இன்னிங்ஸ் வெற்றி

154

சிங்கர் நிறுவனத்தின் அனுசரணையோடு நடைபெறும் 19 வயதின் கீழான பாடசாலை (டிவிஷன் – I) அணிகளுக்கு இடையில் நடைபெறும் இரண்டு நாட்கள் கொண்ட கிரிக்கெட் தொடரில் இன்று (23) ஆறு போட்டிகள் முடிவடைந்தன.

புனித பெனடிக்ட் கல்லூரி எதிர் டி.எஸ் சேனநாயக்க கல்லூரி

மத்தேகொட இராணுவப்படை மைதானத்தில் முடிவடைந்த இப்போட்டியில் புனித பெனடிக்ட் கல்லூரியை இன்னிங்ஸ் மற்றும் 95 ஓட்டங்களால் டி.எஸ் சேனநாயக்க கல்லூரி தோல்வியுறச் செய்திருந்தது.

நேற்று தொடங்கிய போட்டியில் முதலில் துடுப்பாடியிருந்த புனித பெனடிக்ட் கல்லூரி மிகவும் மோசமான ஆட்டத்தை வெளிக்காட்டி 67 ஓட்டங்களையே முதல் இன்னிங்சில் குவித்தது. இதனையடுத்து பதிலுக்கு தங்களுடைய முதல் இன்னிங்சில் ஆடிய டி.எஸ். சேனநாயக்க கல்லூரியினர் வலதுகை துடுப்பாட்ட வீரர் முதித லக்ஷான் பெற்றுக்கொண்ட அபார சதத்தின் (127) உதவியுடன் 300 ஓட்டங்களுக்கு 9 விக்கெட்டுக்களை இழந்து மிகவும் வலுவாக காணப்பட்டிருந்த போது தமது ஆட்டத்தை இடைநிறுத்திக் கொண்டனர்.

>> D.S. சேனநாயக கல்லூரிக்கு வலுச்சேர்த்த முதித்த லக்‌ஷான் <<

இதனையடுத்து 233 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாம் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தை ஆரம்பித்த பெனடிக்ட் வீரர்கள் 138 ஓட்டங்களை மாத்திரமே இரண்டாம் இன்னிங்சில் பெற்று இன்னிங்ஸ் தோல்வியடைந்தனர். இம்முறையும் சிறப்பாக செயற்பட்ட டி.எஸ் சேனநாயக்க கல்லூரி அணியில் முதித லக்ஷான் 6 விக்கெட்டுக்களை கைப்பற்றி தனது தரப்புக்கு வெற்றியை சுவைக்கும் சந்தர்ப்பத்தை ஏற்படுத்தியிருந்தார்.

போட்டியின் சுருக்கம்

புனித பெனடிக்ட் கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 67 (22) – சஷிந்த ஹெட்டிகே 3/12, முதித லக்ஷான் 3/16

டி.எஸ் சேனநாயக்க கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 300/9d (64) – முதித லக்ஷான் 127, பசிந்து ஆதித்ய 39, மஹீஷ் தீக்ஷன 5/92

புனித பெனடிக்ட் கல்லூரி (இரண்டாவது இன்னிங்ஸ்) – 138 (53.2) – கவீஷ ஜயதிலக்க 34, முதித்த லக்ஷான் 6/40, பசிந்து ஆதித்ய 2/17

முடிவு – டி.எஸ் சேனநாயக்க கல்லூரி இன்னிங்ஸ் மற்றும் 95 ஓட்டங்களால் வெற்றி

புனித பேதுரு கல்லூரி, கொழும்பு எதிர் தர்மராஜ கல்லூரி, கண்டி

கொழும்பு புனித பேதுரு கல்லூரியின் சொந்த மைதானத்தில் முடிவடைந்த இந்தப் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 57 ஓட்டங்களால் கண்டி தர்மராஜ கல்லூரி அணி தோல்வியைத் தழுவியது.

போட்டியில் முதலில் துடுப்பாடியிருந்த பேதுரு கல்லூரி வீரர்கள் முதல் இன்னிங்சில் வலுவான 308 ஓட்டங்களை குவித்திருந்தனர். இதன் பின்னர் தர்மராஜ கல்லூரி தம்முடைய முதல் இன்னிங்சில் 112 ஓட்டங்களையே பெற்றுக் கொண்டனர். முதல் இன்னிங்ஸ் ஓட்டங்கள் போதாது என்பதனால் மீண்டும் பலோவ் ஒன் (Follow on) முறையில் ஆடிய தர்மராஜ வீரர்களுக்கு இரண்டாம் இன்னிங்சிலும் எதிர்பார்த்த முறையில் செயற்பட முடியவில்லை. 139 ஓட்டங்களுடன் அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து இன்னிங்ஸ் தோல்வியைத் தழுவினர்.

பேதுரு கல்லூரி சார்பாக வலதுகை சுழல் வீரர் மொஹமட் அமீன் இப்போட்டியில் மொத்தமாக 9 விக்கெட்டுக்களை கைப்பற்றி தனது தரப்பின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார்.

போட்டியின் சுருக்கம்

புனித பேதுரு கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 308 (77.1) – சலித பெர்னாந்து 75, சுலக்ஷன பெர்னாந்து 57, பிரபாஷன ஹேரத் 51, ஷனோன் பெர்னாந்து 48, துஷான் ஹேரத் 4/43

தர்மராஜ கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 112 (43.3) – விராஜித அஹலபொல 45, மொஹமட் அமீன் 4/60

தர்மராஜ கல்லூரி (இரண்டாம் இன்னிங்ஸ்) f/o – 139 (46.3) – பவந்த உடன்கமுவ 47, சச்சின் சில்வா 5/48, மொஹமட் அமீன் 5/60

முடிவு – புனித பேதுரு கல்லூரி இன்னிங்ஸ் மற்றும் 57 ஓட்டங்களால் வெற்றி

திரித்துவக் கல்லூரி, கண்டி எதிர் தர்ஸ்டன் கல்லூரி, கொழும்பு

இன்று (23) முடிவடைந்த  கண்டி திரித்துவக் கல்லூரி மற்றும் தர்ஸ்டன் கல்லூரி அணிகள் இடையிலான இந்தப் போட்டி சமநிலை அடைந்தது.

நேற்று தர்ஸ்டன் கல்லூரி மைதானத்தில் ஆரம்பித்திருந்த போட்டியில் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பாடியிருந்த திரித்துவக் கல்லூரி வீரர்கள் 187 ஓட்டங்களை அவர்களுடைய முதல் இன்னிங்சில் குவித்திருந்தனர். இதனை அடுத்து மைதான சொந்தக்காரர்கள் தம்முடைய முதல் இன்னிங்சை ஆரம்பித்து ஜனுஸ்க பெர்னாந்து (55) மற்றும் பன்சிலு தேஷான் (52) ஆகியோரின் அரைச்சதங்களுடன் 284 ஓட்டங்களை குவித்துக்  கொண்டனர். இதில் கவிஷ்க சேனாதீர 6 விக்கெட்டுக்களை திரித்துவக் கல்லூரி சார்பாக கைப்பற்றியிருந்தார்

>> போயகொடவின் உலக சாதனை மூலம் இலங்கை இளையோர் அணி அபார வெற்றி <<

தொடர்ந்து திரித்துவக் கல்லூரி அணி தம்முடைய இரண்டாம் இன்னிங்சில் துடுப்பாடியது. திரித்துவக் கல்லூரி இந்த இன்னிங்சில் ஹசிந்த ஜயசூரிய பெற்றுக் கொண்ட அரைச்சதத்தின் (74) உதவியுடன் 253 ஓட்டங்களுக்கு 8 விக்கெட்டுக்களை இழந்திருந்த போது போட்டியின் ஆட்ட நேரம் முடிவடைந்தது.

போட்டியின் சுருக்கம்

திரித்துவக் கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 187 (51.5) – புபுது பண்டார 38, அபிஷேக் ஆனந்தகுமார 31, அயெஷ் ஹர்ஷன 4/37, சந்தரு டயஸ் 3/55

தர்ஸ்டன் கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 284 (85.1) – ஜனுஸ்க பெர்னாந்து 55, பன்சிலு தேஷான் 52, நிமேஷ் பெரேரா 39, கவிஷ்க சேனாதீர 6/66

திரித்துவக் கல்லூரி (இரண்டாம் இன்னிங்ஸ்) – 253/8 (61) – ஹசிந்த ஜயசூரிய 74, திரேவோன் பெர்சிவேல் 40, அயெஷ் ஹர்ஷன 3/53, சந்தரு டயஸ் 3/75

முடிவு – போட்டி சமநிலை அடைந்தது (தர்ஸ்டன் கல்லூரி முதல் இன்னிங்ஸ் வெற்றி)

ஏனைய போட்டிகளின் சுருக்கம்……..

புனித மரியாள் கல்லூரி, கேகாலை எதிர் புனித அலோசியஸ் கல்லூரி, காலி

புனித மரியாள் கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 121 (44.2) – NDPM. வலிசிங்க 26, கவிக தில்ஷான் 4/12, கவீஷ விலோச்சன 2/15

புனித அலோசியஸ் கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 145 (59.2) – நிலுக்ஷ தில்மின 85, VKWATS. குமார 5/47

புனித மரியாள் கல்லூரி (இரண்டாம் இன்னிங்ஸ்) – 92 (38.1) – கவிக தில்ஷான் 7/32

புனித அலோசியஸ் கல்லூரி (இரண்டாம் இன்னிங்ஸ்) – 70/1 (10.5)

முடிவு – புனித அலோசியஸ் கல்லூரி 9 விக்கெட்டுக்களால் வெற்றி

குருகுல கல்லூரி, களனி எதிர் றிச்மண்ட் கல்லூரி, காலி

குருகுல கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 226 (84.4) – மலிந்து விதுரங்க 97*, ப்ரவீன் நிமேஷ் 72, அவிந்து தீக்ஷன 4/54

றிச்மண்ட் கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 227/8d (103.1) – சமத் தில்ஷார 53*, துவின் கலன்சூரிய 39, யுஷான் மலித் 3/39

குருகுல கல்லூரி (இரண்டாம் இன்னிங்ஸ்) – 80/3 (21) – ப்ருதுவி ருசார 27*, அவிந்து தீக்ஷன 2/32

முடிவு – போட்டி சமநிலை அடைந்தது. (றிச்மண்ட் கல்லூரி முதல் இன்னிங்ஸ் வெற்றி)

புனித ஜோன்ஸ் கல்லூரி, பாணதுறை எதிர் புனித அந்தோனியார் கல்லூரி, வத்தளை

புனித ஜோன்ஸ் கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 256 (76.3) – சமிந்து விக்கிரமாரச்சி 84*, அஷான் தில்ஹார 46, கவீஷ துலஞ்சன 4/15

புனித அந்தோனியார் கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 359/9d (71.2) – லஹிரு மதுபாஷன 92, தரிந்து சந்திம 85, ரஷ்மித்த மேவன் 42, ப்ரவீன் சந்தமல் 5/35

புனித ஜோன்ஸ் கல்லூரி (இரண்டாம் இன்னிங்ஸ்) – 261/7 (42.5) – அஷான் தில்ஹார 125*, ப்ரவீன் சந்தமல் 40, பசிந்து சத்துரங்க 2/36

முடிவு – போட்டி சமநிலை அடைந்தது. (புனித அந்தோனியார் கல்லூரி முதல் இன்னிங்ஸ் வெற்றி)

>> முக்கோண ஒரு நாள் தொடரிலிருந்து வெளியேறும் குசல் பெரேரா <<

புனித செபஸ்டியன் கல்லூரி, மொரட்டுவை எதிர் பண்டாரநாயக்க கல்லூரி, கம்பஹா

புனித செபஸ்டியன் கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 301/9d (69.2) – தருஷ பெர்னாந்து 95, நிஷித்த அபிலாஷ் 55, ஷனெல் பெர்னாந்து 51, ஜனிது ஜயவர்தன 5/78

பண்டாரநாயக்க கல்லூரி (முதல்இன்னிங்ஸ்) – 120/3 (37) – அரோஷ மதுஷான் 36*, மாதவ தத்சார 32

போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் நாளை தொடரும்

பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரி, மொரட்டுவை எதிர் றோயல் கல்லூரி, கொழும்பு

பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 277 (76.2) – சந்துன் பெர்னாந்து 99, சுவாத் மெண்டிஸ் 48, அவிந்து பெர்னாந்து 43, கமில் மிஷார 4/61

றோயல் கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 30/4 (14 .5)

போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் நாளை தொடரும்