போயகொடவின் உலக சாதனை மூலம் இலங்கை இளையோர் அணி அபார வெற்றி

1001
Boyagoda

ஹசித்த போயகொட 191 ஓட்டங்களை விளாசி பெற்ற புதிய உலக சாதனை மூலம் 19 வயதுக்கு உட்பட்ட உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியின் “பிளேட்” கிண்ணத்திற்கான காலிறுதியில் இலங்கை அணி 311 ஓட்டங்கள் வித்தியாசத்தில் கென்யாவை அபாரமாக வீழ்த்தியது.

[rev_slider LOLC]

இதன்போது இலங்கை இளையோர் அணி 419 ஓட்டங்களை விளாசியதோடு கென்யாவை வெறுமனே 108 ஓட்டங்களுக்கு சுருட்டியது. இந்த வெற்றியின் மூலம் இலங்கை உலகக் கிண்ணத்தின் பிளேட் கேடயத்திற்கான அரையிறுதிப் போட்டிக்கு முன்னேற்றம் கண்டது.

இளையோர் உலகக் கிண்ணத்திலிருந்து இலங்கை அணி வெளியேற்றம்

19 வயதுக்கு உட்பட்ட உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் இளையோர்..

நியூசிலாந்தில் நடைபெற்று வரும் இளையோர் உலகக் கிண்ண போட்டியின் குழு நிலை ஆட்டங்களில் சோபிக்காத இலங்கை அணி கிண்ணத்தை வெல்வதற்காக காலிறுதிக்கு முன்னேறத் தவறியது. எனினும் தொடரின் பிளே ஓப் போட்டிகளில் ஆடும் இலங்கை இன்று (23) கென்யாவை லிங்கோன் அரங்கில் எதிர்கொண்டது.

இதில் தீர்க்கமான குழுநிலை போட்டிகள் இரண்டிலும் அணியில் இணைக்கப்படாத கண்டி, திரித்துவ கல்லூரியின் ஹசித்த போயகொட சேர்க்கப்பட்டார். புனித பேதுரு கல்லூரி வீரர் சந்துஷ் குணதிலக்க சோபிக்க தவறிய நிலையிலேயே போயகொடவுக்கு அணியில் இடம் கிடைத்தது.

இந்நிலையில் போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை 19 வயதுக்கு உட்பட்ட அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. தனஞ்சய லக்ஷான் வேகமாக 29 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்தார். எனினும் மறுமுனையில் ஆடிய ஹசித்த போயகொட கென்ய அணியின் பந்துவீச்சாளர்களுக்கு தலையிடி கொடுத்தார். அவர் நிஷான் மதுஷங்கவுடன் இணைந்து 2 ஆவது விக்கெட்டுக்கு 144 ஓட்டங்களை பகிர்த்து கொண்டார்.

இதன்போது போயகொட ஒரு நேர்த்தியான ஆட்டத்தை வெளிக்காட்டினார். ஆரம்பத்தில் பவர் பிளே (PowerPlay) கட்டுப்பாடுகளை பயன்படுத்தி வேகமாக ஓட்டங்கள் குவித்த அவர், 39 பந்துகளில் அரைச்சதம் எட்டினார். பின்னர் மத்திய ஓவர்களில் சற்று நிதானமாக ஓட்டங்கள் சேகரித்து கடைசியில் வேகத்தை காட்டினார். இம்முறை உலகக் கிண்ணத்தில் கச்சிதமான ஆட்டங்களில் ஒன்றாக போயகொடவின் துடுப்பாட்டம் மாறியது.  

முக்கோண ஒரு நாள் தொடரிலிருந்து வெளியேறும் குசல் பெரேரா

இலங்கை அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரரான அதிரடி…

ஒரு சராசரியான ஓட்ட வேகத்தோடு சிறப்பாக பந்தை அடித்தாடிய போயகொட பௌண்டரி ஒன்றை விளாசி 89 பந்துகளில் சதத்தை எட்டினார். தொடர்ந்து சிறப்பாக ஆடிய அவர் 191 ஓட்டங்களை பெற்று இரட்டைச் சதத்தை நெருங்கியபோது 45ஆவது ஓவரில் வைத்து ஆட்டமிழந்தார். இந்த ஓட்டங்களை பெறுவதற்கு அவர் 158 பந்துகளில் 28 பௌண்டரிகள் மற்றும் 2 சிக்சர்களை பெற்றார்.

இதன்மூலம் 19 வயதுக்கு உட்பட்ட ஒரு நாள் சர்வதேச போட்டிகளில் அதிக ஓட்டங்கள் பெற்றவராக போயகொட புதிய உலக சாதனை படைத்தார். சரியாக ஆறு தினங்களுக்கு முன் இதே கென்ய அணிக்கு எதிராக நியூசிலாந்து இளையோர் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் ஜகப் பூஹ்லா 180 ஓட்டங்களை பெற்ற சாதனையையே குறுகிய காலத்திற்குள் போயகொட முறியடித்தார்.   

மறுமுனையில் ஆடிய நிஷான் மதுஷங்கவும் சிறப்பாக செயற்பட்டு 58 பந்துகளில் 60 ஓட்டங்களை பெற்றார். போயகொட ஆட்டமிழந்த பின்னர் போட்டியின் பரபரப்பு மேலும் அதிகரித்தது. ஐந்தாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த அணித்தலைவர் கமின்து மெண்டிஸ் மற்றும் நுவன் பெர்னாண்டோ ஜோடி கடைசி ஐந்து ஓவர்களுக்கும் 80 ஓட்டங்களை குவித்தனர்.

இதன்மூலம் காலி, ரிச்மண்ட் கல்லூரியைச் சேர்ந்த கமின்து மெண்டிஸ் 21 பந்துகளில் 3 பௌண்டரிகள் 4 சிக்ஸர்களோடு ஆட்டமிழக்காது 51 ஓட்டங்களை பெற்றதோடு மறுமுனையில் பெர்னாண்டோ 18 பந்துகளில் 35 ஓட்டங்களை விளாசினார். குறிப்பாக நுவன் பெர்னாண்டோ கடைசி ஓவரில் 3 சிக்ஸர்கள் மற்றும் ஒரு பௌண்டரியுடன் 24 ஓட்டங்களை பெற்றார்.    

திசரவை புகழ்ந்த சந்திமாலுக்கு வெற்றியில் முழுத் திருப்தியில்லை

ஜிம்பாப்வே அணியுடனான போட்டியில் பந்து வீச்சாளர்கள்..

இறுதியில் இலங்கை இளையோர் அணி 50 ஓவர்களுக்கும் 4 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து பெற்ற 419 ஓட்டங்களும் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஒரு நாள் சர்வதேச போட்டிகளில் பெறும் 4ஆவது அதிகூடிய ஓட்டங்களாகும். 2002ஆம் ஆண்டு கென்ய இளையோர் அணிக்கு எதிராக அவுஸ்திரேலியா பெற்ற 480 ஓட்டங்களுமே இந்த வரிசையில் முதலிடத்தில் காணப்படுகிறது.

இந்நிலையில் இமாலய வெற்றி இலக்கை நோக்கி பதிலெடுத்தாட களமிறங்கிய கென்ய அணிக்கு இலங்கை அணியினர் பந்துவீச்சிலும் நெருக்கடி கொடுத்தனர். குறிப்பாக அம்பலங்கொடை, தேவானந்த கல்லூரியைச் சேர்ந்த ஹரீன் புத்தில எதிரணியின் முக்கிய விக்கெட்டுகளை பதம்பார்த்தார்.

இதனால் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்த கென்ய இளையோர் அணி 108 ஓட்டங்களுக்கே சுருண்டது. மத்திய வரிசையில் வந்த தோமஸ் ஒஜிஜோ பெற்ற 45 ஓட்டங்களுமே அதிகம் என்பதோடு மூன்று வீரர்கள் மாத்திரமே இரட்டை இலக்க ஓட்டங்களை பெற்றனர்.

அபாரமாக பந்துவீசிய ஹரீன் புத்தில 10 ஓவர்களுக்கு 27 ஓட்டங்களை மாத்திரம் கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தியதோடு நிபுன் மாலிங்க 2 விக்கெட்டுகளை பதம்பார்த்தார்.

எனினும் அபார துடுப்பாட்டத்தை வெளிக்காட்டிய ஹசித்த போயகொட போட்டியின் ஆட்ட நாயகன் விருதை வென்றார்.

18 இலங்கை வீரர்களுக்கே ஐ.பி.எல் இறுதி ஏலத்திற்கு வாய்ப்பு

இந்திய கிரிக்கெட் சபையினால் நடத்தப்பட்டு வருகின்ற ஐ.பி.எல்..

இதன்படி இலங்கை அணி 311 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பெற்ற வெற்றியானது இளையோர் ஒரு நாள் சர்வதேச போட்டிகளில் பெறும் இரண்டாவது மிகப்பெரிய வெற்றி என்ற சாதனையை அவுஸ்திரேலியாவுடன் சமப்படுத்தியது. இதன் முதல் இடத்திலும் அவுஸ்திரேலிய அணியே உள்ளது. 2002ஆம் ஆண்டு கென்யாவுக்கு எதிரான போட்டியை அவுஸ்திரேலிய இளையோர் அணி 430 ஓட்டங்களால் வென்றமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை அணி அடுத்து, தொடரின் 9ஆவது இடத்தை தீர்மானிப்பதற்கான பிளேட் கேடய அரையிறுதியில் ஜிம்பாப்வே அணியை ஜனவரி 25ஆம் திகதி எதிர்கொள்ளவுள்ளது. பிளேட் கிண்ணத்திற்கான மற்றைய அரையிறுதியில் மேற்கிந்திய தீவுகள் மற்றும் கனடா அணிகள் ஜனவரி 26ஆம் திகதி பலப்பரீட்சை நடத்தும்.  

போட்டியின் சுருக்கம்

இலங்கை – 419/4 (50) – ஹசித்த போயகொட 191, நிஷான் மதுஷங்க 60, கமின்து மெண்டிஸ் 53, ஜெஹான் டானியல் 37, நவின்து பெர்னாண்டோ 35, அபிஷேக் சிதம்பரன் 2/68

கென்யா – 108 (35.5) – தோமஸ் ஒஜிஜோ 45, ஹரீன் புத்தில 27/2, நிபுன் மாலிங்க 2/14

முடிவு – இலங்கை 19 வயதுக்கு உட்பட்ட அணி 311 ஓட்டங்களால் வெற்றி