முக்கோண ஒரு நாள் தொடரிலிருந்து வெளியேறும் குசல் பெரேரா

2856

இலங்கை அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரரான அதிரடி ஆட்டக்காரர் குசல் ஜனித் பெரேரா உபாதைக்குள்ளாகியிருக்கும் காரணத்தினால் பங்களாதேஷில் நடைபெற்று வரும் முக்கோண ஒரு நாள் தொடரின் எஞ்சிய போட்டிகளில் விளையாடமாட்டார் என இலங்கை கிரிக்கெட் வாரியம் தம்முடைய ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ஜிம்பாப்வே அணியுடன் நேற்று நடைபெற்ற போட்டியின் போதே குசல் இந்த உபாதையினை எதிர்கொண்டிருந்தார். குறிப்பிட்ட போட்டியில் பெரேரா  49 ஓட்டங்களினை குவித்து இலங்கை 5 விக்கெட்டுக்களால் போட்டியின் வெற்றியாளர்களாக மாற உதவியிருந்தார்.

திசரவை புகழ்ந்த சந்திமாலுக்கு வெற்றியில் முழுத் திருப்தியில்லை

ஜிம்பாப்வே அணியுடனான போட்டியில் பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்ட…

இந்நிலையில் அவரது இடத்தை நிரப்புவதற்காக முன்வரிசை வீரரான தனன்ஜய டி சில்வா அணிக்கு உள்வாங்கப்பட்டுள்ளார்.

[rev_slider LOLC]

ஏற்கனவே, இலங்கை அணியின் தலைவர் அஞ்செலோ மெதிவ்ஸ் வலது கால் தொடையில் ஏற்பட்ட உபாதை காரணமாக முக்கோண ஒரு நாள் தொடரில் இருந்து விலகி நாடு திரும்பியுள்ளார். எனவே, அவரும் இல்லாத ஒரு நிலையிலேயே தற்பொழுது குசலும் உபாதைக்குள்ளாகியுள்ளார்.  

பங்களாதேஷில் இடம்பெறும் ஏனைய போட்டிகளுக்காக அவர் இலங்கை அணியில் இணைகின்றமை அவரது மருத்துவ ஆலோசனையைப் பொருத்தே உள்ளது.

இலங்கை அணி முக்கோண ஒரு நாள் தொடரின் இறுதி குழு நிலை ஆட்டத்தில் எதிர்வரும் வியாழக்கிழமை பங்களாதேஷ் அணியை எதிர்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.