இளையோர் ஆசியக்கிண்ணத்துக்கான போட்டி அட்டவணை வெளியானது

ACC Men’s U19 Asia Cup 2023

1385
ACC Men’s U19 Asia Cup 2023

ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெறவுள்ள 19 வயதின் கீழ் ஆசியக்கிண்ணத் தொடருக்கான போட்டி அட்டவணை உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி அடுத்த மாதம் 8ம் திகதி முதல் 17ம் திகதிவரை ஐக்கிய அரபு இராச்சிய கிரிக்கெட் சபையின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ளது.

>>உலகக்கிண்ணத் தொடரிலிருந்து வெளியேறும் சகீப் அல் ஹஸன்

இதில் இரண்டு குழுக்கள் வகுக்கப்பட்டுள்ளதுடன், A குழுவில் இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் நேபாளம் ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன. அதேநேரம் B குழுவில் இலங்கை, பங்களாதேஷ், ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் ஜப்பான் அணிகள் இடம்பெற்றுள்ளன.

இலங்கை இளையோர் அணி தங்களுடைய முதல் போட்டியில் ஜப்பான் அணியை அடுத்த மாதம் 19ம் திகதி எதிர்கொள்ளவுள்ளதுடன், 11 மற்றும் 13ம் திகதிகளில் முறையே ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் பங்களாதேஷ் அணிகளை எதிர்கொள்ளவுள்ளது.

போட்டி அட்டவணை

 • டிசம்பர் 8| இந்தியா எதிர் ஆப்கானிஸ்தான்
 • டிசம்பர் 8 | பாகிஸ்தான் எதிர் நேபாளம்
 • டிசம்பர் 9 | பங்களாதேஷ் எதிர் ஐக்கிய அரபு இராச்சியம்
 • டிசம்பர் 9 | இலங்கை எதிர் ஜப்பான்
 • டிசம்பர் 10| இந்தியா எதிர் பாகிஸ்தான்
 • டிசம்பர் 10 | நேபாளம் எதிர் ஆப்கானிஸ்தான்
 • டிசம்பர் 11| இலங்கை எதிர் ஐக்கிய அரபு இராச்சியம்
 • டிசம்பர் 11| பங்களாதேஷ் எதிர் ஜப்பான்
 • டிசம்பர்12 | பாகிஸ்தான் எதிர் ஆப்கானிஸ்தான்
 • டிசம்பர்12 | நேபாளம் எதிர் இந்தியா
 • டிசம்பர்13| இலங்கை எதிர் பங்களாதேஷ்
 • டிசம்பர்13 | ஜப்பான் எதிர் ஐக்கிய அரபு இராச்சியம்
 • டிசம்பர்15 | அரையிறுதிப்போட்டி
 • டிசம்பர்17 | இறுதிப்போட்டி

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<