இந்தப் பருவத்திற்கான இந்திய பிரீமியர் லீக் (IPL) T20 தொடரில் பங்கெடுக்கும் அணிகளில் ஒன்றான ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் (RCB), தமது அணி குழாத்திற்குள் ஜிம்பாப்வே வேகம் நட்சத்திரம் ப்ளெஸ்ஷிங் முசாரபனியை இணைத்துள்ளது.
>>ஆஸி. கழகத்தில் கௌஷால் சில்வாவுக்கு முக்கிய பதவி<<
ப்ளெஸ்ஷிங் முசாரபனி IPL தொடரின் எஞ்சிய போட்டிகளில், லுங்கி ன்கிடிக்குப் பதிலாக ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் ஆடவிருக்கின்றார்.
முன்னணி வேகப்பந்துவீச்சாளரான லுங்கி ன்கிடி ஐ.சி.சி. உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஆட தென்னாபிரிக்க அணியுடன் இணையும் நிலையிலையே அவர் முசாரபனி மூலம் பிரதியீடு செய்யப்பட்டுள்ளார்.
இதுவரை IPL அறிமுகம் பெறாத முசாரபனி 75 இலட்ச ரூபாய்களுக்கு, RCB அணி மூலம் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேநேரம் முசாரபனி 2022ஆம் ஆண்டுக்கான IPL தொடரில் லக்னோவ் சுபர் ஜயன்ட்ஸ் அணியில் வலைப்பந்துவீச்சாளராக செயற்பட்டிருந்தமை சுட்டிக்காட்டப்பட வேண்டிய விடயமாகும்.
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<