இலங்கை அணிக்கு புதிய சுழல்பந்து பயிற்சியாளர்

224

பங்களாதேஷ் சுற்றுப் பயணத்தின் போது இலங்கை கிரிக்கெட் அணியின் சுழல் பந்துவீச்சுப் பயிற்சியாளராக செயற்பட சஜீவ வீரகோன் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கு எதிராக மூன்றாம் இலக்க வீரராக களமிறங்கும் சகீப்

பங்களாதேஷிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இலங்கை கிரிக்கெட் அணி, அங்கே எதிர்வரும் 23ஆம் திகதி ஆரம்பமாகும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆடுகின்றது.

Video – தேர்வுக்குழுவின் திட்டத்தை வெளியிட்ட குசல் பெரேரா!

சர்வதேச கிரிக்கெட் வாரியத்தின் (ICC) ஒருநாள் சுப்பர் லீக்கினுடைய ஒரு அங்கமாக அமையும் இந்த தொடருக்கு, இலங்கை அணி தீவிரமாக தயராகி வருகின்ற நிலையிலையே முன்னாள் சுழல் பந்துவீச்சாளரான சஜீவ வீரகோன் இலங்கை கிரிக்கெட் அணிக்கு சுழல்பந்துவீச்சு பயிற்சியாளராக நியமனம் செய்யப்பட்டிருக்கின்றார்.

சஜீவ வீரகோனின் நியமனம் தற்காலிகமானது எனக் குறிப்பிடப்படுகின்ற போதும், அதிக இளம் வீரர்களை கொண்டிருக்கும் இலங்கை அணிக்கு அவரது அனுபவம் பெரிதாக உதவும் எனக் குறிப்பிடப்படுகின்றது.

இலங்கை அணியின் வேகப் பந்துவீச்சு பயிற்சியாளர் சமிந்த வாஸ் உடன் இணைந்து தற்போது பணிபுரியப் போகும் சஜீவ வீரகோன், இலங்கை அணியினை 2 ஒருநாள் போட்டிகளில் பிரதிநிதித்துவம் செய்திருப்பதோடு, மொத்தமாக (List A) 157 உள்ளூர் ஒருநாள் போட்டிகளில் ஆடி 207 விக்கெட்டுக்களை கைப்பற்றியிருக்கின்றார். அதேபோன்று அவர் முதல்தரப் போட்டிகளில் 816 விக்கெட்டுக்களை சாய்த்திருப்பது குறிப்பிடப்படுன்றது.

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<