இலங்கை கிரிக்கட் சபை நேற்று வெளியிட்ட அறிக்கையின்படி சர்வதேச கிரிக்கட் கவுன்சில் (ஐசிசி), இலங்கைக் கிரிக்கட் சபையின் தலைவர் திலங்க சுமதிபாலவை ஐசிசி நிர்வாகக் குழு இயக்குனர் வேட்பாளராக ஏற்றுக் கொண்டுள்ளதாகக் கூறியுள்ளது.
2016 ஜனவரி மாதம் இலங்கை கிரிக்கட் சபையின் தலைவராக திலங்க சுமதிபால நியமிக்கப்பட்டிருந்தார். சமீபத்தில் டுபாயில் நடைபெற்று முடிந்த ஐசிசி நிர்வாகக் குழுக்கூட்டத்தில் திலங்க சுமதிபால பங்கேற்பாளர்களில் ஒருவராக பங்குபற்றி இருந்தமை குறிப்பிடத்தக்கது.