இலங்கைக்கு எதிராக மூன்றாம் இலக்க வீரராக களமிறங்கும் சகீப்

125

நட்சத்திர சகலதுறை வீரரான சகீப் அல் ஹசன், இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரின் மூலம் மீண்டும் பங்களாதேஷ் அணியில் இணைந்து கொள்வார் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. 

ICC டெஸ்ட் தரவரிசையில் இலங்கைக்கு பின்னடைவு

கடைசியாக பங்களாதேஷ் அணிக்காக இந்த ஆண்டின் ஆரம்பத்தில் மேற்கிந்திய தீவுகள் அணியுடன் நடைபெற்ற இருதரப்பு தொடரில் ஆடிய சகீப் அல் ஹசன் அதனை அடுத்து, பங்களாதேஷ் அணி விளையாடிய எந்தவொரு கிரிக்கெட் தொடரிலும் பங்கேற்கவில்லை. 

அந்தவகையில், இலங்கைக்கு எதிரான தொடர் மூலம் மீண்டும் பங்களாதேஷ் அணியுடன் இணையும் சகீப் அல் ஹசன் இலங்கை அணிக்கு எதிரான போட்டிகளின் போது ஒரு துடுப்பாட்டவீரராக, குறிப்பாக மூன்றாம் இலக்கத் துடுப்பாட்ட வீரராக தனது தரப்பிற்கு பலம் சேர்க்க எதிர்பார்க்கப்படுகின்றார் என பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் சிரேஷ்ட தேர்வாளரான மின்ஹாஜூல் ஆப்தின் குறிப்பிட்டிருக்கின்றார். 

கடந்த 2019ஆம் ஆண்டு உலகக் கிண்ணத் தொடரிலிருந்து மூன்றாம் இலக்கத் துடுப்பாட்டவீரராக களமிறங்கும் சகீப் அல் ஹசன், அதிலிருந்து பங்களாதேஷ் அணிக்காக மூன்றாம் இலக்கத் துடுப்பாட்டவீரராக 23 போட்டிகளில் 58.58 என்கிற சராசரியுடன் 1,177 ஓட்டங்களை குவித்திருப்பது குறிப்பிடத்தக்கது. 

இந்திய அணியின் பயிற்சியாளரா்கும் ராகுல் டிராவிட்?

அதேநேரம், பந்துவீச்சிலும் அசத்தலாக செயற்படுகின்ற சகீப் அல் ஹசன், எந்த இடத்திலும் துடுப்பாடும் ஆற்றலைக் கொண்டிருப்பதாக பங்களாதேஷ் ஒருநாள் அணித்தலைவர் தமிம் இக்பால் கூறியிருப்பதோடு அவருக்கான முழுச் சுதந்திரம் அணியில் வழங்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்திருக்கின்றார். 

இதேவேளை, இலங்கை – பங்களாதேஷ் அணிகள் பங்கெடுக்கின்ற மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் இம்மாதம் 23ஆம் திகதி டாக்காவில் ஆரம்பமாகின்றது. 

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க…