காலையில் மணி அடித்த சங்கா மாலையில் அரைச்சதம் அடித்தார்

8213
kumar sangakkara,

இங்கிலாந்தில் உள்ளூரில் நடைபெறும் நெட்வெஸ்ட் டி20 ப்ளாஸ்ட் கிண்ணத்தில் இலங்கை அணியின் நட்சத்திர இடது கைத் துடுப்பாட்ட வீரர் குமார் சங்கக்கார சரே அணிக்காக விளையாடி வருவது பலருக்குத் தெரிந்த விடயம்.

இந்தத் தொடரின் நேற்று நடைபெற்ற தெற்கு குழுவிற்கான போட்டியில் சரே அணியை ஹாம்சயர் அணி எதிர்த்து விளையாடியது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற சரே அணி முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது.

லோர்ட்ஸ் மைதானத்தில் மணியடித்தார் சங்கா

போட்டியின் சுருக்கம்

சரே அணி 188/5(20)
குமார் சங்கக்கார 72
டொமினிக் சிப்லெ 67
ரொறி பேர்ன்ஸ் 16*
டெரன் சமி 27/2

இலங்கை அணியின் குமார் சங்கக்கார வெறுமனே 39 நிமிடங்கள் மைதானத்தில் நிலைத்தாடி 35 பந்துகளில் 9 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கலாக 72 ஓட்டங்களை விளாசி இருந்தார். அவரது ஸ்ட்ரைக் ரேட் 205.71 ஆகக் காணப்பட்டது.

ஹாம்சயர் அணி 108/10 (16.3)
லெவிஸ் மெக்மனஸ் 41
கரெத் என்ட்ரு 31
டுவயின் ப்ராவோ 3/2
ரவி ராம்போல் 21/2
டொமினிக் சிப்லெ 33/2

சரே அணிக்கு 80 ஓட்டங்களால் அபார வெற்றி

இந்த போட்டியின் ஆட்ட நாயகனாக துடுப்பாட்டத்தில் 67 ஓட்டங்களையும் பந்துவீச்சில் 2 விக்கட்டுகளையும் கைப்பற்றிய சரே அணியின் டொமினிக் சிப்லெ தெரிவு செய்யப்பட்டார்.

மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்