பிக் பேஷ் லீக்கில் முதன் முறையாக விளையாடவுள்ள நேபாள வீரர்

142
Sandeep Lamichhane ‏twitter

அவுஸ்திரேலியாவில் இவ்வருட இறுதியில் ஆரம்பமாகவுள்ள பிக் பேஷ் தொடரில், நேபாள கிரிக்கெட் அணியைச் சேர்ந்த இளம் இடதுகை சுழற்பந்து வீச்சாளர் சந்தீப் லெமைச்சேன், மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட்டுடன் ஹேரத் ஓய்வு

இலங்கை கிரிக்கெட்டுக்காக பாரிய சேவையாற்றிய ………

பதினெட்டு வயதான சந்தீப் லெமைச்சேன் கடந்த ஜனவரி மாதம் இந்தியன் ப்ரீமியர் லீக் தொடரில் (.பி.எல்.) டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டார். அத்துடன் .பி.எல். தொடரில் விளையாடும் முதல் நேபாள வீரர் என்ற பெருமையையும் பெற்றிருந்தார்.

இதனைத் தொடர்ந்து உலகின் பல்வேறு நாடுகளிலும் நடைபெறும் T20 லீக் தொடர்களில் விளையாடும் வாய்ப்பு சந்தீப் லெமைச்சேனுக்கு கிட்டியிருந்தது. அதன்படி கரீபியன் ப்ரீமியர் லீக், பங்களாதேஷ் ப்ரீமியர் லீக், கனடா குளோபல் T20 லீக் என்பவற்றில் விளையாடி, தற்போது பிக் பேஷ் லீக்கில் விளையாடவுள்ளார்.

மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணிக்காக விளையாடவுள்ள லெமைச்சேன், எதிர்வரும் டிசம்பர் மாதம் 10ம் திகதி அணியுடன் இணையவுள்ளார். எனினும் அதன் பின்னர் ஜனவரி 5ம் திகதி ஆரம்பமாகவுள்ள பங்களாதேஷ் ப்ரீமியர் லீக் தொடரில் விளையாடவுள்ள இவர், குறித்த தொடர் நிறைவடைந்த பின்னர் மிகுதி போட்டிகளுக்காக மீண்டும் அவுஸ்திரேலியா செல்லவுள்ளார்.

சந்தீப் லெமைச்சேனின் வருகை குறித்து மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி முகாமையாளர் குறிப்பிடுகையில்,

மலேசியாவில் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்டோர் ஆசிய சம்பியன்ஷிப் தொடரில் சந்தீப் விளையாடியதை நான் முதன்முறையாக பார்த்தேன். அவரது மணிக்கட்டு சுழற்பந்து வீச்சு மற்றும் அவரது உத்வேகம் என்பன என்னை உடனடியாக ஈர்த்தது.  அதுமாத்திரமின்றி அவரின் .பி.எல். அறிமுகம் மற்றும் கரீபியன் ப்ரீமியர் லீக்கில் பந்து வீசியமை அவர் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்தது.  குறித்த தொடர்களில் போன்று எமது அணிக்காகவும் அவர் சிறப்பாக விளையாடுவார் என எதிர்பார்க்கிறேன் என்றார்.

இலங்கை T20 அணியின் தலைவராக மீண்டும் திசர பெரேரா

இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெறவுள்ள ஒரு போட்டி …….

பிக் பேஷ் லீக் தொடருக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள சந்தீப் லெமைச்சேன், இந்த தொடரில் இணையவுள்ள ஐசிசி உறுப்பு நாடுகளைச் சேர்ந்த முதல் வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார். கடந்த வருடம் சுழற்பந்து வீச்சாளர் ரஷீட் கான் பிக் பேஷ் லீக்கில் விளையாடியிருந்தார். எனினும் இவர் விளையாடவிருந்த காலப்பகுதியில் ஆப்கானிஸ்தான் அணிக்கு ஐசிசியின் முழு அங்கத்துவ அந்தஸ்து வழங்கப்பட்டிருந்தது.

இதேவேளை, ஆப்கானிஸ்தான் அணியின் மற்றுமொரு சுழற்பந்து வீச்சாளரான முஜீப் உர் ரஹ்மான், பிக் பேஷ் லீக்கில் பிரிஸ்பேன் ஹீட் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். பிக் பேஷ் லீக் தொடரின் அடுத்த பருவகால போட்டிகள் எதிர்வரும் டிசம்பர் 19ம் திகதி முதல் பெப்ரவரி 19ம் திகதிவரை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<