ஆஸி. பாரா மெய்வல்லுனரில் தினேஷ், சமித்தவுக்கு பதக்கம்

144

அவுஸ்திரேலியாவில் நடைபெற்று வருகின்ற அவுஸ்திரேலிய பகிரங்க பாரா மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரில் ஆண்களுக்கான ஈட்டி எறிதல் பங்குகொண்ட தினேஷ் பிரியன்த தங்கப் பதக்கத்தையும், சமித்த துலான் வெள்ளிப் பதக்கத்தையும் சுவீகரித்துள்ளனர்.

அவுஸ்திரேலிய பாரா சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள அவுஸ்திரேலிய பகிரங்க மற்றும் 20 வயதின் கீழ் பாரா மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடர் இன்று (31) பிரிஸ்பேனில் ஆரம்பமாகியது.

இதில் ஆண்களுக்கான F46 ஈட்டி எறிதல் போட்டியில் இலங்கை சார்பில் போட்டியிட்ட தினேஷ் பிரயன்த ஹேரத், 63.18 மீட்டர் தூரத்தை எறிந்து தங்கப் பதக்கம் வென்றார்.

இறுதியாக அவர் 2020 டோக்கியோ பாராலிம்பில் இதே போட்டிப் பிரிவில் 67.79 மீட்டர் தூரத்தை எறிந்து புதிய உலக சாதனையுடன் தங்கப் பதக்கம் வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஆஸி. பாரா மெய்வல்லுனரில் இலங்கையிலிருந்து மூவர்

இதனிடையே, அதே போட்டியில் F44 பிரிவில் பங்குகொண்ட சமித்த துலான் வெள்ளிப் பதக்கம் வென்றார். போட்டியில் அவர் 64.20 மீட்டர் தூரத்தைப் பதிவு செய்தார். இவரும் 2020 டோக்கியோ பாராலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்று நாட்டிற்கு பெருமை சேர்த்தார்.

>>மேலும் பல மெய்வல்லுனர் செய்திகளைப் படிக்க<<